(Reading time: 9 - 17 minutes)

20. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ராகுல் அர்ஜுனிடம் சொன்னது போல் நிஷாவும் சுபத்ராவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

ராகுலின் விருப்பத்தை நிஷா கூறவும், சுபத்ரா

“ஒஹ்.. நீ என்ன நினைக்கிற நிஷா?”

“நான் இத எதிர்பார்க்கல சுறா.. நாம ட்ரைனிங்லே இருந்த வரைக்கும் அவர நம்ம superior ஆபீசர் என்பதை தாண்டி யோசிச்சதில்லை.. இப்போ அவர் தீடிர்னு சொல்லவும் எனக்கு என்ன யோசிக்கிறது புரியல? நீ என்ன நினைக்கிற சுறா ?”

“இது உன்னோட லைப் மா.. நீதான் யோசிக்கணும். “

“இல்ல.. அவர் ப்ரொபோஸ் ன்னு பண்ணல.. அதான் எனக்கு என்ன நினைக்கிறதுன்னு புரியல?”

“சரி. நீ எதாவது உன் வருங்கால கணவர் பற்றி யோசிச்சு வச்சுருக்கியா?”

“இல்ல .. இதுவரைக்கும் அப்படி யோசிச்சது இல்லை. கல்யாணம் பண்ணும் போது அப்பா, அம்மா சொல்ற மாப்பிள்ளைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சு இருக்கேன். அவ்ளோதான்.”

“பொதுவா உன்னை பிடிச்சு இருக்குனு சொன்னத தவிர ராகுல் பத்தி நீ என்ன நினைக்கிற?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மன முடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

“நல்ல டைப் ன்னு தோணும். அவர்கிட சில சமயங்களில் பேசிருகேன். ஆர்மிலே இருந்தாலும் கொஞ்சம் soft personன்னு தான் தோணும். “

“உங்க அப்பா , அம்மா இவர மறுக்கிறதுக்கு சான்ஸ் இருக்கா? “

“இல்லைன்னு தான் தோணுது..”

“உனக்கு உன்னை அறியாமல் அவர பிடிக்கல, இல்லை அவர் உன்னோட வாழ்க்கைக்கு சரியா வர மாட்டார்னு தோனிருக்கா?”

“அப்படி எல்லாம் இல்லை சுறா..”

“இப்போ நான் கேட்ட கேள்விகள் எல்லாம் இன்னிக்கு நைட் நீ திரும்ப உனக்குள்ள யோசிச்சு பாரு.. உன்னோட பதில் எப்படி இருக்கணும்னு யோசிச்சு நாளைக்கு நீ அவர்கிட்ட பேசு.. இப்போ யோசிச்சு முடிவெடுத்துட்டு தூங்கு..”

“ஹேய்.. எனக்கு யோசனை சொல்லுன்னு சொன்னா, நீ என்னோவோ சொல்லிட்டு போற?”

“ஹேய்..லூசு .. நான் என்னோட அபிப்ராயத்த உனக்குள்ள திணிக்க கூடாது. நீயே யோசி.. நான் கேட்டத நீ உனக்குள்ளே கேட்டா உனக்கு பதில் கிடைக்கும். குட் நைட் “ என்று விட்டு படுத்தாள்.

சுராவின் யோசனைப்படி நிஷாவும் தனக்குள் யோசிக்க ஆரம்பித்தாள். அப்படி யோசிக்கும் போது அர்ஜுன் , ராகுல், இருவருமே ஆரம்பித்திலிருந்து இவர்கள் இருவரிடம் காண்பித்த அக்கறை புரிந்தது. அதிலும் ராகுலின் டீம் இவள் சென்ற பின் அங்கேயும் பல விதங்களில் அவளிடம் அக்கறை காட்டி இருந்தான். அந்த parade மாடல் செய்யும் போது இவளின் basic ஐடியாவிற்கு செயல் வடிவம் கொடுக்கும் போது நிறைய யோசனைகள் சொன்னான்.

எப்போது பேசினாலும் நிஷா வீட்டில் உள்ளவர்களை விசாரிக்காமல் இருக்க மாட்டான். நிஷாவின் வீட்டில் பெரிய வசதிகள் எல்லாம் கிடையாது. அதற்காக ஒன்றும் இல்லாதவர்களும் கிடையாது. ஆனால் ராகுலின் பேச்சில் இருந்து அவன் கொஞ்சம் வளமான குடும்பத்தை சேர்ந்தவர் என்று தோன்றியது. இது எவ்வளவு தூரம் சரிபட்டு வரும் என்று நிஷாவிற்கு யோசனை ஓடிற்று,

அப்படி யோசிக்கும்போதே நான் ராகுல் குடும்பம் பற்றி எல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். அப்போ உள்ளூர ராகுலின் விருப்பத்திற்கு எனக்கும் சம்மதமா.. ? என்ற மனதின் கேள்விக்கு தன்னை அறியாமல் அவள் மனம் தலை ஆட்ட , அவள் ராகுலிடம் பேச வேண்டியது பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். அந்த யோசனையோடு உறங்கியும் விட்டாள்,

றுநாள் காலை இவர்கள் புறப்பட்ட ரயில் டெல்லி யிலிருந்து connecting ட்ரைன்.. அதனால் மறுநாள் டெல்லி ரயில் நிலையம் வந்தவுடன் இவர்கள் நால்வரும் சென்னை செல்லும் ரயிலில் ஏறினர். எதச்சையாகவோ அல்லது தெரிந்தோ இவர்கள் நால்வரும் ஒரே compartment பயணித்தனர்.

அது எ/சி டூ டயர் .. இவர்கள் நால்வர் மட்டும் தான் அந்த காபினில். நால்வரும் அமர்ந்தவுடன்

“ஹை. girls ..” என்று அழைத்தான் அர்ஜுன். ராகுல் ஒரு புன்னகையோடு நின்று விட்டான். ராகுலின் முகத்தில் சஞ்சலமும், யோசனையும் காணப்பட்டது.

கொஞ்ச நேரம் சுபத்ராவும், அர்ஜுனும் பேசிக் கொண்டு இருக்க, நிஷாவும், ராகுலும் ஒருவர் முகத்தை மற்றவர் அறியாமல் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர்.

அர்ஜுன் சற்று யோசித்து “நிஷா “ என அழைக்க,

கனவில் இருந்து விழித்தவள் போல் “ எஸ் கேப்டன்.. “ என்று இருந்தாள்.

அர்ஜுன் சிறு சிரிப்போடு “ஹேய்.. கேப்டன் எல்லாம் மிலிடரி காம்பஸ் குள்ளே தான்.. இங்கே என்னை அர்ஜுன் நே கூப்பிடு “

நிஷா சிறு சிரிப்போடு “சரி அண்ணா” என,

அர்ஜுன்க்கு மகிழ்ச்சியாகவும் , ராகுல்க்கு பீதியையும் கிளப்பியது.

ராகுல் மனதில் “ஐயோ .. என்கிட்டயும் இவளுக்கு சகோதர பாசம் தான் இருக்குன்னு சிம்பாலிக்கா சொல்றாளோ “ என்று அரண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.