(Reading time: 7 - 13 minutes)

09.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி 

Love

ன்னுயிருக்கு உயிரானவளே,

எண்ணிலடங்கா நேரங்களில் உன்

எண்ணங்களை உதாசினப்படுத்தினேன்!

காதலுடன் நீ நெருங்கிய போதெல்லாம்

காணல் நீராய் மாறி உன்

கண்ணீருக்கு காரணமாகினேன்!

எத்தனை நாட்கள் மௌனமாய் அழுதாயோ?

அதற்கு ஈடு கட்டிடும்படி நான் கதறி அழுகிறேனடீ!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

 

மரணத்தையாவது வரமாய் தந்திடு காதலியே

உன்னை பிரிந்து உலகம் வாழ்ந்து

என்ன சுகம் கண்டுவிட போகிறேன்?

நடைப்பினமாய் நரகவேதனை அனுபவிக்க வேண்டுமா?

காதலை ஏற்காமல் போனதற்குத்தான்

இப்படி தோற்க போகிறேனா?

கண்ணீருடன் புலம்பினான் தெய்வீகன்.!

 

இன்னும் சில நிமிடங்களில்

தூயவிழிக்கு ஆத்மஷாந்தி பூஜையாம்!

அவனின்றி அவள் ஆத்மா எங்ஙனம் சாந்தி அடையும்?

இணைத்து வைப்பதற்கு ஒரு சக்தி கூடவா இல்லை?

 

பெரியவரின் மந்திர கட்டுப்பாட்டிற்குள்

குடியிருந்தாள் தூயவிழி!

தெய்வீகனின் கதறல் கேட்டு

கலங்கியதே இருவிழி!

 

ஆயிரம் வழிப்பாடுகளாம்,

பல்லாயிரம் தெய்வங்களாம்!

ஒரு தெய்வத்திற்கும் காதல் மொழி புரியவில்லை..!

மரணம் என்ற கூரிய வாள் ,

வற்றாத நதியை வெட்டிடுமா?

 

கருமை சூழ்ந்த வானை

வெறுமையுடன் நோக்கினான் காதலனவன்.

அவன் கவனத்தை உடைத்தார்

அந்த கணீர் குரல் பெரியவர்.

“தம்பி, அந்த பொண்ணுடைய புடவையை கொடுப்பா?”

 

ஒற்றை கேள்வியில்

முற்றிலும் நடுங்கினான்!

“எ..எந்த புடவை? எனக்கு தெரியாது!”

“உனக்கு தெரியும்!நல்லாவே தெரியும்!என் கிட்ட பொய் சொல்லாதே!

அந்த புடவையை எரிக்கணும்..கொண்டு வா!”

 

அதட்டும் குரல், அதில்

அதிகமாய் ஆதிக்கம்!

முதன்முறையாய் தெய்வீகனுக்குள் நடுக்கம்!

 

அந்த புடவை,

தூயவிழியின் இரத்தம் படிந்த புடவை!

கடைசியாய் அவள் அணிந்த புடவை! அது

மருத்துவமனையிலிருந்து அவன் கைக்கு வந்த ரகசியம்,

அவனுக்கு மட்டுமே தெரிந்த நிதர்சனம்!

 

அக்னி தீயின் எதிரில் தெய்வீகன்!

ஆத்மசாந்தி பூஜையின் இறுதி கட்டம்!

அவள் புடவையை அவனே தீயில் போட வேண்டுமாம்!

புடவையுடன் சேர்ந்து தானும் எரிவதாய் தெய்வீகனின் தீர்மானம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.