(Reading time: 27 - 54 minutes)

06. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP

ஹிந்தனின் அந்த அறைக்குள் கதிரைத் தவிர வேறு யாரையும் அழைத்துச் சென்றதில்லை. அன்று ஐஸ்வர்யா அவனிடம் கேட்காமல் அந்த அறைக்குள் வந்ததை அவனாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யா அங்கு வந்ததால், அன்று இரவே அந்த அரையின் கதவில் தன்னுடைய கை விரல் பதித்தால் மட்டும் திறக்குமாறு மாற்றம் செய்துவிட்டான் .

உள்ளே வந்த கவிழையா அந்த அறைக்குள் தன் வீடு மொத்தமே அடக்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு அங்கு இருந்த சாப்பாட்டு மேஜைக்கு மேல் சாப்பாட்டை வைத்துக்கொண்டே வெளியில் இருந்து அந்த கதவைப் பார்க்கும் எவரும் இது போல் அழகான பெரிய வீடு போல் உள்ளே இருக்கும் என்று நினைத்துகூட பார்க்க மாட்டார்கள். பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்றும் ஆனால் பணம் அறிவு அழகு அனைத்தும் இருக்கும் இவனிடம் குணம் இல்லையே என்று நினைத்துக்கொண்டே தன்னுடைய டிப்பன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பிக்கப் போனாள்.

மேஜையில், அவள் எதிரில் அமர்ந்தவன் எனக்கு யார் சாப்பாடு எடுத்துவைப்பர்கள்? என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அங்கிருந்த அலமாரியை காண்பித்து பிளேட், பவுல் எல்லாம் அதில் இருக்கு என்று சொன்னான்.

கவிழையா மனதிற்குள், “எருமை நால்லா கை கால் எல்லாம் வேலை செய்து பிறகு ஏன் அவனுடைய சின்னச்சின்ன வேலைக்கு கூட மற்றவர்களை ஏவுகிறான் எல்லாம் பணத் திமிர்” என்று பொறுமிக்கொண்டு அவனுக்கு பரிமாற தேவையானவற்றை எடுத்து திரும்பும் போது அவளுடைய டிப்பான் பாக்ஸ் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டவள் கோபமாக அவனைப் பார்த்து முறைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவள் முறைப்பதைப் பார்த்தவன், அவள் பார்த்த சாப்பாடு கொட்டியிருந்த இடத்தை அவனும் பார்த்துவிட்டு இது எப்படி கீழே விழுந்தது என்று கேட்டான் [அவள் சாப்பாடு பரிமாற பாத்திரம் எடுக்கதிரும்பி இருக்கும் போது வேண்டும் என்றே அதை கீழே விழச்செய்தான் மஹிந்தன் ]

அவன் அவ்வாறு கூறியதும், ‘தான் இவனைப்பற்றி நினைத்துக்கொண்டே சாப்பாட்டை கீழே விழும் படி வைத்துவிட்டோமோ’ என்று குழம்பிப் போனாள்.

உனக்கும் சேர்த்து இன்னும் ஒரு பிலேட் எடுத்து வா என்னுடைய சாபாட்டு இரண்டு பேருக்கு தாராளமாக இருக்கும் என்று கூறினான்.

அதற்கு கவி தேவையில்லை! நான் கேண்டினில் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று கூறினாள்

அதற்கு மஹிந்தன் இனி நீ அங்கு போய் சாப்பிட நேரம் இல்லை பட்டினியோடு கிளைன்டிடம் பேசி eஎன்னை நஷ்டப்பட வைக்காதே என்றான். உன்னை பார்க்கவைத்து நான் மட்டும் சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்கும். எதிர்த்து பேசாமல் உட்கார்ந்து என்னுடன் சாப்பிடுவது உனக்கு நல்லது என்று கடைசி வரியை கொஞ்சம் கடுமையுடன் கூறினான்.

முதலில் அவனுடைய சாப்பாட்டை நான் சாப்பிடுவதா என்று வீராப்புடன் மறுத்தவள் இனி கேன்டினில் சாப்பிட நேரம் இருக்காது என்று சொன்னதும் வீராப்பு சற்று மட்டுப்பட்டது மேலும் கடைசியாக அவன் சற்று கடுமையாக பேசியதும் அவள் கை தானாக அவளுக்கு வேண்டிய சாப்பாட்டை எடுத்து அவனுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

மஹிந்தன் அவள் செயலை மனதிற்குள் ரசித்து பார்த்தான் . நான் கடுமையாக பேசுவதையே இவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவளைப் போலவே அவள் மனதும் மிருதுவானதாக இருப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தவனின் உள்ளம் அவளிடம் நெருக்கமாக இருக்க அவளின் மென்மையை அவன் கைகள் அப்பொழுதே உணரவேண்டும் என்றும் பேராவல் கொண்டது. அப்படிச்செய்தால் அவள் தன்னைவிட்டு இன்னும் விலகிச்செல்ல முயற்சி செய்வாள் என்பதனை அறிவு கூற. எங்கே போய்விடப் போகிறாள் என்று மனதிற்குள் சொல்லி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு விழிகளில் அவளின் அழகை நிரப்பிக்கொண்டே அவள் சாப்பிடாமல் தட்டில் உள்ளதை கைகளில் வைத்துக்கொண்டு யோசனையுடன் இருப்பதைப் பார்த்தான்

கவிழையா சாப்பிட உட்கார்ந்து தட்டில் உள்ள சாப்பாட்டை சாப்பிடாமல் “இவன் கடுமையாக பேசியதற்கு பயந்து நாம் சாப்பிட ஆரம்பித்ததால் இவன் நம்மளைப்பற்றி ரொப்ப எளிதாக நினைத்துவிடுவானோ?” என்று யோசனை செய்துகொண்டிருப்பவளின் கவனம் ழையா! என்ற மஹிந்தனின் அழைப்பில் அவன் முகம் நோக்கியவள், என்ன? என்ற கேள்வி எழுப்பினாள்

சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு கிளைண்டிடம் எப்படி எக்ஸ்பிளைன் பண்ணலாம் என்று ஒரு குட்டி நோட்ஸ் எடுத்துக்கொள்வோம் என்று பேசி பிசினெஸ் விசயத்தில் அவள் கவனத்தைதிருப்பி சாப்பிட வைத்தான்.

அவள் சாப்பிட்டதும் அவளுடனான வேலையையும் அங்கிருந்தே முடித்துவிட்டு நேரம் பார்த்தான் அது 3;35 என்று காட்டவும் ழையா அந்த ரெஸ்ட்ரூம் போய் கொஞ்சம் ரெப்ராஸ் ஆகிக்கொண்டு வா நாம் போகும் நேரம் வந்துவிட்டது என்றான்.

அதற்கு மறுத்து நான் வெளியில் உள்ள ஸ்டாப் ரெஸ்ட்ரூமில் போய் ரெப்ரஸ் ஆகி வந்துவிடுகிறேன் பாஸ் என்று கூறி வெளியேற கதவினை நோக்கிச் சென்றவளின் பின்னால் அவனும் வருவதைப் பார்த்தவள் கேள்வியாக திரும்பி நோக்கினாள்

மஹிந்தன் அவள் பார்த்ததும் சிரித்துக்கொண்டே நீ எப்படி கதவை திறக்கிறாய் என்று பார்க்க வருகிறேன் பேபி என்று குலைந்து பேசினான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.