(Reading time: 7 - 14 minutes)

12. நிர்பயா - சகி

Nirbhaya

வள் மனம் சற்றும் தன் தாயின் சாபத்தினை ஏற்கவில்லை.முழுதாக ஒரு வாரம் ஓடி இருந்தது.

"பிரதாப்பின் அந்திம கிரியையின் போது இன்னும் பல சாபங்களை என் மேல் வீசி இருப்பர்!"-என்ற எண்ணம் மனதில் பரவியது.

அவளுக்கான ஆறுதல் எங்கும் கிட்டவில்லை.உண்மையில் வாழ்வை விடுக்கும் எண்ணமே அவளுக்குள் உதித்தது.இதற்கு மேல் வாழ்ந்து என்ன செய்ய போகிறோம்??என்றெல்லாம் ஓர் எண்ணம்.ஆனால்,வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம்!!காரணம்,ஜோசப்!!தன் மீதான அவனது காதல் பறி போகுமாயின்,அவன் வாழ்வனைத்தும் நொறுங்கி போகலாம்.என்ன செய்வான் அவன்??

உண்மையில் அவனும் பச்சிளம் குழந்தை தான்!!சிறு வயது முதல் எவ்வித அன்பும் கிட்டாமல் வளர்ந்தவன்,உன்னிடத்தில் என் தாயன்பை ஸ்பரிசிக்கின்றேன் என்றல்லவா கூறினான்??மனம் ஒடுங்கி போனது அவளுக்கு..!அவனுக்கு அடுத்ததாக,எட்வர்ட்..!

"அண்ணி!உங்களுக்கு குழந்தை பிறந்தாலும்,நான் தான் உங்களுக்கு முதல் குழந்தை சொல்லிட்டேன்!"-என்றவனின் கூற்று நினைவில் எட்டிப் பார்த்தது.என் மீது அக்கறை கொண்ட இருவர்,இன்னும் எஞ்சி உள்ளனரே..!எனை வளர்த்தரை நீங்கி எவ்வாறு விண்ணுலகம் அடைவேன்??என்றெல்லாம் ஓர் எண்ணம்!!

"இறைவனுக்கு என் மீது இரக்கம் என்பது எப்போதும் சுரக்காதல்லவா??"-அவள் மனம் ஒடுங்கி நின்றது.

"ஹனி!"-கண்களை துடைத்தாள் அவள்.

"தாத்தா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"என்னாச்சு?ஏன் அழுற?"

"நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா தாத்தா?"-முதலில் அவளது கேள்வி அவருக்கு விளங்கவில்லை.

"ஓ...உன் கல்யாணத்தை பற்றி சொல்லுறீயா?அட கிறுக்கு பயப்புள்ள..எங்கே போயிட போற?இங்கே தானே வாழப்போற?அந்தப் பயக்கிட்ட சொன்னா உடனே உன்னை கூட்டிட்டு வர போறான்.இல்லை..நான் வரப்போறேன்!"-நிர்பயாவின் மனம் வலித்தது.

"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் தாத்தா!"

"ஜோசப்பை தானே பார்க்க போற?நைட் ஆயிடுத்து!ஒண்ணும் வேணாம்!"

"இல்லை..அவரை பார்க்க இல்லை..சும்மா போயிட்டு வரேன் ப்ளீஸ்!"-அவள் இதுவரை இதுபோன்று வேண்டியதில்லை.அவளது குரலில் தொனிந்த இயலாமையை வைத்தியநாதன் கவனிக்க தவறவில்லை.

"போயிட்டு வாம்மா!"-மறுமொழி உரைக்காமல் சம்மதித்தார் அவர்.

அவளும் மறுபேச்சு பேசவில்லை.அமைதியாக நழுவிக் கொண்டாள்.

"என்னவாயிற்று இவளுக்கு?ஜோசப்புடன் ஏதேனும் மனகசப்பா?அதற்கும் வாய்ப்பில்லையே..!"-என்றவர் அறியவில்லை.அன்று தான் தனது பெயர்த்தியை இறுதியாக காண போகிறோம் என்று!!

ஜோசப்பின் மனதினில் தொடர்ந்து சஞ்சலங்கள் தாக்கிக் கொண்டே இருந்தன.நிர்பயாவிடம் கடந்த ஒரு வாரமாக அவன் ஸ்பரிசித்த மாற்றம்.அவளது விலகல்.

"என்னவாயிற்று அவளுக்கு?என்னிடமிருந்து ஏதோ மறைக்கிறாள்.ஆனால்,என்ன அது?ஏதேனும் சங்கடம் நிகழ்ந்திருக்குமோ?அது உண்மையானால்,அதை உருவாக்கியவர் யார்??அவளை உடனடியாக பார்த்து இதை தெளிவுப்படுத்துவது அவசியம்!!"-என்றவன் தன் கைப்பேசியை எடுத்து,அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹலோ!"-என்ற குரல் நிச்சயம் அவள் அல்ல!!

"அம்மூ?"

"தம்பி நான் பார்வதி பேசுறேன்பா!"

"பாட்டி??அம்மூ இல்லை?"

"இல்லை..அவ எங்கேயோ வெளியே போயிருக்காப்பா!

"இந்த நேரத்துலயா?"

"ஆமாப்பா!கொஞ்ச நேரத்துல வந்துடுவா வந்ததும் போன் பண்ண சொல்றேன்!"

"சரிங்க பாட்டி!"-என்றவன் இணைப்பை துண்டித்தான்.

"நிச்சயம் ஏதோ நிகழ்ந்திருக்கிறது!அவள் இதுபோன்ற இரவு நேரங்களில் தனித்து செல்பவள் இல்லை.அதுவும் சிறிது காலம் தனித்து எங்கும் செல்லாதே என்று என் வாக்கை மீறி சென்றிருக்கிறாள் என்றால்..நிச்சயம் இது சரியல்ல!"-அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க இயலவில்லை.தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

மணி ஒன்பதானது!!ஒன்பதரை ஆனது!!அவளிடமிருந்து எந்த தகவலுமில்லை.

"எங்கு சென்றிருப்பாள் அவள்?அவளுக்கு எந்த தீங்கும் நேர அனுமதிக்க மாட்டேன்.""-அவன் இதயம் தாறுமாறாய் துடித்தது.அடிமனதில் அப்படி ஒரு அச்சம்!!மழை வேறு நன்றாக பொழிந்துக் கொண்டிருக்க,பல தடைகள் வந்து சேர்ந்தன அவனது தேடலில்!!மணி பதினொன்றானது!!இன்னும் அழைப்பு வரவில்லை.

என்ன செய்வான் அவன்??கோபத்தோடு காரில் இறங்கியவன் ஓங்கி பூமியை மிதித்தான்.விழிகளில் நீர் கசிய ஆரம்பிக்க,அவன் மனதிற்கு அடர்ந்த கடும் இருளில் வழிக்காட்டியது ஆகாயத்தின் மின்னல் ஔி!!தூரத்தில் ஒரு கார் அந்த பெரிய மரத்தில் மோதி நொறுங்கி இருந்ததை அந்த மின்னல் ஔியால் அவன் கண்டான்.மறைந்திருந்த அச்சம் மீண்டும் அவனது இதயத்துக்குள் குடி பெயர்ந்தது.உடல் எல்லாம் நடுங்க,டார்ச்சை எடுத்துக் கொண்டு அந்த காரை நோக்கி நடந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.