(Reading time: 5 - 10 minutes)

01. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

ழகிய கதிரவன் தன் செங்கதிரை உலகமெங்கும் பரப்பி விடியலின் வருகையை பறை சாற்றினான் ............ அனால் கதிரவனின் முயற்சி எதுவும் நம் ஹீரோ விடம் பலிக்காது , ஏன்னு கேக்குறீங்களா ஏன்னா அவரை பொறுத்தவரை அவரது தூக்கத்தை யாராலும் கலைக்க முடியாது ஒருவரை தவிர.......

தூங்கி கொண்டு இருந்த மகனின் அழகை ஆராய்ந்தார் மாதவி  (ஆமாங்க நீங்க நெனச்சது கரெக்ட் இவர் தான் ஹீரோவோட அம்மா)

கருங்கூந்தல் திருந்திய புருவம் நேர் நாசி, தூங்கும் போதும் புன்னகையுடன் தவழும் உதடு, ஆண்களுக்கே உரிய மாநிற தோற்றம் ............(இது தான் நம்ம ஹீரோ description)

தீபு எந்திரி டா டைம் ஆச்சு டா இன்னைக்கு உனக்கு மீட்டிங் இருக்குல்ல ....

ஹ்ம்ம் அம்மா 2 மினிட்ஸ் நானே எந்திருச்சுக்குறேன் ......

டேய் படவா அடி வாங்குவ இப்டியே சொல்லி மணி 7:30 ஆச்சு எந்திரி கெளம்பு கெளம்பு .............

என் செல்ல அம்மால ப்ளீஸ்.....

எனக்கென்ன நீ மீட்டிங் லேட்டா போனா அப்பா திட்டுவாங்க மா எந்திரி

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஏம்மா காலங்காத்தால அவரை பத்தி பேசி மூட ஸ்பாயில் பண்ற நான் எந்திரிச்சுடுறேன் .

ஹ்ம்ம் அது நல்ல பிள்ளைக்கு அழகு ....

சேரி இந்தா இந்த காபிய குடி ....

அம்மா எப்பவும் போல உங்க காபி சூப்பர் , ஓகே மா நான் குளிச்சிட்டு கீழ டிபன்கு வந்துடறேன்.

சேரி பா நான் போய் டிபன் ரெடி பண்ணறேன் .... உன்ன கெளப்புறத்துக்குள்ள மணி 8 ஆச்சு இதுவே இந்து இப்போ இங்க இருந்தானா இந்த வேலைலாம் அவ பாத்துக்குவாள்ல.

அம்மா ப்ளீஸ் விடு Mr மகேஷ் நெனச்சது நடந்திருச்சு அப்பறோம் அந்த தியாகச்செம்மல் என்ன பத்தி நெனைக்கமா போய்ட்டாங்க சோ அவங்கள பத்தி நான் கவலை பட போறதில்லை.

சேரி டா தீபா  அப்போ இந்த போட்டோ இங்க என்ன பண்ணுது ,

புன்னகையுடன் சென்றான் மகன் "அம்மா அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் "

சேரி போ அப்புறம் உன் சரி பாதி எனக்கு lecture கொடுக்க ஆரம்பிச்சிருவாரு டைம் ஆயிருச்சு.

"மாதவி டிபன் ரெடியா"

இதோ வந்துட்டேங்க 2 மினிட்ஸ் நீங்க வந்த உடனே தோசை சுட்டு தரேன்  சாமி கும்புட்டிங்கன்னா வாங்க "

ஹ்ம்ம் வரேன் மா பக்கத்துல ஒருத்தங்களை பாத்துட்டு வந்துடறேன்.

சரிங்க

"மாது இன்னைக்கு மீட்டிங்கிற்கு உன் சீமந்திர புத்திரனை ஒழுங்கா அட்டென்ட் பண்ணிட்டு வர சொல்லு நான் இன்னைக்கு ஆபீஸ் போகல புது கிளைன்ட் பாத்து பேச சொல்லு"

தப்பிச்சேன் என்கிற செய்கையை செய்து தாயிடம் செல்ல குட்டு ஒன்றையும் வாங்கிக்கொண்டு வேளைக்கு கிளம்பினான் தீபு என்னும் தீபக் கிஷோர் . இவன் ஒரு பொறியியல் பட்டதாரி அனால் அவனோ தன் தந்தையின் தொழிற்சாலையில் manufacturing டிபார்ட்மென்ட் ஹெட் ஆக இருக்கான்

அன்றைய மீட்டிங் அவனுக்கு திருப்பு முனையாக இருக்க போவதை தெரியாமல் எப்பொழுதும் அவனிடம் இருக்கும் துள்ளல் நடையுடன் கிளம்பி வந்து அவனது ஹோண்டா சிட்டி காரை கர்ரேஜில் இருந்து கிளப்பி கொண்டு சென்றான் அவன் எப்பொழுதும் ரசித்து கேட்கும் ஆண்ட பாடலை கேட்டுக்கொண்டு

தே நேரம் ஆப்பிள் போன்ற முகமும்

திராட்சை விழிகளும் என்னுடன் சிரிக்க வா என்று அழைப்பது போன்ற புன்னகை மாறாத உதடுகளும் ஒரு அழகிய பெண்ணின் உருவம் அவளது உதடுகளோ

"ஏனோ வானிலை மாறுதே

மணித்துளி போகுதே

மார்பின் வேகம் கூடுதே

மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

..."

என்னும் பாடலை முணுமுணுத்துக்கொண்டே  தனது ரெனால்ட் காரை சென்னை ட்ரபிக்கில் லாவகமாக ஓட்டி சென்று மது manufacturers கம்பெனி பிரைவேட் லிமடைட் என்னும் பெயர் பலகை கொண்ட மாபெரும் கட்டிடத்தின் முன் நின்றது .

"முருகா நான் யாரோட நிம்மதிக்காக இந்த இடத்தை விட்டு சென்றேனோ இன்று அவர் நல்லதுக்காகவே இங்க வந்திருக்கேன் ஆனா நான் சொல்றத அந்த கிறுக்கு ஒதுக்குமா எப்பவுமே ஒரு முரண்டு புடிச்சது தானே இப்போ இதனை வருசத்துக்கு அப்புறம் மாறிருக்குமா???"என்ற பெரிய சந்தேகத்துடன் முருகா காப்பாத்து " என்று தனக்கு தானே கூறி கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாள் இந்து ஆமாங்க  இவ தான் நம்ம மாதவி அம்மா சொன்ன இந்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.