(Reading time: 12 - 23 minutes)

"ம்மளை தான் பார்க்கிறானா??"-திருதிருவென விழித்தாள் அவள்.மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னேறினாள்.

"ம்..ஆரா?"-கேள்வியை தொடுத்தான் சிவா.

"ம்!"-மேலும் கீழும் தலையசைத்தாள்.

"அடையாளமே தெரியலை!நல்லா வளர்ந்துட்ட!"

"ம்??"

"என்ன ம்???நீ சிவாவை பார்த்தது இல்லை..சிவா உன்னை பார்த்திருக்கான்!"

"என்னப்பா சொல்றீங்க?"

"ம்!!ஆமா அம்மூ!சிவாக்கு நம்ம எல்லாரையும் தெரியும்!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

"ஆஸ்ரேலியாவுல இருந்தா இந்தியாவை மறக்கணுமா என்ன?"-அடுத்த வினாவை தொடுத்தான்.ஆராத்யாவிற்கு அவனது பேச்சு,நடவடிக்கை யாவும் பிடித்துப்போனது.

"சரி சிவா!நீ போய் ரெஸ்ட் எடு!"

"ஓ.கே.அங்கிள்!நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறேன்!"

"கெஸ்ட் ஹவுஸா?ஏன்?"

"இல்லை..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறேன்!"-அவனது கண்ணியமான விலகல்,ராகுலின் மனதில் ஒருவித நிம்மதியை பதிய வைத்தது.

"சரிப்பா!ஆனா,நீ ரெஸ்ட் எடுக்க மட்டும் தான் கெஸ்ட் ஹவுஸ் போகணும்!மற்ற நேரமெல்லாம் இங்கேயே தான் இருக்கணும்!"

"சரிங்க அங்கிள்!"

"முருகா!தம்பியோட பெட்டி எல்லாம் எடுத்துட்டு போய் வை!"

"இல்லை..பரவாயில்லை!நானே எடுத்துக்கிறேன்!"

"அட வாங்க தம்பி!எங்க கீதாம்மாவை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க!உங்களுக்கு இதைக்கூட செய்ய மாட்டேனா?"-பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னேறினார் முருகன்.

ஒரு புன்னகை ஒன்றை விடுத்து,யாவரிடமும் விடைப்பெற்று புறப்பட்டான் சிவா.

விளங்குவது என்ன?இதுவரை காதலைக் குறித்த விவாதங்கள் பல நிகழ்ந்தேறின.ஆனால்,காதல் தோல்வியினை குறித்த விவாதங்கள் நிகழ்ந்த இடங்கள் சொற்பமே!!காதல் என்பது ஏன் தோல்வியடைய வேண்டும்??மனிதனாகப்பட்டவன் சுதந்திரமானவன்.சுதந்திரம் அவன் ஆன்மாவோடு ஒன்றானது!!தான் எவ்வழி செல்ல வேண்டும் என்பதினை மனிதனே தீர்மானம் செய்கிறான்.காதல் என்பது வேதங்கள் கூறும் ஆறு பாவங்களில் ஒன்றோ!நேரத்தைக்  கடத்தும் செயலோ அல்ல!காதல் என்பது ஒரு ஆன்மாவின் அடிப்படை தேவையாகும்.இக்கோட்பாட்டினை மையமாக்கியே மனிதனுக்கு ஏதேனும் ஒரு வகையில் காதல் என்ற அன்பினை இறைவன் பிராப்தம் அளிக்கிறான்.ஆனால்,நிகழ்வது என்ன??மனிதனின் சில சங்கல்பங்களால்,சபதங்களால்,பிறரின் வற்புறுத்தலால்,ஆணவத்தால்,அகங்காரத்தால் காதல் என்ற புண்ணியம் மண்ணில் சாய்க்கப்படுகிறது.அது சாய்க்கப்படும் வலியினை சகிக்க இயன்றவர்கள் அகிலத்தில் இல்லை.ஏன் காதல் என்பது களங்கம் ஆனது?ஒரு மனிதனின் தனிப்பட்ட அகங்காரமே அதற்கு காரணம்.

நான் ஏன் அவனிடமோ அல்லது அவளிடமோ மன்னிப்பு கோர வேண்டும்?தவறென்ன என்னுடையதா?அவனோ,அல்லது அவளோ எனக்கு சமமானவளா?என் புதல்வனோ அல்லது புதல்வியோ எனது அனுமதியின்றி எவ்வாறு தன் துணையை தெரிவு செய்யலாம்??இப்படிப்பட்ட வரனுக்கா அல்லது வதுவிற்கா எனது மகனோ அல்லது மகளோ மாலையிட வேண்டும்??அவனோ அல்லது அவளோ எனக்கு வெறும் பொழுதுபோக்கே நான் ஏன் அன்னவருக்காக உருக வேண்டும்?மேற்கூறிய கேள்விகள் காதல் தோல்வியின் விடைகளாகும்!!ஒருமுறை காதல் புரியும் முன் காதலர்கள் இது தங்கள் பெற்றோரின் ஆசியை பெறுமா?அல்லது சாபத்தை பெறுமா?என்று எண்ணங்கள்..அதே போல்,இந்தக் காதலை பிரித்தால்,நான் உருவாக்கிய உயிருக்கு ஆன்ம நிம்மதி கிட்டுமா?இல்லை..குற்ற உணர்ச்சி கிட்டுமா?என்று பிள்ளைகளை ஈன்றவர்களும் சிந்தித்துப் பாருங்கள்!காதல் அப்போதாவது தனக்கு கிட்டும் அவமானத்திலிருந்து முக்தி பெறட்டும்!!

ருத்ராவின் நெஞ்சில் சாய்ந்தப்படி உறங்கிக் கொண்டிருந்தான் விஷ்வா.

அந்த இளம் தந்தையின் கரங்கள்,தன் புதல்வனின் கேசத்தை கோதிக் கொண்டிருந்தன.நினைவுகளோ எங்கோ வட்டமிட்டு கொண்டிருந்தது.

மூன்று மாதம் தான் இருக்கும்!அப்போது விஷ்வா ஜெனித்து வெறும் மூன்று மாதங்கள் தான் இருக்கும்!!

அன்று தனது இல்லத்தில் இருந்தப்படி,ஏதோ அலுவலக கோப்புகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா.

அப்போது திடீரென்று அலறிய அவன் கைப்பேசி அவன் கவனத்தை கலைத்தது.

"ஹலோ!"

"ருத்ரா!அம்மா பேசுறேன்பா!"

"..............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.