(Reading time: 9 - 18 minutes)

11. நிர்பயா - சகி

Nirbhaya

ழ்ந்த தியானம்..!மீண்டும் அமைதியை நாடி தவத்தில் மூழ்கி இருந்தாள் நிர்பயா.

மனதின் வேகம் மற்றும் உக்கிரம் சற்று தணிந்திருந்தது.

"கொஞ்சம் கூட இரக்கமே வரலைல்ல உனக்கு?இது எப்பேர்பட்ட அவமானம் தெரியமா?இப்போ சொல்றேன் நீ என் பொண்ணும் இல்லை.நான் உனக்கு அம்மாவும் இல்லை...எனக்கு இவர் தான் முக்கியம்!உன்னால,என்னை மீறி என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ!இந்த இழப்புக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும்!"-பல்லவியின் சாபம் செவிகளில் ஒலித்தது.

சட்டென விழிகளை திறந்தாள் அவள்.முகத்தில் அப்படி ஒரு சலனம்!!

இதுவரை அனுபவிக்காத சலனம்!!

"குட்டிம்மா!"-பார்வதியின் குரல் அவள் இதயத்துக்கு மருந்தானது.

"மனசு விட்டு அழுதுவிடும்மா!"-அவளிடம் கனத்த மௌனம்.

"இன்னும் வலிகளை தாங்க எனக்குள்ள சக்தி இருக்கு பாட்டி!இன்னும் தாங்கவும் நிறைய வலிகள் இருக்கு.மொத்தமா அப்பறமா அழுதுவிடுறேன்!நிம்மதியா..!"-என்றவள் பேசாமல் எழுந்து சென்றாள்.

அப்படி என்ன நிகழ்ந்தது??எதற்காக இவ்வாறு உரையாற்றுகிறாள்??காலதேவனை வேண்டி கால சக்கரத்தை பின்நோக்கி சுழற்றி பார்க்கலாம்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"மிஸ்டர் அர்ஜூன் குமார்!நீங்க உங்க வாதத்தை தொடங்கலாம்!"-உத்தரவிட்டார் நீதிபதி.

அதே சமயத்தில் தொலைக்காட்சிகளிலும் அந்நிகழ்வு நேரடியாக ஔிபரப்பானது.

"சுப்ரியா வழக்கில் இன்று இறுதிக்கட்ட தீர்ப்பு!நீதியை நிலைநாட்டுவாரா ஜோசப் வில்மட்?நேரடி ஔிபரப்பு!"-என்று பரவியது செய்தி.

"சுப்ரியா என்னும் மருத்துவ கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எனது கட்சிக்காரர் பிரதாப் குமார்.ஒரு சிறப்பொழுக்கம் மிக்க மருத்துவர் ஆவார்.குற்றம் நடந்த அதே சமயத்தில் அவர் தனது நண்பர்களோடு இருந்தார் என்பதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அதற்கடுத்த சில நேரங்களில் அவர் அமெரிக்கா சென்றதும் உண்மை!!இதை ஆதாரமாக்கி வழக்கை நடத்தினால்,அன்று கோவையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லவா??எனது கட்சிக்காரர் கல்லூரியில் ஒழுக்கமானவர் என்பதற்கான சான்றிதழ்களும் நீதிபதியான தங்களின் பார்வைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது."-நீதிபதி சில காகிதங்களை எடுத்து பார்த்தார்.

"சுப்ரியா என்ற பெண்ணை பற்றி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே அவர் அறிந்தார் ஒழிய,மற்றப்படி அவருக்கும் அப்பெண்ணுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை..ஆகையால்,பிரதாப்பின் மீது தொடுக்கப்பட்டுள்ள இப்பொய் வழக்கை உடனடியாக நீக்க கோரி என் வாதத்தை நிறைவு செய்கிறேன்!"-என்றார் அவர்.

"ஜோசப் உங்க கருத்துகளை நீங்க சொல்லலாம்!"-ஜோசப் ஒரு பெருமூச்சோடு எழுந்தான்.

"சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் தான் இன்னிக்கு நீதியை தீர்மானிக்குது!நியாயம் இல்லை..இந்த இடத்துல சுப்ரியா இழந்தது தன்னோட உயிரை மட்டுமல்ல!தன்னோட கனவுகளையும் சேர்த்து இழந்து இருக்கா!தன்னோட தனிப்பட்ட இச்சைக்கு இணங்காத ஒரே காரணத்துக்காக இந்த பிரதாப் ரொம்ப கொடூரமான முறையில் அவளை சித்ரவதை செய்து கொன்னுருக்கான்!இன்னிக்கு சமூகத்துல பல பெண்களோட நிலை இதுதான்!ஒரு ஆணோட சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய அவ பலவந்தப்படுத்தப் படுறா!ஒரு பெண்ணோட மானம் சீரழிய காரணம் அவளோட ஆடை அலங்காரம்னு சொல்லுது இந்ந சமுதாயம்!அது உண்மைன்னா,எதுக்காக சுப்ரியா மாதிரி பெண்கள் வாழ்க்கை நாசமாகணும்?தன்னோட தனிப்பட்ட சபலங்களை ஒரு பெண் மேலே திணிக்க கற்றது மட்டும் தான் மனித குலத்தோட ஒட்டுமொத்த வளர்ச்சி!!ஒருவேளை தன்மானத்தை காக்க ஒரு பொண்ணு ஆயுதம் ஏந்தினா,அவளை நிமிர விட முடியாதப்படி பல பழிச்சொற்கள்..."

"ஒரு ஆண் ஒரு பெண்ணை விட உருவத்தால் பலமாக படைக்கப்பட்ட காரணம்,அவளை பாதுகாக்க பலவந்தப்படுத்த அல்ல!இதுபோன்ற நிலை தொடரும் என்றால் மனித சமுதாயத்தின் ஒரு பாகம் வேரோடு அழியும் நிலையும் வரலாம்!தனக்கு மட்டும் தான் வலிகள் உண்டு என்று எண்ணம் பலரில் ஒரு சிலர் கூட பிறருக்கும் உணர்வுகள் உண்டு என எண்ணம் கொள்வதில்லை.ஒரு பெண் பலமில்லாதவள்,அவளை தன் விருப்பத்தின் படி பயன்படுத்தலாம் என்று எண்ணம் கொள்பவர்கள்,எந்த தைரியத்தில் தனக்கு இணை இவள் என்பவளிடத்தில் தன் பராக்கிரமத்தை காட்டி வீரத்தை நிலைநிறுத்த துடிக்கின்றனர் என்பது புதிரே!ஆணுக்கு பெண் நற்குணங்கள் எவ்விதத்திலும் சளைத்தவள் அல்ல!இங்கு வழங்க போகும் நீதியால் இனி இதுபோன்ற தவறுகளை ஒடுங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!குறித்த ஆதாரங்கள் சில தினங்களுக்கு முன்னரே தங்களின் பார்வைக்கு சமர்ப்பித்தாகிவிட்டது.மாண்புமிகு மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கும் தெரியப்படுத்தாகிவிட்டது.குற்றவாளிக்கான தண்டனையை மன்னிக்காமல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்!"-அவன் பேசி முடித்ததும் பலத்த கரகோஷம்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.