(Reading time: 20 - 40 minutes)

30. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ரௌத்திரம் மட்டுமே விழிகளில் எங்கும் நிறைந்து ஜெய்யை வதைத்துக்கொண்டிருக்க, அவனது கரம், தானாகவே அவன் அது நாள் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷத்தை தேடியது….

ஏனோ அது அவனது கரங்களுக்குள் அகப்படாமல் போக, சுற்றி முற்றி கீழே பார்த்தான் பைரவின் மேலிருந்து எழுந்துகொண்டு…

தவிப்பா? இல்லை துயரமா?... அவனது பார்வை கூர்மையாக அனைத்து இடங்களிலும் பதிந்தது…

பைரவின் அருகில் சென்று குமார் அவனை தாங்கிக்கொள்ள, இஷானோ ஜெய்யை தடுத்து பிடித்து நிறுத்த முயற்சித்தான்…

ஜெய்யோ, அவனை விலக்கிவிட்டுவிட்டு அங்கும் இங்கும் தேடினான்…

தலையை இரு கரங்களினாலும் அழுத்தி பிடித்துக்கொண்டு ஜெய் தன் பார்வையை சுழற்ற, அந்த பொக்கிஷம் அவன் கண்களுக்கு தட்டுப்படவே இல்லை கொஞ்சமும்…

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ………………………………….” என அவன் கண்களை மூடி கத்த, அவனின் அலறல் அங்கிருந்த அனைவருக்கும் மயிர்கூச்செரிய செய்தது பயத்தில்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

வெறிகொண்டவன் போல் அந்த வீட்டினுள் சென்று தனலாக இருந்த நிலத்தில் அவன் தன் கால்களை பதித்து தேட, அந்த நெருப்பின் தாக்கம் கூட அவனுக்கு வலிக்கவில்லை கொஞ்சமும்…

மண்டியிட்டு, கைகளால் தனலை முடிந்த மட்டும் தள்ளி தள்ளி அவன் தேட, அவன் விழிகளோ தன் பொக்கிஷத்தைக் காண துடித்தது பரிதவுப்புடன்…

அவன் எவ்வளவு பிரம்மபிரயத்தனம் செய்த போதும் அது அவன் கைகளுக்குள் சிக்காமல் போகவே, ஆத்திரமும், கோபமும் மேலும் கட்டுக்கடங்காமல் அவனுக்குள் எழுந்தது மீண்டும்…

முழங்காலிட்டபடியே கைகளை மேலே உயர்த்தி, அவன் தரையில் ஒரு நர்த்தனம் நிகழ்த்தி பம்பரமாய் சுழல, இஷானுக்கோ விழி விரிந்து போனது திகைப்பில்…

“தாத்தா… என்ன நடக்குது இங்க??.... சதி எங்கன்னு கேட்டா நெருப்பை கைகாட்டுறான்?... எரிஞ்சிட்டிருக்குற நெருப்பு மேல இப்படி ருத்ர தாண்டவம் ஆடிட்டிருக்கான்... இவனுக்கு எப்படி இந்த நாட்டியமெல்லாம் தெரியும்?... ஒருநாள் கூட ஜெய்யை நான் இதுபோல பார்த்ததில்லையே… அவன் கண்ணுல தெரியுற இந்த தவிப்பை என்னால பார்க்க முடியலையே தாத்தா… அவன் எதை தேடுறான்?.. சதியவா?... இல்லன்னா வேற எதையுமா?...”

இஷான் பிரம்மரிஷியிடம் தன் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்க,

அவரோ ஜெய்யைப் பார்த்துக்கொண்டே, “சிவா தேடுறது தன் உயிரை…” என்றார் குரலில் ஒரு கரகரப்புடன் அழுத்தமாக….

“உயிரா??????????......!!!!!!...... நீங்க என்ன சொல்லுறீங்க தாத்தா?... எனக்குப் புரியலை…”

“தன் உயிரையும் அதுக்கு சொந்தமான ஒரு பொருளையும் அவன் தொலைச்சிட்டான்… இப்போ அதை தேடுறான்…”

“என்ன!!!!!!!!!!!!!!... தொலைச்சிட்டான்னு நீங்க சொல்லுறது சதியைத்தானா?............”

இஷான் அதிர்ச்சியோடு கேட்க, பிரம்மரிஷியோ பதில் சொல்லவில்லை…

“சொல்லுங்க தாத்தா… சதிக்கு என்னாச்சு?... அவ எங்க இருக்குறா?... சொல்லுங்க….”

தைஜூ அவரின் முன்பு கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்க, அந்நேரம், வானத்தில் சூழ்ந்திருந்த கருமேகங்களை விட அதிகமாய் அந்த வீட்டை சுற்றி புகை மண்டலம் தென்பட்டது…

ஜெய்யின் தாண்டவம் அங்கே ஒரு பெரும் புழுதியையே கிளப்பிவிட்டிருந்தது…

வீட்டின் பின்புறம் இன்னமும் எஞ்சியிருந்த நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, வீட்டின் முன்புறமோ ஜெய்யினால் ஒரு கரும்புகையே எழுப்பவிடப்பட்டிருந்தது…

நெருப்பும், புகையும் மாறி மாறி மற்றவர்களின் கண்களுக்குத் தென்பட, ஜெய் மட்டும் அவர்களின் பார்வை வளையத்திற்குள் தென்படவில்லை…

“தாத்தா எதாவது செய்யுங்க… எனக்கு பயமாயிருக்கு…”

தைஜூ அவரிடம் வேண்ட,

“நடந்த செயலை மாற்றும் வல்லமை உலகத்தில் யாருக்கும் இல்லை…. எனினும் அது நடக்கும்போது அதன் போக்கை மாற்றிடும் திறன் அந்த பரம்பொருளுக்கு அன்றி வேறு யாருக்கும் சாத்தியமன்று….”

சற்றே அழுத்தத்துடன் அவர் கூற, திகைப்பில் ஆழ்ந்து போனாள் தைஜூ….

அவர் சொல்வதின் அர்த்தத்தினை புரிந்து கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு…

“ஆ………………” என்ற அலறல் ஜெய்யிடமிருந்து வந்த தருணம், வானிலிருந்து கேட்ட இடி முழக்கம் அங்கிருந்தவர்களுக்கு திகிலை உண்டு பண்ணியது அதிகமாய்…

குமார், பைரவினை மெல்ல எழுப்பி அங்கிருந்து அழைத்து செல்ல முயற்சி செய்ய, இருவரின் முன்பும் வந்து குதித்து நின்றான் ஜெய்…

குமாரின் கண்கள் அதிர்ச்சியோடு கிலியையும் பிரதிபலிக்க, பைரவோ எழுந்து கொள்ள முடியாமல் தவித்தான்….

இஷானோ, நம்ப முடியாத திகைப்புடன் ஜெய்யையே விழி விரிய பார்த்தான்…

“அ…..ண்……………………………………..”

அதற்கும் மேல் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே நின்று கொள்ள, ஊமையாகி போனவளாய் பார்த்தாள் தைஜூ ஜெய்யினை…

பிரம்மரிஷியின் திறந்திருந்த விழிகளுக்குள், ஜெய் தற்போது நிற்கும் கோலம் தென்பட, அவர் கால்கள் தானாகவே எழுந்து கொண்டது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.