(Reading time: 11 - 21 minutes)

22. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ராகுல், மிதுன், அர்ஜுன் மூவரும் ராகுல் வீட்டிற்கு செல்ல, அங்கே ராகுல் அம்மா, அப்பா இருவரும் காத்து இருந்தனர்.

உள்ளே சென்றவுடன் “ஹாய்.. மா, ஹாய் அப்பா..” என்று இருவரையும் கட்டிக்கொண்டான் ராகுல்.

“ராகுல் , நல்லா இருக்கியா ? “ என்று வினவிய அவன் அம்மா,

மிதுன், அர்ஜுன் இருவரையும் பார்த்து “அர்ஜுன் எப்படிப்பா இருக்க ..? மிதுன் உன் friend வந்தா தான் இந்த பக்கம் வருவியா?” என வினவ,

ராகுல் “டேய்.. மிதுன்.. என்னடா.. இது அம்மா , அப்பாவ வந்து அடிக்கடி பார்கிறேன்ன்னு சொன்ன? இப்போ அம்மா இப்படி கேட்கறாங்க..?” என்று அவன் முதுகில் அடித்தான்

“டேய்.. ஏண்டா.. எதிரி கிட்ட காட்ட வேண்டிய வீரத்தை என் முதுகில் காட்டிட்டு இருக்க.. ? அம்மா உங்களுக்கு என் மேலே என்ன கோவம் ... ? போன வாரம் வந்து பார்த்தேன் தானே.. ..” என்று ராகுலிடம் ஆரம்பித்து அவன் அம்மாவிடம் முடிக்க,

அவன் அம்மாவோ “ராகுல் அவன ஏண்டா அடிக்கிற? நான் ரெண்டு நாள் முன்னாடி அவனுக்கு பிடிச்ச ஸ்வீட் செஞ்சுருந்தேன்.. வரசொல்லி சொன்னேன்.. அதா தான் கேட்டேன்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

“டேய்.. அம்மா கூப்பிட்டும் நீ வரலையா ? உனக்கு எவ்ளோ தைரியம்?” என்று மீண்டும் அவன் அருகில் வர,

இப்போது உஷாராக தள்ளி நின்று “அம்மா.. நான்தான் இன்னிக்கு வந்து வாங்கிகறேன்னு சொல்லிருந்தேன் லே. உங்க பிள்ளை கிட்ட ஏன் என்னை மாட்டி விடறீங்க?”

“உன்னை மாட்டி எல்லாம் விடல மிதுன்.. என்னமோ அன்னிக்கு ராகுல் நினைப்பாவே இருந்தது. சரி உன்னை பார்த்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும் நு வரசொன்னேன்.. “

இதற்குள் ராகுல் அப்பா “சரி. .சரி .. வந்த பிள்ளைங்க கிட்டே பேசிட்டே இருக்கியே.. குடிக்க, சாப்பிட எதாவது கொடுமா..” என,

“அட .. ஆமாம்.. அர்ஜுன் உனக்கு என்னப்பா கொடுக்கட்டும்.. ? டீ இல்லை காபி ..? மிதுன் உனக்கு டீ தானே..?” என்று கேட்டார்.

“இல்லைமா.. ஒன்னும் வேண்டாம். அம்மா அங்கே காத்துகிட்டு இருப்பாங்க.. நாங்க நேரா இவன இறக்கி விட வந்துட்டோம்.. அப்பாக்கு அங்கே parade நடந்துட்டு இருக்கும்.. நாங்க கிளம்பறோம் ம்மா..”

“அது எல்லாம் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டா.. நான் பேசிக்கிறேன்.. “ என்றபடி உள்ளே திரும்ப,

அர்ஜுன் மீண்டும் “இருக்கட்டும் ம்மா.. நான் எங்கே போக போறேன்.. ? சாப்பிடவே வரேன்.. இப்போ வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிட்டு , அப்பா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கணும்.. அவர் வேற ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பிடுவார்... அதான் .. ப்ளீஸ்.. “

“ஏன்பா அர்ஜுன்.. ? நீ அப்படியே வீட்டிற்கு அப்பா கூட போய் இருக்கலாம் லே.. பாவம் அவ்ளோ தூரம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு அவர தனியா விட்டுருக்கீங்க.. நான் கூட வந்து ராகுல்  பிக் பண்ணிருப்பேன் லே..”

“அது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.. உங்களுக்கு தெரியாதா, நாங்க வர ட்ரைன் untimeலே வரும்.. நீங்க யாரும் கஷ்டபடவேண்டாம்னு, நாங்க எப்போவுமே மிதுன் கூட வந்துடுவோம்னு.. இன்னிக்கு என்னவோ அப்பா கிளம்பி வந்துட்டார்.. அதான் எப்பவும் போலே இவனை விட்டுட்டு உங்களையும் பார்த்தது போலாம் நு வந்தேன்.”

“சரிப்பா.. நீங்க கிளம்புங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப வாங்க..” என்றபடி வழியனுப்பி வைத்தனர்.

அர்ஜுன், மிதுன் இருவரும் கிளம்பவும் , ராகுல் தன் பெற்றோர்களிடத்தில் வந்து பேசிக் கொண்டு இருந்தான்.

பிறகு அவன் அம்மா கொடுத்த டீ குடித்து விட்டு, தன் அறைக்கு சென்று படுத்தான்.. அவனுக்கு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. அவன் நினைவு முழுதும் நிஷா வை சுற்றியே.. இப்போ நிஷா என்ன பண்ணுவாள்? இன்னிக்கே ஊருக்கு கிளம்பிடுவாளா? மனம் பர பர என்று இருந்தது.

இத்தனை நாள் அவளிடம் தன் காதலை சொல்லாவிட்டாலும், அவள் தன்னோடு தான் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது காதலை பகிர்ந்து கொண்ட பிறகு அவள் அருகில் இல்லாமல் இருப்பது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

என்னடா .. இது tenage பையன் போல் இப்படி தவிக்கிறேனே.. என்று அவனை அவனே கேலி செய்து சிரித்தான். கொஞ்ச நேரம் இப்படியே யோசித்து விட்டு, இரண்டு நாள் அலைச்சலில் உடல் அதுவாக அசந்து, தூங்க ஆரம்பித்தான்..

அவன் தூங்கி விட்டானா என்று பார்க்க வந்த அவன் அம்மாவிற்கு, அவனின் சிரிப்பும், தனக்குதானே பேசுவதும் .. என்ன ஆச்சு இவனுக்கு என்ற யோசனை தோன்ற ஆரம்பித்தது. பிறகு அவனே சொல்லுவான்.. என்று விட்டு விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.