(Reading time: 10 - 19 minutes)

05. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

பாய்ந்து வரும் நதியில் முகம் பார்த்து உள்ளீர்களா??பாய்ந்து வரும் நதியில் காணும் நம் பிம்பமானது தேவேலோக தேஜஸ் பொருந்தியதாக தோன்றும்!விளக்க இயலாத பொலிவு நம்மிடம் குடிக்கொள்ளும்!எந்த ஒரு நிலைக்கண்ணாடியும் அத்தகு பொலிவை நிச்சயம் நல்காது.ஆனால் இது சாத்தியமா???நிச்சயம் இல்லை...பாய்ந்தோடும் நதியினில் எவராலும் தனது பிம்பத்தினை தரிசிக்க இயலாது.என்ன நான் கூறுவது சரி தானே??ஆனால்,நதியினை காட்டிலும் வேகம் பொருந்திய காலத்தில் எவ்வாறு இந்த மனிதர்கள் துன்ப பிம்பத்தினை காண்கிறார்கள்??இது அதிசயமான ஒன்றே!!காலச்சக்கரம் எதற்காகவும் நிற்பதில்லை,யார் உரையும் கேட்பதில்லை!அது விரைந்து ஓடுகிறது!!ஆனால்,எவ்வாறு மனிதர்கள் அதன் அசுர முகத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்கின்றனர்??சோதனைகள் நல்குவது விதியின் இயல்பு!பாதுகாப்பினை நல்குவது இறைவனின் இயல்பு!போதனைகளை வழங்குவது தவசிகளின் இயல்பு!சாதனைகள் புரியும் இயல்பினை மனிதன் மட்டும் எச்சூழலிலும் ஆற்ற மறுக்கின்றான்.காரணம் வினவினால்,விதியின் மீது பழி!!!

இங்கு சிலரும் பிறக்கிறார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கோட்பாட்டை நிறுவ!!மேலும் சிலர் பிறப்பெடுக்கின்றனர் மாற்றத்தையே மாற்றி அமைக்க!!!

நாடு திரும்பியாகிவிட்டது!!

எவ்வளவு தான் பேறு பெற்றாலும் தாய்நாட்டில் வந்து விழும் சமயம்,மனதினில் நிறையும் நிம்மதி தாய் மடி சேரும் சமயம் கிட்டும் நிம்மதியாகவே தோன்றுகிறது!!

வாழ்வோ,மரணமோ!!ஒவ்வொரு ஆன்மாவும் ஜெனிக்கும் சமயம்,கருவை ஸ்தாபிப்பது ஒரு கன்னிகை மட்டும் அல்ல!அக்குழந்தை பிறக்கும் ஸ்தலமும் தான்!

மழையின் சாரலை இரசிப்பதற்காக சாளரத்தின் மிக அருகே அமர்ந்திருந்தாள் கீதா.கரத்தில் ஒரு தேநீர் கோப்பை,அந்த மழை மாலையை இரம்யமாக்கியது.

இதுபோன்ற சூழல் அவனுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா??

மழை என்றால் அவனுக்கு மிகுந்த பிரியம்!!என்னையும் மறந்து விடுவான்.அவனது முதல் காதலி இந்த வானின் உயிர்த்துளி அல்லவா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

"பரத்!நீ என்கிட்ட அடி வாங்கப் போற!குழந்தையா நீ இப்படி மழையில ஆட்டம் போடுற?"-அவன்,அவளையும் அம்மழையில் இழுத்துவிட்டான்.

"ஏ..என்ன பண்ற?"

"உஷ்!"-அவளது இதழ்களில் தனது சுட்டு விரலை வைத்தான் அவன்.

"ஜஸ்ட் ஃபீல் தி கிளைமட் பேபி!"-அவனது குழந்தைத்தனம்...அது தான் அவளை வெகுவாக ஈர்த்திருந்தது!

"போதும்!உடம்பு முடியாம போயிட போகுது!"

"பார்த்துக்க தான் என் கீத்து இருக்காளே!"-அவன் செய்யும் சில தொல்லைகள்,யாவும் அவளுக்கு ஆனந்தத்தினை நல்கும்!!

அவனோடான அவளது கடந்த காலம்,நினைவுகளாக இதயத்தை இதயமாக்கின.

"ங்க!"-குரல் கேட்டு சிந்தனை கலைத்தாள் அவள்.

"அப்பா!வாங்கப்பா!"

"நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பீங்கன்னு நினைத்தேன்!"

"இப்போ தான்பா தூங்கி எழுந்தேன்.நானே கீழே வரலாம்னு நினைத்தேன்!"

"எத்தனை நாளாச்சு இதுமாதிரி உங்கக்கிட்ட பேசி!இனி என்னைவிட்டு போக மாட்டீங்க தானே!"-அவள் தனது ஆருயிர் தந்தையின் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.பல நாட்களுக்கு பின் கிட்டிய உயர்ந்த அரவணைப்பு,இதயத்தை இதமாக்க,கண்கள் தன்னிச்சையாக கரைய தொடங்கின.

"இனி உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்பா!"

"அட!என்னங்க நீங்க?இதுக்கு போய் அழுறீங்க?நான் ஒரு பைத்தியம்!"-அவனும் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போனான்.

"அழக்கூடாது!நீங்க அழுறதை என்னால தாங்கிக்க முடியாது!"-அவளது கண்ணீர் மென்மையாக துடைக்கப்பட்டது.

"அப்பா!"

"என்னங்க?"-அவள் ஏதோ கூற வாயெடுக்க அதற்குள்,

"பெரியப்பா!பெரியம்மா கூப்பிடுறாங்க!"-என்று கூவினாள் ஆராத்யா.

"நீங்க சொல்லுங்க!"

"இல்லைப்பா!இது பேச ரொம்ப நேரம் எடுத்துக்கும்!அதுவும் இல்லாம இது அவ்வளவு முக்கியமானதில்லை!நீங்க போங்கப்பா!நைட் பேசலாம்!நிறைய பேசணும்!"

"சரிங்க!"-ராகுல் தயங்கியப்படி விலக,மறைவிலிருந்து தென்பட்டார் சரண்.அவரை கண்டதும் அவளது கண்ணீர் கரைப்புரண்டது.

"தாத்தா!"-ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள் கீதா.

அவளது வேதனையின் காரணம்,இரகசியமாய் அறிந்தவர் அவர் ஒருவரே!

"என்ன செல்லம்?எப்படி இருக்க?"

"தாத்தா!நா...நான்..."-அவளால் பேச இயலவில்லை.

"என்னாச்சு?"-அவர் மனம் பதறியது.

"நான்..."

"சொல்லும்மா!என்னாச்சு?"

"பரத்தை பார்த்தேன் தாத்தா!"-அவரது முகம் வெளிறிப் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.