(Reading time: 12 - 23 minutes)

"ருத்ரா!உன் வாழ்க்கையை விட்டு போயிட்டான் கீதா!நிரந்தரமா போயிட்டான்.நீ அவனுக்காக உருகுறதுல எந்தப் பயனும் இல்லை.தேவையில்லாம,ஒரு குழந்தையோட மனசுல தவறான எண்ணத்தை பதிய வைக்காதே!"

"விஷ்வா உடைந்திடுவான் தாத்தா!"

"அதான் ஆதியிலே அவனைவிட்டு விலக சொல்றேன்!ருத்ரா உனக்கானவன் இல்லை."

"எனக்கு பரத் மேலே எந்த ஈடுப்பாடும் இல்லை!"

"அப்போ கல்யாணம் பண்ணிக்கோ!"

"ஆனா..விஷ்வா??"

"அவன் அப்பாக்கும் உனக்குமே எந்த தொடர்பும் இல்லைன்னு சொல்றேன்!அவன் பையனைப் பற்றி பேசுற?"

"தாத்தா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

"இந்த வீட்டுல இருக்கிறவங்க உன் பேச்சுக்கு கட்டுப்படலாம் கீதா!ஆனா,நீ எனக்கு கட்டுப்பட்டவ!மது இந்நேரம் இருந்திருந்தா,இதை ஆதியிலே வேரோட கிள்ளி இருப்பா!நான் அந்த வேரை கவனிக்காம விட்டுட்டேன்!"

".............."

"இனி,உன் வாழ்க்கையை நான் தான் தீர்மானம் பண்ணப் போறேன்!அந்த ருத்ரா இனி உன் வாழ்க்கையில எந்தச் சூழலிலும் நுழைய விட மாட்டேன்!"-உறுதியாக எடுத்துரைத்தார் சரண்.

இரு தினங்கள் கழித்து...

"ம்..சீக்கிரம் எல்லாம் தயாராகட்டும்!பையன் வரப்போறான்!அவனுக்கு பிடித்ததெல்லாம் செய்து முடிச்சாச்சா?"-ராகுலின் ஆணை சில மணிநேரமாக அந்த வீட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

தனது அறையில் கற்சிலையாய் அமர்ந்திருந்தாள் கீதா.

"அக்கா! மாப்பிள்ளை சார் உனக்காக ஆஸ்ரேலியாவில இருந்து கடல் கடந்து வரார்!"

"..............."

"இனி கொஞ்ச காலம் உன் கூடவே தான் இருக்கப் போறார்!நல்லா லவ் பண்ணுங்க!ஆனா,பையன் நம்ம தமிழ்நாட்டு கல்சர்ல வளர்ந்தவன் இல்லை!அதனால,தாத்தா அவன் கூட உன்னை பழக விடாம தடுக்கலாம்!"

"அம்மூ கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?"

"ஓ...தங்கள் வருங்கால மன்னவரைக் குறித்து குறை கூறினால்,மகாதேவிக்கு கோபம் வருகிறதா?"-விளையாட்டாக அவள் ஆற்றும் காரியம் அனைத்தும்,கீதாவிற்கு வலிகளையே தந்தன.

"அதுவும் நம்ம கார்த்திகேயன் அங்கிளோட பையன்!கொஞ்சம் யோசித்துப் பார்...இவரும்,முருகா!முருகான்னு புலம்பிட்டு இருப்பாரோ?இல்லைன்னா,இன்னோஸண்ட்டா??

அம்மா செல்லம்னு கேள்விப்பட்டேன்!"

"ஆரா!கொஞ்சம் என்னை தனியா விடுறீயா?"

"ம்ஹூம்!முடியாது..முடியாது!ச்சே...அப்பாக்கிட்ட போட்டோ கேட்காம விட்டுட்டேனே!"-அவள் வருத்தப்பட்டு கொண்டிருந்த சமயத்தில்,

"சிவா வந்துட்டான்!"என்ற குரல் கேட்டது.

"ஐ...மாமா வந்துட்டாரு!நான் போய் பார்த்துட்டு வரேன்!"என்று ஓடினாள் ஆராத்யா.

கீதாவிற்கு புவி வாழ்வே வெறுத்துப்போனது.

வருகிறவன் தன் ஆருயிர் தந்தையின் பிரிய மித்திரரான கார்த்திகேயனின் புதல்வன்!சிறு வயதில் ஒருமுறை அவனை பார்த்திருக்கிறாள்..!அச்சத்தின் உறைவிடம் அவன்.

(சரியாக கூறினாள் தயிர்சாதம்!)

அவனே இன்று அவளுக்கு எமனாவான் என்று அவள் துளியும் சிந்திக்கவில்லை.

அவள் மனம் முழுதும் ருத்ராவின் நினைவுகளே வட்டமிட்டு கொண்டிருந்தன.அவள் சிந்திக்கட்டும்,நாம் போய் நாயகரை கண்டு வரலாமே!!

வேகமாய் ஆனந்தமாக ஓடி வந்த ஆராத்யா,அதிர்ந்துப் போய் சிலையாய் நின்றாள்.அவளது விழிகள் தாமரை இதழாய் விரிந்தன.எதிர் நிற்பவன் நல்ல ஆறடி உயரத்தில்,கட்டுக்கோப்பான தோற்றத்தில்,யாவரையும் முதல் பார்வையிலே ஈர்க்கும் புன்னனகையுடன்,கண்களில் மின்னும் குறும்போடு,கம்பீரமான ஒரு தோற்றத்தோடு இன்னும் குறித்துக் கூறினால்,ஒரு தேவலோக ராஜகுமாரன் தான் இறங்கி வந்தானோ என்று எண்ணம் கொள்ளும் அளவிற்கு சர்வ லட்சணமாய் இருந்தான்.

புன்னகைத்தப்படி தத்தம் பெரியோர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்தான் அவன்.

"ஏ..!"-ஆர்யாவின் இரண்டாவது அழைப்பில் சுயநினைவை அடைந்தாள் அவள்.

"அப்பா!இவர்தான் கீதா அக்காவை கல்யாணம் பண்ணிக்கப் போறாரா?"

"ஆமா!"

"செம ஹேண்ட்சம்பா!"

"ஏ...அவன் உனக்கு மாமா முறைடி!"

"என்ன பண்றது?நமக்கு இவரை மாதிரி கொடுத்து வைக்கலையே!"-அவள் துக்கப்பட,எதேர்ச்சையாக சிவாவின் பார்வை அவளை அடைந்தது.அவன் விழிகளை சுருக்கி அவளை உற்று நோக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.