(Reading time: 9 - 17 minutes)

24. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ரயூ… நீ நிஜமாவே தான் சொல்லுறீயா?...”

அவளின் தந்தை அவளிடம் வினவ,

“ஆமாப்பா… நான் அவரோட ஊருக்கு கிளம்புறேன்…” என்றாள் சற்றும் தாமதிக்காமல்…

அதன் பிறகு அவர் மகளிடம் எந்த கேள்வியையும் கேட்கவில்லை….

“பூஜா, பிரேமி…”

சரயூ சத்தமிட்டு அழைக்க, அவர்கள் இருவரும் அவளருகே வந்தனர்…

“அம்மா… அப்பாவை ஊருக்கு போக வேண்டாம்னு சொல்லுங்கம்மா…”

பூஜா கெஞ்சினாள் தாயிடம்…

“நாமளும் அப்பாவோட போகலாம்மா… ஐ மிஸ் ஹிம்…”

சொல்லும்போதே பிரேமிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது…

மகளின் அருகே குனிந்து, அவள் முகத்தினை தன் முந்தானையால் துடைத்துவிட்டு,

“அப்பா தனியா போகலை… நாமளும் போறோம்… இப்போ சந்தோஷமா?...” எனக்கேட்க,

இருவரும் அவளின் கால்களை கட்டிக்கொண்டனர் ஆசையாக….

பின்னர் தாயிடமும், தகப்பனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, அர்னவினை அழைத்தாள்…

“என்னைப் பத்தி கவலைப்படாத… இனியாவது நல்லபடியா சாப்பிட்டு தூங்கு… சரியா?...”

“நீங்களும் சிஸ்…”

பட்டென்று வந்தது அவன் பதிலும்…

லேசாக புன்னகைத்தவள், “ஜானவிகிட்ட சொல்லிடுடா… அப்புறம் நானே அவளுக்கு சீக்கிரம் போன் பண்ணுவேன்னும் சொல்லிடு…” என்றதும் சரி என்றான் அர்னவும்…

“சரி சிஸ்… நீங்க பார்த்து போயிட்டு வாங்க… அங்க போனதும் போன் பண்ணுங்க…”

“சரிடா… நீ உடம்ப பார்த்துக்கோ… அப்பா அம்மாவ பார்த்துக்கோ…”

சொல்லிவிட்டு, தமையன் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே சென்றாள் சரயூ…

சில மணி நேர பயணத்திற்குப் பிறகு, கார் திலீப் வீட்டின் வாசல் முன் வந்து நின்றது….

தூங்கிக்கொண்டிருந்த பிரேமியை தூக்கி தன் தோள்களில் சாய்த்தவண்ணம் அவன் இறங்க, பூஜாவின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் சண்முகம்…

காரிலிருந்து இறங்கிய சாயூ, அப்படியே நிற்க… அவளின் நிலை கண்டு, வா என்று அழைத்தான் திலீப்….

“வா சரயூ….” என அவன் மீண்டும் அழைக்க, அவள் அசையவில்லை…

“எனக்குப் புரியுது…. என்னை மன்னிச்சிடு….” என்றவன் தன் கரம் கொண்டு அவள்கரம் பற்ற, சட்டென்று அதனை உதறினாள் அவள்…

அவன் அதிர்ச்சியோடு பார்க்கும்போதே, விறுவிறுவென்று நடந்து வீட்டின் வாசலை அடைந்தாள் அவள்..

அங்கும் அவளின் தயக்கம் எதிரொலிக்க,

“உள்ள வாங்க அண்ணி… இது உங்க வீடு…. உங்க வீட்டுக்குள்ள வர ஏன் இத்தனை தயக்கம்?...”

திலீப்பின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது…

“உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்க காரணமா இருந்தவங்க இப்போ இந்த வீட்டுல இல்ல… அண்ணன் அவங்களை வேலையை விட்டு நிறுத்திட்டார்…. அதனால யோசிக்காம உள்ள வாங்க…”

அவன் சொன்னதும் திலீப்பின் பக்கம் ஓர் பார்வையை வீசினாள் அவள்…

அவன் தலை தானாகவே குனிய, அவள் விரக்தி புன்னகையுடன் அவனிடமிருந்து பார்வையை விலக்கிவிட்டு, வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் மெல்ல…

“உட்காருங்க அண்ணி….” என்றவன் அவள் பருகுவதற்கு தண்ணீர் கொடுக்க, அவள் வேண்டாமென்றாள்…

“குடிங்க அண்ணி…. சாதாரண தண்ணி தான?....”

“நீங்க எதுக்கு கஷ்டப்படுறீங்க?...”

“இதுல என்ன அண்ணி கஷ்டம்… என் அண்ணி எனக்கு அம்மா மாதிரி… அம்மாக்கு செய்ய எந்த புள்ளைக்கு கசக்கும்?...”

“அதுகூட விஷமமா தான் தென்படும் ஒரு சிலர் பார்வைக்கு….”

கன்னத்தில் பளாரென்று அடிவாங்கியது போல் இருந்தது திலீப்பிற்கு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.