(Reading time: 17 - 33 minutes)

07. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

திட்டமிட்டிருந்தபடி அன்று மாலை மூவரும் கருடா மாலிற்கு சென்றனர்.  பார்க்கிங்கில் காரை நிறுத்திய ஆதர்ஷ், கார் கண்ணாடியில் முகத்தை ஒருமுறை பார்த்தவன் கலைந்திருந்த தலைமுடியை சரி செய்தான்.

“போதும் ஆதர்ஷ்! பொண்ணுங்க கூட இவ்வளவு நேரம் கண்ணாடிப் பார்க்க மாட்டாங்க.  போதும் வா போலாம்!”

“மைதி சும்மா இரு! டேக் யுவர் டைம் மச்சா!”

“தேங்க்ஸ் ஜெய்! நான் எப்பவுமே ரெடிதான்….வாங்க போலாம்” என்று ஆதர்ஷ் நடக்கவும்

“நீ ரொம்ப கிவிக் மச்சா…சட்டுனு ரெடியாகிட்ட! இங்க வரர்துக்கு மைதி ரெண்டு மணி நேரம் எடுத்தாள்னு சொன்னா…நீ நம்ப மாட்ட…ஆனா அதுதான் உண்மை” என்றவன் மைத்ரீயிடம், “நீ ஒரு விஷயத்தை கவனிச்சியா, மைதி?” அவள் என்னவென புருவங்களை உயர்த்தி கேள்வியாக ஜெய்யைப் பார்க்கவும்

“எவ்வளவு தான் அலங்காரம் செய்தாலும் குரங்கு குரங்குதான்” என்று ஜெய் புன்னகைக்க, ஆதர்ஷும் அவனோடு இணைந்து கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“என் அண்ணியைப் பார்க்கப் போறதால இப்போ உன்னோடு சண்டை போடும் மூட் இல்லை.  எப்படியும் நாளைக்கு ஃப்ரீ டைமில் மாட்டுவ நீ….அப்போ இந்த குரங்கு என்ன செய்யும்னு காட்டுறேன்”

பேசியபடி கருடா மாலின், ஒரு காஃபி ஷாப்பிற்குள் சென்றமர்ந்தனர்.  வடிவு கூறிய அடையாளங்களை கொண்டு அந்த பெண்ணை மைத்ரீ சுற்றிலும் தேடினாள்.  அப்படி யாரையும் காணாது,

“ஆதர்ஷ்! அவங்க இன்னும் வரலை போலயே?”

“நாமே இப்போதான் வந்தோம்….அவங்களும் வருவாங்க.  கொஞ்சம் பொறுமையா இரு மைதி” என்று ஜெய் பதிலளித்தான்.

‘அவர்க்ளுக்கு தனிமை வேண்டும்...அந்த பெண் வரும்போது மைதி இங்கிருந்தா எதையாவது பேசிகிட்டே இருப்பாள்…ஏதாவது செய்து அவங்களை தனியா விட்டுட்டு போகனும்’ என்றெண்ணிய ஜெய், “எனக்கு கொஞ்சம் ஷாப் செய்யனும் மச்சா! அவங்க வர லேட்டாகும் போல, அதுக்குள்ள நான் வேண்டியத வாங்கிட்டு வந்திடுறேன்.  மைதியையும் என்னோட கூப்பிட்டு போறேன்”

ஆதர்ஷ் யோசிக்கும்போதே மைத்ரீ குறுக்கிட்டாள்

“இன்னைக்கு தானடா ஷாப்பிங்க் முடிச்சோம்.  இன்னும் என்ன வாங்கனும்?” ஜெய் அவளை முறைக்கவும்

“சரி! உனக்கு ஏதாவது வாங்க வேண்டியிருக்கும்.. நீ வாங்கிட்டு வா! நான் ஆதர்ஷோட வெய்ட் பண்ணுறேன்”

“மைத்ரீ சொன்ன மாதிரி நீ மட்டும் போயிட்டு வா ஜெய்” என்றான் ஆதர்ஷ்.

“இல்லை ஆதர்ஷ்! மைதி என்னோடு வறேன்னு முன்னாடியே சொல்லியிருந்தாள்… அவள் மறந்துட்டா போல” என்றபடி அவள் பக்கம் திரும்பியவன்

“என்ன மைதி மறந்துட்டியா?” அவள் குழம்பவும் மேலும் தொடர்ந்தான் ஜெய்,

“நந்தி ஒன்னு வாங்கனும்னு சொல்லிட்டிருந்தேனே”

தன்னை நந்தி என்று குறிப்பிடுகிறான் என்றதும் எழுந்த கோபத்தை மறைக்க சிரிப்பை இழுத்து வைத்துகொண்டு “ஆமாம் ஆதர்ஷ்! ஜெய் சொல்லிட்டிருந்தான்.. நான் தான் மறந்துட்டேன்.  அண்ணி வரர்துகுள்ள நாங்க வந்திடுறோம்”

“ரெண்டு பேரும் போகனும்னா வந்த வேலை முடிஞ்சதும் நாம் எல்லோரும் சேர்ந்து போய் வேணுங்கறதை வாங்கலாமே” என்று ஆதர்ஷ் முடிக்கும் முன்னரே மைத்ரீ அந்த காஃபி ஷாப்பின் வெளியே சென்றிருந்தாள்.

“மைதி போயிட்டா…நான் இப்போ போகலைனா என்னை கொலை செய்திடுவா மச்சா!” என்றுவிட்டு ஆதர்ஷின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான் ஜெய்.

தன்னை நந்தியென மறுபடியும் ஜெய் குறிப்பிட்டதனால் எழுந்த கோபத்தில், அங்கிருந்த ஏதோ ஒரு கடையினுள் அவன் வருமுன் நுழைந்து கொண்டாள்.  இதை அறியாது காஃபி ஷாபிலிருந்து வெளிவந்த ஜெய் அவளை தேட ஆரம்பித்தான்.  மைத்ரீ எங்குமில்லை என்றதும் அவளின் மொபைலுக்கு அழைத்தான்.  முதல் இரண்டு முறை அவன் அழைப்பை துண்டித்தவள் முன்றாவது முறை அதை ஏற்றாள்.

“ஹலோ மைதி”

“ராங்க் நம்பர்...சாரி! என் பேர் நந்தி” என்று சீறினாள்.

மறுமுனையில் ஜெய் சிரிக்கவும் அவள் கோபத்தில் முகம் சிவந்தாள். “நீ மட்டும் என் கையில் இப்போ மாட்டின…சட்னியாக்கிடுவேன்” என்றபடி நடந்து சென்றவள் அந்த கடையில் யாரோ ஒருவன் மீது மோதினாள்.  கையிலிருந்த போன் நழுவி கீழே விழுந்தது.

‘ச்சே…கோபத்தில எதிரில் வரவங்க கூட தெரியாம போச்சே’ என்று பதறியவள், “ஐ ம் சாரி!” என்றுவிட்டு தன் போனை எடுக்க குனிந்தாள் மைத்ரீ.

அவன் இவளையே பார்த்தபடி நிற்பதை புரிந்தது… “சாரி சொல்லிட்டேனே இன்னும் என்ன? எல்லாம் இந்த குரங்கால வந்தது” முணுமுணுத்தபடி நிமிர்ந்தவள் அவனிடம் “எக்ஸ்ட்ரீம்லி சாரி!” என்றுவிட்டு அவனை கடந்து சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.