(Reading time: 10 - 20 minutes)

18. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ருண் சொன்ன விதத்தில் என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் மிதுன் அழைத்தபோது அந்த அலுவலகம் சென்றாள் மகிமா... ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த வேலை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிலும் வர்ஷாவின் இயல்பான பேச்சு , குறும்பு இவை எல்லாம் அவளும் , சுராவும் அடித்த லூட்டிகளை நினைவு ஊட்டியது. 

அங்குள்ள வேலைகளை பற்றி வர்ஷா சொன்னவற்றை கவனமாக கேட்டவளுக்கு, அங்கே வேலை செய்வது மிகவும் சுவாரசியமாக தோன்ற ஆரம்பித்தது. அதில் சில கேள்விகளை வர்ஷாவிடம் கேட்டதற்கு,

“மகி, உங்க டவுட் எல்லாம் நீங்க என் அண்ணன் கிட்டே கேட்டுக்கோங்க.. நமக்கு தெரிஞ்சுது இவ்ளோதான்.. நானே என்னோட கொஞ்சூண்டு மூளைலே நிறைய ஏத்திக்கிட்டு கஷ்டப்படறேன்... நீ.. சாரி நீங்க வேறே புதுசு புதுசா கேட்குறீங்களே..? இது நியாயமா, தர்மமா , இந்த உலகத்துக்கே அடுக்குமா?” என வசனம் பேச,

கலகலவென சிரித்த மகி “ ஹேய்.. என்னை நீ ன்னு friend மாதிரி பேசு..  அது இருக்கட்டும். கொஞ்சூண்டு மூளை உனக்கு இருக்கா.. அது எப்படி இருக்கும்.. என்ன சைஸ்.. ? நீயே சொன்னா அத நாங்க ஒத்துக்குவோமா? “ என்று வாரினாள்..

“ஹி.ஹி.. உன்கிட்ட இல்லையா.. ? இப்போதான்  எனக்கு நிம்மதியா இருக்கு... என்னைத்தான் கடவுள் டிபரென்ட் டிசைன் பண்ணிடாரோன்னு யோசிச்சேன்..”

“அடிங்க. “

“என் அண்ணன் நம்பர் ... இதுதான்... இன்னிக்கு அந்த டிரஸ்ட் வொர்க் முடிச்சுட்டு வீட்டுக்கு வர ஏழு மணிக்கு மேலே ஆகும்.. அதுக்கு அப்புறம் கால் பண்ணுங்க..” என்று கொடுக்கும்போது சரி என்று வாங்கி வைத்தாள். பிறகு அவர்கள் இருவரும் தங்களை பற்றி பேசினார்கள்.

நிறைய நாட்களுக்கு பிறகு மகிமாவிற்கு மனம் உற்சாகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவள், சுபத்ரா வீட்டிற்கு சென்று அங்கே கொஞ்ச நேரம் இருந்துவிட்டு , வருனையும் கலாயித்து விட்டு வந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இது பேய்க் காதல்" - காதல் கலந்த கவிதைத் தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

றுநாள் காலேஜ் செல்வதற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது போன் வர, தெரியாத எண்ணிலிருந்து என்பதால் யார் பேசுவது என்று கேட்டாள்.. அங்கே மிதுன் எனவும்,

“ஹலோ மிதுன்.. “

“ஹாய்.. மகிமா.. சாரி.. வேலையா இருந்தீங்களா ? disturb பண்ணிட்டேனா?

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மிதுன்.. நான் நாளைக்கு காலேஜ் போக ரெடி பண்ணிட்டு இருந்தேன்..”

“சரி.. இன்னிக்கு உங்களுக்கு எப்படி போச்சு? இங்கே உள்ள வேலை எல்லாம் பிடிச்சு இருக்கா ?”

“ஹேய். .என்ன நீங்க எல்லாம் சொல்ல வேணாம்.. எனக்கு அந்த வேலை எல்லாம் பிடிச்சு இருக்கு.. ரொம்ப ஹாப்பி இருக்கேன்..”

“சரி.. நீ ஏதோ கேட்டியாமே.. வர்ஷா கிட்ட... என்ன சொல்லு ?”

“ஹ்ம்ம்.. அது .. நான் சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.. ?”

“சொல்லும்மா... என்ன தயக்கம்..?”

“உங்க வேலைகள் எல்லாம் அப்படியே நீங்க schedule பண்ண சொல்லிருந்தீங்க.. எனக்கு ஐடியா என்னனா first ப்ரயொரிட்டி லிஸ்ட் எடுத்துட்டு அதுக்கு அப்புறம் schedule பிளான் பண்ணலாம்ன்னு ... ஆனால் உங்க கிட்ட பேசிட்டு பண்ணலாம்னு அப்படியே விட்டுட்டேன்..”

“சரி.. உனக்கு என்ன தோணுதோ அதை ஒரு ஐடியா பண்ணி நெக்ஸ்ட் வீக் எடுத்துட்டு வா.. இந்த ஒரு வாரம் வழக்கம் போலே பண்ணிடுவோம்.. “

“சரி.. “

“ஓகே மா.. குட் நைட்.. மகி “

“பாய்.. மிதுன் “ என்று வைத்தாள்.

மகிமா, மிதுன் சொன்ன வேலைய தனக்குள் யோசித்து அதை எப்படி செய்யலாம் என்று யோசிக்க, மிதுன் ஓரளவு மகிய நெருங்க வாய்ப்பு கிடைத்தது என்று மனதுக்குள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

வருணோ, வர்ஷாவின் நினைவாக இருந்தான்.. வர்ஷவோடு எப்படி மேலும் பழக என்று யோசித்தவண்ணம் இருந்தான். பிறகு மறுவாரம் மகிமாவோடு தானும் டிரஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

மிதுன், வருண் இருவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த சண்டே வர,

வருண் காலையிலேயே “ஹேய் கீமா .. என்ன இன்னும் ரெடி ஆகலியா?”

“டேய் என்னடா.. இன்னிக்கு சூரியன் உதிக்கும் திசை மேற்கு ..அப்படின்னு first ஸ்டாண்டர்ட் பாடம் நடத்தலாம் போலே இவ்ளோ சீக்கிரம் வந்து இருக்க..”

“கொத்து பரோட்டா.. உன்ன கொத்திடுவேன் பார்த்துக்கோ.. உன்னை கொண்டு அங்கே மிதுன் சார் ஆபீஸ்லே விட்டுட்டு என் வேலைய பார்க்க போகலாம்ன்னு நினைச்சா, என்னை நக்கலடிக்கிரே?”

“உன்னை நான் கூப்பிட்டேனா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.