(Reading time: 8 - 15 minutes)

06. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"ப்பா!"-ஏதோ சிந்தனையில் இலயித்திருந்தவனை கலைத்தது இனிமையான மழலை குரல்!!

"என்னப்பா?"

"அம்மாவை பார்க்கணும்பா!"-என்ன கூறுவான் அவனிடம்??ஏதோ ஒன்றை தீர்க்க சென்று,புதியதோர் துயரம்!!

"விஷ்வா!டாக்டர்.கீதா உன்னோட அம்மா கிடையாது!"

"இல்லை...நீங்க பொய் சொல்றீங்க!அவங்க தான் என் அம்மா!"-மனம் மூடி புதைத்த காதலை அச்சிறுவன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தான்.

"இதோப் பாரு!உனக்கு அம்மான்னு யாரும் கிடையாது!நான் தான் உனக்கு அம்மா,அப்பா எல்லாம்!"

"இல்லை...நான் அம்மாவை பார்க்கணும்!"-அவன் கதறி அழ ஆரம்பித்தான்.

"சொல்றேன்ல!அடி வாங்க போறீயா?எதுக்கெடுத்தாலும் அடம் பிடிக்கிற?ஒருமுறை சொன்னா கேட்க மாட்ட?"-அவன் வெறுப்பில் கத்த,அம்மழலை சிலையாகி நின்றான்.

"ச்சீப்!"

"என்ன?"

"விஷ்வாவை கூட்டிட்டு போறேன்!"

"எங்கே?"

"டாக்டர்.கீதா,அவனை கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க!"-அவன் திடுக்கிட்டுப் போனான்.

"என்ன?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"கீதா!அவனை பார்க்கணும்னு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க!"

"அம்மா வர சொல்லி இருக்காங்களா?"-நிகழ்ந்தவை யாவையும் மறந்து சிரித்தான் அவன்.

"ஆமா கண்ணா!"

"போகலாம் அங்கிள்!"

"நீ காரில் போய் உட்காருப்பா!"

"ம்..."-மனம் புத்துணர்வு பெற்று புள்ளி மானாய் குதித்து ஓடினான் அவன்.

சில நொடிகள் ருத்ராவை கூர்ந்து கவனித்த மனோ,ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

உலகமே சுழன்றது அவனுக்கு!!எதற்காக அவள் இது போல செய்கிறாள்??மனம் குழம்பிப் போனது அவனுக்கு!!!

ந்த ஆலயத்தின் வெளியே வெகு நேரமாக காத்திருந்தாள் கீதா.

மனம் ஏதோ அசைப்போட்டு கொண்டிருந்தது!!

அவன் நிச்சயம் குழம்பி இருப்பான்!எனக்கு அவனைக் குறித்து துளியளவும் கவலை இல்லை.அவனை காண்பதற்கே வெறுப்பு கொள்கிறது மனம்!எனது ஆதங்கம் அனைத்தும் அந்த பாலகன் மேல் தான்!!வயது தொடங்கும் முதலே தாயை பிரிந்தவன்,பிரிந்ததும் நன்மைக்கே!!அவன் தந்தைக்கும் இலட்சியமே பிரதானம்!!அன்பிற்காக எவ்வளவு ஏங்கி இருப்பான்??என் தந்தையும் இதுபோன்ற சூழலை அல்லவா மீண்டு வந்தார்??ஏதோ சிந்தித்திருந்தவளின்,புடவை நுனி யாராலோ அசைக்கப்பட்டது.குனிந்துப் பார்த்தாள்!!அது அவளது மானசீக புதல்வன் தான்!!

"விஷ்வா!"-அவனருகே மண்டியிட்டாள்.

"அம்மா!"-அவளை அணைத்துக் கொண்டு அவளது கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.

"எப்படி இருக்க செல்லம்!"

"நீ எங்கே போன?ஏன் என்னை பார்க்கலை?"-எதிர் கேள்விக் கேட்டான் அவன்.

"ஏன் நீ வந்து அம்மாவை பார்க்க மாட்டியா?"

"நான் கேட்டேன்!அப்பா கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டார்!"-அவள் முகம் இறுகியது.

"திட்டினாரா?"

"ம்..."

"அவனுக்கு என்ன வேற வேலை!"-மனதுள் பொறுமியவள் வெளியே,

"சரி!இனி திட்ட மாட்டார்.நான் சொல்லிடுறேன்!"

"ம்..."

"வா!"

"இது என்ன இடம்மா?"

"நீ பார்த்தது இல்லைல்ல!இதுக்கு பெயர் கோவில்!"-என்றப்படி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

"இங்கே யார் இருப்பா?"

"கடவுள் இருப்பாரு!"

"அவர் யாரு?"-அவனது கேள்விகள் யாவும் இரசிக்க கூடியனவாக அமைந்தன.

"அவரா...!நமக்கு எல்லா பாதுகாப்பையும் தருகிறவர்!அவர்கிட்ட நியாயமா நீ எது கேட்டாலும்,அவர் உனக்காக அதை செய்துக் கொடுப்பார்!"

"நிஜமாவா?"

"ம்...கையை குவித்துக்கொள்!"-அவன் தன் கரத்தை தாமரை மொட்டென குவித்தான்.

"உன் மனசுல என்ன கேட்க தோணுதோ!அதைக்கேளு!அவர் செய்வார்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.