(Reading time: 14 - 27 minutes)

19. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபத்ராவின் பிரச்சினைகளை புரிந்து அவளை நார்மல் ஆக்கிய அர்ஜுன், அதற்கு பிறகு அவ்வப்போது அவளின் மனநிலையை கவனித்துக் கொண்டான்.

சுபத்ரா அர்ஜுன் சொன்னபோது மேலோட்டமாக எடுத்துக் கொண்டாலும், பின் யோசித்ததில் கடிதம் எழுதுவது என்பது தன் மனநிலையை மாற்றும் என்று தோன்ற ஆரம்பித்தது. அவள் கடிதமாக எழுதாமல் ஒரு டைரி மாதிரி எழுத ஆரம்பித்து இருந்தாள்.

எழுத ஆரம்பித்தவுடன் அவளுக்கு தோன்றியது இது மற்றவர் கைக்கு கிடைக்கும் போது அவர்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவள் short hand மொழியில் எழுதினாள். அதிலும் சில இடங்களில் அவளுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுத ஆரம்பித்தாள்,

நாட்கள் விரைவாக நகர்ந்து கொண்டிருக்க, இவர்களின் ட்ரைனிங் காலம் முடியும் நேரம் வந்தது.  ட்ரைனிங் பிரக்டிகல் எல்லாம் எளிதாக கடந்தனர் சுபத்ரா, நிஷா இருவரும். எழுத்து தேர்வு நடக்கும்போது எல்லா பகுதிகளும் நன்றாக செய்து இருந்தனர். சில சிக்னல் codes பற்றி கேட்ட கேள்விகளுக்கு சுபத்ராவின் பதில் துல்லியமாக இருந்தது.

எல்லாவற்றிலும் முதலாவதாக தேறியது சுபத்ரா. இரண்டாவது ஒரு male trainee, மூன்றாவதாக நிஷா. இதில் அர்ஜுன், ராகுல் இருவருக்கும் மிகவும் பெருமை. முதலில் இருவரும் அவர்களிடம் ட்ரைனிங் எடுத்தவர்கள். பிறகு தங்கள் மனங்கவர்ந்த பெண்கள்.

இங்கே இவர்களுக்கு போஸ்டிங் எங்கே என்று ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது மிதுன் மாமா பிரிகேடியர், அர்ஜுன், ராகுல் இருவரையும் அழைத்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவருக்கு salute செய்யவும், அவரும் பதில் salute செய்து இருவரையும் அமரும்படி சொன்னார்.

“அர்ஜுன் , ராகுல் நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்ததுலேர்ந்து பார்த்துட்டு இருக்கேன். ட்ரைனிங் topper.. அதுக்கு அப்புறம் நீங்க ட்ரைனிங் கொடுத்த எல்லோருமே மிக திறமையான soldiers. உங்கள பார்க்கும்போது என்னோட துடிப்பான இளம் பருவம் நினைவு வரும். அதோட நீங்க மிதுனோட friends .. எல்லாம் வச்சு உங்கள என்னோட பையனாகவே பார்க்க ஆரம்பிச்சேன். நீங்க இங்கே இருக்கிறது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது. ஆனால் இப்போ ..?” என்று இடைவெளி விட,

“என்ன ஆச்சு மேஜர்..? “

“உங்கள பார்டர் செக்யூரிட்டி force சீப் கமாண்டோவ promote பண்ணி காஷ்மீர் வரசொல்லி ஆர்டர் வந்துருக்கு..”

ராகுல், அர்ஜுன் இருவர் முகங்களும் மிகவும் பிரகாசித்தது.

“வாவ்.. நாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்த போஸ்டிங் மேஜர்.. எங்களோட திறமைய நாங்க காமிக்க மிகவும் அருமையான சந்தர்ப்பம்.. “ என்று மகிழ்ந்தவர்கள், “ஏன் அங்கிள் .. உங்களுக்கு இதிலே முழுமையான சந்தோஷம் இல்லையா?” என்று வினவினான் அர்ஜுன்.

“நோ.. young man.. நான் அப்படி நினைக்கல.. ஆர்மிலே லட்சியத்தோட சேருகிற ஒவ்வொருவரின் கனவும் இதுதான். என் பையன் மாதிரி பழகின உங்கள பிரியரதுதான் எனக்கு வருத்தம். மற்றபடி யு people are deserve it guys” என்று வாழ்த்தினர் ..

மேலும் எப்போ join செய்யவேண்டும் என்ற விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

ருவர் முகத்திலும் சந்தோஷம் வெளிப்படையாக தெரிந்தது. என்றாலும் கொஞ்சம் யோசனைகளும் ஓடின. முதலில் தெளிந்த அர்ஜுன், ராகுலை பார்க்க ராகுல் முகம் இன்னும் தெளியவில்லை.

“ராகுல் .. என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்லை அர்ஜுன்.. இப்போ நாம போக போறது 2௦௦% ஆபத்தான இடம்.. இந்த ட்ரைனிங் முடிஞ்சவுடன் நான் நிஷா கிட்ட என்னோட காதல் பத்தி சொல்ல நினைச்சு இருந்தேன். இப்போ சொல்லனுமான்னு யோசனையா இருக்கு..”

“ஹ்ம்ம். நானும் அத பத்தி யோசிச்சேன்.. நாம எப்படி திரும்பி வருவோம்னு நிச்சயமில்லாத நிலைமையில், அவங்க கிட்ட நம்ம காதல சொல்றது ரொம்ப தப்புடா.. இதுவரைக்கும் அவங்களுக்கு நம்ம மேலே ஒரு வழிகாட்டி, friend இத தாண்டி எந்த உணர்வும் இல்லை.. இப்போ நாம சொன்னால் அத தூண்டி விடறமாதிரி ஆகும். “

“அப்படிதான் நானும் யோசிச்சேன் மச்சான். அதோட நமக்கோ, இல்லை அவங்களோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இப்போ ரொம்ப சரியான வயசுன்னு சொல்ல முடியாது. இன்னும் மூணு வருஷம் ரெண்டு பக்கமுமே போகலாம். அதோட நாம நம்மோட விருப்பத்தை சொன்னால் நிச்சயம் நமக்காக காத்து இருப்பாங்க. ஆனால் நம்ம முடிவு வேற மாதிரி இருக்குமனால் எல்லோருக்கும் வேதனை. “

“ஹ்ம்ம்.. ஆமாம்.. எனக்கும் அதுதான் சரின்னு படுது.”

இருவரும் பேசியபடி சுபத்ரா, நிஷா இருவரிடமும் கொஞ்சம் இடைவெளி விட ஆரம்பித்தனர். என்னதான் கண்டிப்பாக இருந்தாலும் அர்ஜுன் ராகுல் இருவருக்கும் தங்கள் மேல் தனி அக்கறை உண்டு என்பதை இலைமறை காயாக இருவருமே வெளிப்படுத்தி இருக்கின்றனர். இப்போதுள்ள இடைவெளி பற்றி சிந்தித்தாலும், வேலை பிஸி என்பதை தாண்டி அவர்களுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.