(Reading time: 27 - 54 minutes)

09. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

வெற்றிட பிரபஞ்சத்தின் ஷக்தி நீ !!!

Marbil oorum uyire

பூர்வாவை தனது ஆடியில் அழைத்துச் சென்ற சித்தார்த் “உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று சொன்னதும் அப்படி என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தாள். 

குர்கான் ஆம்பியென்ஸ் மாலில் உள்ள ஒரு பார்ட்டி ஹால் தான் புக் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அங்கு சேர ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. தில்லி  டிராபிக்கில் இதெல்லாம் சகஜமான ஒன்று தான்.

அபூர்வா வழி நெடுக தொண தொண என வாயடித்துக் கொண்டே வந்தாள். பொதுவாக சித்துவிடம் மட்டும் தான் அவள் கொட்டும் அருவி ஆயிற்றே.

மாலில் நுழைந்ததும் யாருக்கோ போன் செய்தவன்," பில்லி நீ இங்கேயே இறங்கிக்க.. நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்" என்றவன் அவள் இறங்கவும் காரின் கண்ணாடியை சற்றே இறக்கி அவளை அழைத்தான்.

"பில்லி...அங்கே பார்" என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் கைகாட்ட அவன் கைகாட்டிய திசையில் நின்று கொண்டிருந்தான் சந்தோஷ்.

"ஹே சர்ப்ரைஸ் இவன் தானா...மொக்க பீஸ்ன்னு நான் சொன்னது சரி தான்" சித்தார்த்திடம் கூறிவிட்டு சந்தோஷிடம் சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

த்தாம் வகுப்பு  வரை  அபி சித்துவுடன் ஒன்றாக படித்த சந்தோஷ் அவன் அப்பா வி.ஆர்.எஸ் கொடுத்து விட்டு சென்னையில் செட்டில் ஆகவும் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகள் சென்னையிலே படித்தவன் பின் அண்ணா யுனிவர்சிட்டியில் பி.ஆர்க் சேர்ந்து விட்டிருந்தான்.

அபூர்வாவும் சந்தோஷுடன்  சிறிது காலம் நேரடி தொடர்பில் இருந்தவள் அதற்கு பிறகு சித்துவின் மூலமே சந்தோஷ் பற்றி அறிந்து கொள்வாள்.

படிப்பை முடித்து ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தவன் அலுவல் பணி நிமித்தம் ஒரு வருடம் தில்லியில் இருந்த போது தான் சித்துவின் வீடு கட்டும் பொறுப்பினை ஏற்றிருந்தான். அச்சமயம் அபூர்வா ஹார்வர்டில் பி.ஹெச்.டி செய்து கொண்டிருந்ததால் அவனை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் அமையவே இல்லை.

என்ன தான் பேஸ்புக் வாட்ஸப் எல்லாம் இருந்தாலும் பால்ய நண்பர்களோடு நேரில் அளவளாவுவது போல் வருமா.

"சித்து போட்டோஸ் எல்லாம் அனுப்புவான். நீ தான் ஸ்கைப்ல கூட வருவதே இல்லை" சந்தோஷ் அபூர்வாவிடம் குறைபட்டுக் கொண்டான்.

"எனக்கு அவ்வளவா டைம் இருக்கிறதே இல்லை. சித்து கிட்ட உன்ன பத்தி அடிக்கடி கேட்டுப்பேன் தெரியுமா" அவனை சமாதானம் செய்யவே முயற்சி செய்தாள்.

"அப்புறம் என்ன இந்த பக்கம் விஜயம். எங்க தங்கியிருக்க...வீட்டுக்கு (சித்து வீட்டுக்கு ) வந்திருக்கலாம்ல"

"அபிஷியல் விஷயமா வந்தேன். அங்கேயே கெஸ்ட் ஹவுஸ்ல ஸ்டே. நாளைக்கு வரேன் வீட்டுக்கு. ஆன்டி அங்கிளையும்  பார்க்கணும் "

பார்ட்டி ஹாலினுள் சந்தோஷுடன் பேசிக் கொண்டே நுழைத்திருந்தாள் அபூர்வா.

பார்ட்டி ஹால் முழுவதும் கண்கவர் இளைஞர் பட்டாளமாக இருந்தது. பெண்கள் விதவிதமான பார்ட்டி உடைகளில் ஒப்பனையுடன் அழகாய் மிளிர்ந்து கொண்டிருக்க ஆண்கள் பெரும்பாலும் கேஷுவல்சில் வலம் வந்தனர்.

அபூர்வாவைப் பார்த்ததும் சோனாலி ஓடி வந்தாள்.

"ஹாய் அபி" அபூர்வாவை அணைத்துக் கொண்டாள்.

"சோனு...எப்படி இருக்க..குட்டி பையன் எப்படி இருக்கான்"

"சூப்பரா இருக்கான் அவனுக்கென்ன"

"சித்து கார் பார்க் பண்ணிட்டு இருக்கான் வந்திருவான். பை தி வே திஸ் இஸ் சந்தோஷ் எங்க சைல்டுஹூட் ப்ரண்ட்" சோனாலியிடம் சந்தோஷை அறிமுகப் படுத்த இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டனர்.

"ஓகே கேரி ஆன் கைஸ். வில் பி பேக்" சோனாலி சொல்லி சென்றதும் அங்கு ஓர் மூலையில் இருந்த நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர்.

"அபி. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...நீ எப்படி எடுத்துபியோ தெரில" சந்தோஷ் கைகளை பிசைந்த படியே அபூர்வாவிடம் சொல்ல

"என்ன சந்தோஷ்...என்ன விஷயம் சொல்லு" அபூர்வா என்ன சொல்ல போகிறான் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

"அது வந்து அபி.... வந்து...சித்துக்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். அவன் தான் உன்கிட்ட நேரா பேச சொன்னான்" அவன் தயக்கமாக சொல்லவும் அபூர்வா மேலும் குழப்பம் அடைந்தாள்.

அப்போது  பார்ட்டி ஹால் உள்ளே நுழைந்தான் சித்தார்த். அனைவரும் அவனைக் கண்டதும் உற்சாகமாகினர். எல்லோரிடமும் கையசைத்தபடியே அபூர்வாவை கண்களாலே துழாவியவன் அவள் சந்தோஷுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளை நோக்கி  சென்றான்.

அங்கிருந்த சிலர் அபூர்வாவை அறிந்திருந்தனர் என்றாலும் அவள் சந்தோஷுடன் உள்ளே வந்திருந்ததால் பெரிதாக கவனித்திருக்கவில்லை.

தற்போது சித்தார்த் உள்ளே நுழைந்ததும் அவளை நோக்கி நேரே சென்று அவள் தோளில் கை வைக்கவும் அனைவரின் பார்வையும் அவளை நோக்கியே இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.