(Reading time: 8 - 16 minutes)

29. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

டபடவென்று அடித்துக்கொண்டிருக்கும் இதயம் உணர்த்தும் சத்தம் காதில் விழுந்த போதும், ஜெய்யின் கால்கள் ஓடிக்கொண்டே இருந்தது சிறிதும் நிற்காமல்…

நேர் பார்வையுடன் நில்லாமல் ஓடி வந்தவனின் கால்கள் சரக்கென்று நின்றது, வெகு தூரத்தில் தெரிந்த பாழடைந்த வீட்டைப் பார்த்ததும்…

அந்த வீட்டை நோக்கி செல்ல இருந்தவனை தடுத்தது அவன் செல்போனிலிருந்து வந்த அழைப்பு…

“என்ன ஜெய் தேடுறீயா?.............”

எதிர்முனையில் இலகுவாக கேட்டான் பைரவ்…

“சதி எங்கடா?.......................”

“முடிஞ்சா கண்டுபிடி ஜெய்…”

“எங்கடா என் சதி?....”

ஜெய் கேட்டதும் வெறித்தனமாக சிரித்தான் பைரவ்…

“உன் சதியா?... ஹாஹா…. அந்த வார்த்தையை இப்போதான் சொல்லுறல்ல?... கேட்கவே ஆனந்தமா இருக்கு...”

“என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு பைரவ்…. சதி எங்க?... சொல்லு….”

ஜெய்யின் குரலில் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்பட்டது… அதை உணர்ந்தே இருந்தான் பைரவும்…

“அதான் சொன்னேனே… முடிஞ்சா கண்டுபிடின்னு… நீ இருக்குற இடத்துல தான் அவளும் இருக்குறா…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பைரவ் சொன்னதும், விழிகளை அங்கும் இங்கும் சுழற்றி பார்வையை ஓடவிட்டான் ஜெய்….

சுற்றி முற்றி பார்த்தாலும், ஜெய்யின் பார்வை என்னமோ அந்த பாழடைந்த வீட்டிலேயே வந்து நின்றது…

“என்ன ஜெய்?... அவ எங்க இருக்குறான்னு யோசிக்குறீயா?... கவலைப்படாத… எல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும்…”

பைரவ் சொல்லி முடித்ததும், ஜெய்யின் விழிகள் அப்படியே அசைவின்றி போனது, அங்கே கண்ட காட்சியில்…

விழியெங்கும் நெருப்பே காண, அந்த நெருப்பே அவனை சுடுவது போல் இருந்தது…. ஆம்… அவனின் கண் முன்னே, அந்த பாழடைந்த வீடு நெருப்பில் சிதிலமடைந்து கொண்டிருந்தது வேகமாய்…

“எங்கடா என் சதி?.....”

ஜெய்யின் குரலில் தலைக்கேறிய கோபம் வெளிப்பட்டது…

“ஹாஹாஹா… எல்லாமே உன் பார்வைக்குள்ள தான இருக்கு… இன்னமும் எங்கிட்ட கேட்குற?... ஹாஹாஹா…”

“பைரவ்…………………………….”

ஜெய்யின் கர்ஜனை கேட்டு மரத்திலிருந்த பறவைகள் சத்தமிட்டபடி வானில் பறந்தது வேகமாய்…

“நீ அங்க போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிடும்…” என சொல்லி சிரித்தவன்,

“என் ஓரே தம்பி திவாகரை துடிக்க துடிக்க கொன்னீயே… இப்போ தெரியுதா உயிரோட வலி?... நீ காற்றைவிட வேகமாக போனாலும், உன்னால எதுவுமே செய்ய முடியாது… எரிஞ்சு சாம்பலோட சாம்பலா…………………”

அடுத்து பைரவ் பேசுவதற்கு முன், போனை தூக்கி போட்டு உடைத்தான் ஜெய் ஆங்காரத்துடன்…

வீட்டை நோக்கி அவனது ஓட்டம் தொடர்ந்தது அதிவிரைவாக… ஒவ்வொரு கணமும், அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்ற எண்ணமே துடிப்பாய் இதயத்திலிருந்து கேட்க, வெளிப்படும் மூச்சுக்காற்றிலோ அவளது பெயர் மட்டுமே நிறைந்திருந்தது முழுவதும்….

“உனக்கு எதுவும் ஆகாது சதி… ஆகாது….”

தனக்குள்ளேயே மாறி மாறி சொல்லிக்கொண்டே வீட்டை அடைந்தான் ஜெய்…

கோட்டைச்சுவரின் வாசல் கதவைத் தாண்டிச் சென்று பரந்து விரிந்திருந்த அந்த வீட்டின் வாசலை அடைய சில நொடிகளே இருக்கும் வேளையில், படபடவென்ற சத்தத்துடன் அந்த வீடு நெருப்பிற்கு இரையாகி இருந்த தடம் தெரியாமல் போனது….

பட்டென்று அவனது ஓட்டம் தடைபட்டு நின்ற வேளை, அவனது இதயமும் துடிப்பை நிறுத்திவிட்டிருந்தது சில விநாடிகள் சத்தமே இல்லாது…

விழிகள் தனக்கு முன் இருந்த நெருப்பிலேயே நிலைகுத்தி நிற்க, அப்படியே தரையில் முட்டியிட்டு வீழ்ந்தான் ஜெய்…

“சதி உன் விதி அவ்வளவு தானா?... அல்பாயிசில போக போறீயா?... அந்த கொலைகாரன் உன்னை எந்த நெருப்புல தூக்கி போடப்போறானோ தெரியலையே…” என அவனிடம் கேள்வி கேட்பது போல் ஆரம்பித்து தன்னிடமே சொல்லிமுடித்த சதியின் வார்த்தைகள் அவனுக்குள் அந்நேரம் நினைவு வர,

“சதி.......................................................................” என உரக்க அழைத்தான் ஜெய்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.