(Reading time: 19 - 38 minutes)

04. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

Penne en mel pizhai

விழையாவிற்கு சிறிதுநாளாகவே தங்களை யாரோ பின் தொடர்வதுபோல் ஒரு உறுத்தல் இருந்துகொண்டேடே இருந்தது.

அவள் தன் தோழி வனிதாவிடம் கூறினாள், “வனித்தா, நம் பின்னால் ஒரு கறுப்புநிற கார் வருதுபார் என்றாள்’’. வனிதா பார்த்துவிட்டு, ஆமாம்! சூப்பரா பளபளக்குதுல. பார்க்க பிளைட் மாதிரி இருக்கு. அது மாதிரி காரையெல்லாம் நம்மால் பார்க்கத்தான் முடியும் என்றாள்.

அவளது பதிலில் கடுப்பான கவி, நான் உன்னிடம் அக்காரின் அழகைபற்றி கேட்டேனா? என்றாள்.

உடனே வனித்தா நீதானடீ அந்த காரை பார்க்கச்சொன்ன என்றாள்.

அதற்கு கவி, கொஞ்சநாளாகவே நாம் போகிற இடமெல்லாம் இந்தக்கார் என் ஸ்கூட்டியை பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதை நீ கவனித்தாயா? என்று கேட்கத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன், அக்காரின் அழகை வர்ணிக்க இல்லை என்றாள்.

அதற்கு நாம் தினமும் இந்த பாதையில்தான் கல்லூரி போகிறோம். அந்த கார்காரனின் கம்பெனியும் நம் கல்லூரி போகும் பாதையில் இருக்கலாம். அவனின் வேலைநேரம் நம் கல்லூரியின் நேரத்தை ஒத்து இருக்கலாம் அதனால் நாம் வீட்டிற்கு திரும்பும்போது அக்காரும் இந்த ரூட்டில் வந்து இருக்கலாம், இதை வைத்து அக்கார் நம்மை பின்தொடர்வதாக நீ நினைக்கலாமா? என்று வனி கேட்டாள்.

அதற்கு கவிழையா, இந்த ரோட்டில் மட்டும் என்றாள் நீ சொல்வது சரி. ஆனால், நாம் இரண்டு பேரும் வாரம் இரண்டுதடவை போகும் லைப்ரரி பாதையிலும் வெள்ளிகிழமையன்று போகும் பெருமாள்கோவில் பாதையிலும் இக்கார் நம்மை பின்தொடர்கிறது என்றாள்.

அதை கேட்டதும் வனித்தா நீ சொல்வதைப் பார்த்தால் யோசிக்கக்கூடிய விசயமாகத்தான் இருக்கு. ஆனால், இன்றுடன் நம் கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடப்போகிறது. நாம் வெளியில் போகும்பாதை எல்லாம் இனி மாறப்போகிறது என்றாள். அதனால் இதைபற்றி ரொம்ப யோசிப்பதை விட்டுவிட்டு அடுத்தவாரம் நீ வேலையில் சேரப்போவதை பற்றியும் நான் எனக்கு வேலைகிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைபற்றியும் யோசிப்போம் என்றாள்.

வனித்தா அவள் கவனத்தை மாற்றியதால், கவி வனித்தவிடம், “நான் வேலையில் சேருவதற்கு முன்னால் அதற்கேற்றவாறு கொஞ்சம் உடை வாங்கவேண்டும் என்றாள்”.

அதனை கேட்ட வனி, எனக்கு பிறந்தநாள் உடை எடுத்த கடைக்குச் சென்று பார்போம் . அங்கு செலக்டிவ் கலெக்செனாக நம்மால் வாங்கக்கூடிய விலையில் இருந்தது என்றாள்.

அதற்கு கவிழையா, அப்போது தள்ளுபடி போட்டு இருந்தார்கள் அதனால் அது போன்ற கடையில் வாங்க முடிந்தது. இல்லையேல் அதுபோன்ற மாலில் உள்ள கடைகளை சும்மா சுற்றிபார்க்கத்தான் முடியும். மற்றநாளில் அங்கு விற்கும் பொருளின் விலையைக் கேட்டால் நமக்கு மயக்கந்தான் வரும் என்றாள் கவி .

அதற்கு வணி, நான் நாளைக்கு மதியம் சாப்பாடு முடிந்து உன் வீட்டிற்கு வருவேன் நீ கிளம்பியிருக்கிறாய். நாம் போய் அந்தக்கடையில் உடை வாங்கத்தான் போகிறோம், என்று கூறிக்கோண்டு வரும் போதே வனித்தாவின் வீடு வந்துவிட்டது. அங்கே அவளை இறக்கிவிட்டு அடுத்த தெருவில் உள்ள தன் வீட்டிற்கு சென்றாள் கவிழையா.

கவிழையா தன் வீட்டு வாசலில் தன் ஸ்கூட்டியை விட்டு இறங்கும்போது அத்தெருவில் இரண்டு தடியன்கள் கடப்பதை கவனித்தாள்.

சிறிது நாட்களாக அவர்கள் அந்த தெருவையே சுற்றி சுற்றி வருவதாக அவளுக்கு தோன்றியது. தன் தலையை உலுக்கி ‘சே’ எல்லாம் நம் பிரம்மை. நம்மை வேவு பார்க்க நம்ம என்ன பெரிய வி. ஐ. பி யா என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

ஆனால் அவள் அறியவில்லை. “எவனோ ஒருவன் கவிழையாவின் அனைத்து நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டான் என்பதை.”

மறுநாள், வனிதா சொன்னது போலவே கவி வீட்டிற்கு வந்துவிட்டாள். கவிழையா அப்பொழுதுதான் சாப்பிட்டுகொண்டிருந்தாள் .

வா வனிதா! என்ற பார்வதி, நீயும் கொஞ்சம் சாப்பிடு என்று சொன்னாள் .

நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் ஆண்டி, இருந்தாலும் உங்கள் கைப்பக்குவம் என் அம்மாவிற்கு வராது ஆண்டி, அதனால் இப்போது கொஞ்சமாக கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சாப்பிட மேசையில் அமர்ந்தாள்.

அதனை பார்த்த கவிழையா சிரித்துக்கொண்டே, அப்பபோ உங்கள் வீட்டில் சாப்பிட்டது! என்று கேட்டாள் .

அதற்கு, “அப்ப சாப்பிட்டது பசிக்கு”. “இப்ப சாப்பிடுவது ருசிக்கு.” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினாள்.

அப்பொழுது பார்வதி, “ஏம்மா இந்த கொளுத்தும் வெயிலில் உடைஎடுக்க போகனுமா” அப்பாகூட சாயங்காலம் போகலாமே என்றுகூறினார்.

அதற்கு கவி, அம்மா நான் எடுக்கும் உடை பற்றி அப்பாவிற்கு அபிப்ராயம் சொல்லத் தெரியாது. அதற்கு வனிதா தான் சரி. நீங்கள் பெண்கள் மட்டும் ஆறு மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அதனால், இப்பொழுதே போய் வந்துவிடுகிறோம் என்று கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.