(Reading time: 14 - 27 minutes)

னக்கு தெரியும் தீப்ஸ் நீ இப்படித்தான் சொல்லுவன்னு.. எனக்கு உன் மேலயும் சரி இல்ல இந்த வீட்டில் யாரு மேலயும் சரி துளியளவும் கோபம் இல்லை.. ஆனால் கடல் அளவு வருத்தம் இருக்கு” என்று அவள் சொல்ல, ஆறுதலாய் அவளது கரத்தை பிடித்துக் கொண்டான் சகிதீபன்.

“ எல்லாருடைய சார்பாகவும் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் நந்து.. மன்னிச்சிரும்மா” என்றான் அவன் உடைந்த குரலில்.

நந்திதாவோ, “ மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை என் வருத்தத்தை  குறைக்காது தீப்ஸ்.. இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு … ஆனா அது உன் கையில் இல்லை.. உன் அண்ணா கையில்தான் இருக்கு.. நான் இந்த வீட்டில் இருக்குறதும் இல்லாமல் போகுறதும் உன் அண்ணாவின் கைகளில் தான் இருக்கு” என்றாள் நந்திதா. அவளைக் குழப்பமாய் பார்த்தான் சகிதீபன்.

நந்துவின் தீர்மானம் தான் என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை! சகிக்கே புரியாத விஷயம், நம்ம அபிநந்தனுக்கு புரியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ப்படியாவது அபியின் வாழ்க்கையில் மலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று சகிதீபன் யோசிக்கும்போதே, அடுத்த பிரச்சனையைக் கொண்டு வந்தாள் விஷ்வானிகா. (ஹா ஹா பாவம் சகி.. கவலைப்படாதே சகி..இதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கே உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரேன்.)

“ சகி”

“ என்ன விஷ்..” விஷ்வா என்று சொல்லவந்தவன், கடைசி நொடியில் சுதாரித்து, “ வினி” என்று கேட்டான்.

“ ஓஹோ அவ்வளவு தெளிவாக இருக்கியா? கூடிய சீக்கிரம் நீயே என்னை விஷ்வானு கூப்பிடுவ சகி” என்று மனதிற்குள் சவால் விட்டாள் விஷ்வானிகா.

சுற்றும் முற்றும் பார்த்தவள், “ உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சகி !” என்றாள். அவளைப் போலவே சுற்றும் முற்றும் பார்த்தான் சகிதீபன்.

“எனக்கு ஒரு டவுட்டு வினி!”

“என்ன?”

“நீயும் நானும் அண்ணன் தங்கச்சி தானே?”

“ஆமா, பின்ன?”

“ அப்பறம் ஏன் என்கிட்ட பேசுறதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குற நீ ?” என்று நக்கலாய் சிரித்தான் சகி. அவனை பஸ்பமாக்கிவிடும் அளவிற்கு முறைத்தாள் விஷ்வானிகா.

“சரி சரி ..உன் கண்ணுல இருந்து புகையா கெளம்புது! என்னனு சொல்லு”

“ இங்க வேணாம்.. வா ரூமுக்கு போகலாம்” என்றபடி தன் அறைக்குள் பிரவேசித்தாள் வினி.

“இவளுக்கு என்னவாம் இப்போ?” என்று யோசித்தபடி பின்தொடர்ந்தான் சகிதீபன். அவன் வந்ததுமே கதவை சாத்தினாள் வினி.

“ஹேய் என்னடீ? என்னை அடிக்கலாம்னு தான் கூப்பிட்டியா?” என்று பயந்தவன் போல நடிக்க, “ இந்த ஃபோட்டோவை பாரு!” என்று சாம்பவி பாட்டியின் வீட்டில் தனக்கு கிடைத்த புகைப்படத்தை நீட்டினாள் அவள்.

அந்த புகைப்படத்தை வாங்கி அசுவாரஸ்யமாய் பார்த்தவன், “அட நம்ம அருண்!” என்று ஆர்ப்பரித்தான்.

“ஷ்ஷ்.. ஹேய் லூசு சத்தம் போடாதே!”

“ இந்த ஃபோட்டோ உனக்கு ஏது?”

“சாம்பவி பாட்டி வீட்டில் இருந்துச்சு!”

“சாம்பவி பாட்டியா?” என்று யோசித்தவன், “ ஆமா அருண் தாத்தா சொல்லி இருக்கார், சாம்பவி பாட்டி அருண் தாத்தா எல்லாருமே கல்யாண வயசாகுற வரை ஒரே வீட்டில் வளர்ந்தாங்கன்னு தாத்தா சொல்லி இருக்கார்.. சோ தாத்தா ஃபோட்டோ பாட்டி வீட்டில் இருக்குறது பெரிய விஷயம் இல்லை!” என்றான் சகி.

“ அப்படியா சகி ? சரி, அருண் தாத்தாவுக்கும், சாம்பவி பாட்டிக்கும் என்ன உறவுமுறை?” என்று வினவினாள் இளையவள்.

“ அருணோட, அம்மாவுடைய தம்பியின் பொண்ணு தான் சாம்பவி பாட்டியாம்!” என்று  சகி சொல்லவும்,

“ யூ மீன் முறைபொண்ணு அப்படித்தானே?” என்று விஷ்வானிகா கேட்கவும் அவனுக்கு பொறி தட்டியது. இருப்பினும் வழக்கமான குறும்புத்தனத்துடன்,

“ அவங்க தாத்தாவை முறைச்சு பார்த்தாங்களான்னு எனக்கு தெரியாது! ஆனா முறைபெண் தான்!” என்றான். அவனது மொக்கை ஜோக்கை சகித்துக் கொள்ள முடியாமல் முறைத்தாள் விஷ்வானிகா.

“சகி அந்த ஃபோட்டோவை திருப்பி பாரேன்!” என்று அவள் கூறவும், அமர்த்தலாய் அதை திருப்பி பார்த்தான் சகி.

கண்கள் இரண்டும்

என்று உன்னை கண்டு பேசுமோ?

காலம் இனிமேல்,

நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?” என்று எழுதியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.