(Reading time: 10 - 20 minutes)

17. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

மிதுன் சொன்னபடி மறுவாரம் அவனுடைய அலுவலகத்துக்கு சென்றாள் மகிமா... அவளுக்காக அலுவலக வெளியிலயே ஆவலாக காத்திருந்த மிதுன்க்கு மறுபடியும் பலப் தான். மகிமாவோடு வருணும் வந்து இருந்தான்.

யோசனையோடு வருணை பார்க்க, அவனோ சிரித்தபடி “ஹலோ மிதுன் சார்..” என்றான்.

“ஹாய் வருண் .. என்ன நீ இங்கே வந்துருக்க.. ? நம்ம டீம் எல்லாம் இன்னிக்கு redhills சைடு போறதா தானே பிளான்.. “

“ஆமாம் சார்.. ஆனால் காலையிலே மகிமா இங்கே வருவதற்கு கிளம்பினாள்.. அப்போதான் தோணிச்சு .. நீங்க இங்கே இவள receive பண்ண வந்து இருப்பீங்கன்னு..  மகிமாவும் கொஞ்சம் தயங்கின மாதிரி இருந்தது.. நானும் உங்க அட்வேர்டிசிங் ஆபீஸ்க்கு தானே வந்து இருந்தேன்..  இந்த ஆபீஸ் வந்து பார்த்துட்டு, மகிமாவிற்கும் துணைக்கு வந்த மாதிரி இருக்கும்நு நினச்சேன்.  அப்படியே உங்க கூட போகலாம்ன்னு வந்துட்டேன்.. “

மிதுன் வெறுமனே “ஓஹோ..” என்றான். அவன் எண்ணியது மகிமாவை இங்கே எல்லோருக்கும் அறிமுகபடுத்தி விட்டு அப்படியே அவளுக்கு என்ன வேலைன்னு சொல்லி கொடுக்கிற மாதிரி இன்றைக்கு இங்கேயே இருந்துடலாம்.. அப்படியே அவள் வாரா வாரம் வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான்.

மனசுக்குள் வருணை தாளித்தான் .. நல்ல நேரம் பார்த்தான்.. ஆபீஸ் பார்க்க.. ஏன் இங்கேயும் அதே சுவர், பேன் , லைட் , டேபிள் இதுதானே இருக்கும். இத பார்க்க மெனக்கட்டு வரணுமா... இப்போ நான் கிளம்பினாத்தான் இவனும் வருவான்.. கடவுளே.. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.. ? என்று புலம்பினான்.

வெளியில் சிரித்தபடி “ஓகே.. வாங்க உள்ளே போகலாம்..” என்று இருவரையும் அழைத்து சென்றான்.

அங்கே கிட்டத்தட்ட ஒரு ஆறு , ஏழு பெண்கள் இருந்தனர்.  கிட்டத்தட்ட எல்லோருமே காலேஜ் படிக்கும் பெண்கள் போல் இருந்தனர். வருணும் , மகிமாவும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அங்கிருந்த ஒரு பெண்ணை “வர்ஷா” என்று அழைத்தான்..

“சொல்லுங்க அண்ணா” என்று வந்தாள்

“வர்ஷா .. இவங்க மகிமா.. நம்ம டிரஸ்ட்க்கு புது volunteer .. உங்களோட சேர்த்துக்கங்க.. “ என்று அறிமுகபடுத்தினான்..

“ஹாய்.. அக்கா” என்று வர்ஷா அழைக்கவும்,

ஐயோ என்று மனதிற்குள் ஜெர்க் ஆன மிதுன் ஏதோ சொல்ல வரும்முன், மகிமாவே ‘ஹேய்.. இந்த அக்கா.. சொக்கா எல்லாம் உங்க அண்ணனோட வச்சுக்கோ.. நான் எல்லாம் எப்பவும் யூத் தான். சோ கால் மீ மகிமா.. “

“ஓகே.. மகி.. “ என்றாள்.. அவள் சொல்லும்போதே தன் அண்ணனின் முக மாறுதல்களை கவனித்து இருந்தாள். மிதுனிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவளாக

“மகி.. வாங்க போகலாம்..” என்றாள்.

“வர்ஷு.. எல்லோர் schedule போடுற வேலை மகிக்கு கொடு.. நீ மத்த volunteer வேலைய சரி பார்த்து ரிப்போர்ட் இவங்களுக்கு அனுப்பு.. மகிமா நீங்க அந்த ரிப்போர்ட் செக் செய்து எனக்கு forward பண்ணிடுங்க... என் மெயில் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வர்ஷா கிட்ட வாங்கிக்கங்க.. “ என்று முடித்தான்..

“ஓகே..சார்.. “ என்றாள் மகி..

“ஹேய்.. சார் எல்லாம் வேண்டாம்.. ஜஸ்ட் கால் மிதுன்... “ என்றான்..

வர்ஷா இது எல்லாவற்றையும் குறு குறு என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்..

மகி, வர்ஷா உள்ளே செல்ல எத்தனிக்க, இப்போ வருண் குரல் ஒலித்தது..

“மிதுன் சார்... என்னை எல்லாம் intro கொடுக்க மாட்டீங்களா...?” என்று கேட்க,

“ஹேய்.. சாரி வருண்.. வர்ஷு .. இவர் வருண்.. இவரும் ஒரு volunteer தான்.. மகிமாவோட friend கூட.. “ என்று அறிமுகபடுத்தியவன், “வருண் இவ வர்ஷா.. இந்த NGO ஸ்டார்ட் பண்ணும்போது ஆரம்பிச்சு இங்கே இருக்கா.. “ என்று முடித்தான்..

“ஹலோ வர்ஷா.. உங்களை மீட் பண்ணினது ரொம்ப ஹாப்பி..”

“ஓஹோ.. சரி ..” என்று மட்டும் சொல்லி விட்டு உள்ளே திரும்பி விட்டாள். அவளிடம் மீண்டும் ஏதோ பேச வந்தவன்,

மிதுன் “வா.. வருண் கிளம்பலாம்.. “ என்று கூறவே ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டான்..

மிதுனோடு காரில் போகும் போது “மிதுன் சார்.. வர்ஷா உங்கள அண்ணன்னு கூப்பிட்டாங்களே.. ? உங்க சிஸ்டர் ஆ சார்?” என்று ஆர்வமாக வினவினான்.

மிதுன் நினைவு முழுதும் மகிமாவே இருந்ததால்.. வருணின் ஆர்வம் அவனுக்கு தெரியவில்லை .. அவன் தன் போக்கில் “ஆமாம்.. வருண்.. வர்ஷா என்னோட cousin .. “

“ஒத்.. அவங்க என்ன பண்றாங்க சார்.. ?” என்று மெதுவாக வலை விரித்தான்..

“ஹ்ம்ம்.. அவள் B.com ..ஸ்டெல்லா மேரி காலேஜ் லே படிக்கிறாள்..”  என்று தன் போக்கில் சொல்லி கொண்டிருந்தான்..

வருண் எல்லா கேள்விகளும் ஒன்றாக கேட்காமல் பேச்சை திசை திருப்பி , இடையே இடையே வர்ஷா பற்றிய விவரங்கள் வாங்கி கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.