(Reading time: 12 - 24 minutes)

05. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

சுட்டெரிக்கும் அக்னியில் பனிமழை நீ!!!

Marbil oorum uyire

த்திரமா போய் சேர்ந்திருவீங்கல்ல” நூற்றி ஐந்தாவது முறையாக கணவர் கேட்கவும் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்த சுசீலா திரும்பி அவரை முறைத்தார்.

"என்னங்க நீங்க இதுக்கு முன்னாடி நான் சித்துவோட தனியா மெட்ராஸுக்குப் போனதே இல்லையா"

"அப்போ வேற சுசீ,  இப்போ வயித்துல பாப்பா இருக்காளே"

சுசீலா ஏழு மாதம் கர்ப்பமாக தன் இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டிருந்தார்.

"அதெல்லாம் நான் கவனமா இருப்பேன். உங்களுக்கு இவ்வளவு அக்கறையா இருந்தா ஜெர்மன் ட்ரிப் போகாம கூட வாங்க"

"என்ன சுசி புரியாம பேசுற. பி.எம் அசைன்மென்ட் கிடைச்சது எவ்ளோ பெரிய விஷயம். பாஸ்கர் சார் மூர்த்தி போகட்டும்னு ஸ்பெஷலா ரெகமண்ட் பண்ணிருக்கார்"

"கூட வர முடியாதுல்ல. அப்போ ஒழுங்கா சந்தோஷமா வந்து ட்ரெயின் ஏத்தி விடுற வழிய பாருங்க"

"சரி பத்மாகிட்ட சொல்லி புரிய வை. குழந்தையை பார்க்க அண்ணா வரலைன்னு கோச்சுக்க போறா"

இடுப்பில் இரு கைகளையும் வைத்து கணவரை முறைத்தார் சுசீலா.

"உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரில. என்னிக்காவது பத்மா அப்படி சொல்வாளா"

"சரி நான் வந்ததுமே நேர மெட்ராஸ் வந்திடுறேன்"

"சித்து எங்க கெளம்பிட்டான இல்லையா...சித்து"

“அம்மா… காவ்யாக்கு வாட்டர் கலர்ஸ்” சித்தார்த் ஒரு பாக்ஸ் எடுத்து வந்து நீட்டினான்.

.கிருஷ்ணமூர்த்தியின் ஒரே தங்கை பத்மா திருமணமாகி சென்னையில் வசித்து வந்தார். அவரது மகள் காவ்யா சித்தார்த்தை விட ஆறு மாதங்கள் இளையவள். இப்போது காவ்யாவிற்குத் தம்பி பிறந்திருக்கிறான்.

ஏற்கனவே மகளுக்கு உதவியாக இருக்கவென லலிதாம்பிகை மூன்று மாதங்களுக்கு முன்பே சென்னை சென்று விட்டார். சித்தார்த்துக்கு வின்டர் வெகேஷன் ஆரம்பம் ஆகி விடவே சுசீலா மகனுடன் புறப்பட்டு விட்டார்.

தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் பர்ஸ்ட் கிளாசில் மனைவி மகனை அமர வைத்து விட்டு அந்த வகுப்புக்கு உரிய டிடிஆரை தேடிச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி.

"சுசி டி டி கிட்ட சொல்லிருக்கேன்..ஏதாச்சும் வேணும்னா அவர்கிட்ட கேளு"

"சரிங்க அதெல்லாம் நான் பார்த்துகிறேன்"

"சித்து கண்ணா அம்மாவை தொல்லை பண்ணாம சமத்தா இருக்கனும் என்ன"

"சரிப்பா"

கிருஷ்ணமூர்த்தி விடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே “இதோ இந்த சீட் தான்” என இரு சிறுவர்கள் இவர்களின் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தனர்.

"பார்த்து பத்திரமா போகணும்" அந்த சிறுவர்களின் தந்தை போலும் அவர்களிடமும் அவர்களின் தாயிடமும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க அந்த பெண்மணி சற்று சங்கோஜமாக சுசீலாவை பார்க்க சுசீலா சினேகமாக புன்னகைத்தார்.

"சரி நீங்க கிளம்புங்க...கம்பெனிக்கு இவங்க இருக்காங்களே" சுசீலா சொல்லவும் கிருஷ்ணமூர்த்தி நிம்மதியாக புறப்பட்டார்.

சென்னை பயணம் என்றாலே சித்தார்த்துக்கு எப்போவும் கொள்ளை பிரியம்

"மாமா எப்போ பீச்சுக்கு போலாம்” ஸ்டேஷனில் இருந்து தங்களை அழைத்துப் போக வந்திருந்த அத்தைக் கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"சாயங்காலம்   அழைச்சுட்டு   போறேன்...இப்போ  வீட்டுக்கு  போய் குளிச்சிட்டு  சாப்பிட்டு குட்டி  தம்பி கூட விளையாடுவீங்களாம்" சித்தார்த் சரி என தலையை ஆட்ட," பிரயாணம் எல்லாம் சிரமமா இல்லையே" என சுசீலாவிடம் கேட்டார். 

"சிரமம் எல்லாம் ஒண்ணுமில்ல அண்ணா. கூட ஒரு பேமிலி  இருந்ததால நேரம் போனதும் தெரியல "

"பத்மா ரொம்ப ஆசையா எதிர்பார்த்துட்டு இருக்கா "

"சித்துக்கு எக்ஸாம் இருந்ததே...இல்லைனா குழந்தை பிறந்த போதே வந்திருப்போம்"

"அதுனால என்னம்மா" ராமசந்திரன் கூறவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த லலிதாம்பிகை மருமகளும் பேரனும் வந்ததும் ஓடிச்  சென்று அணைத்துக் கொண்டார். சித்து தனது பாட்டியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். பேரனுக்கு நிறைந்த ஆசி வழங்கி  ஆசையாக முத்தமிட்டார் .

"சுசி நல்லாயிருக்கியாடா"

"சௌக்கியமா இருக்கேன் மா"

"அண்ணி வாங்க சித்து கண்ணா .குட்டி தம்பிய பார்க்க வந்தீங்களா" அறையில் குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்த பத்மா அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

"நல்லா இருக்கோம் பத்மா...எங்க என் மருமகளை காணோம்" காவ்யாவை தேடினார் சுசீலா.

"அவ மாடி ரூம்ல இருக்கா அண்ணி"

"சரி நீங்க குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க மொதல்ல" லலிதாம்பிகை மருமகளையும் பேரனையும் அவர்கள் தங்கவிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.