(Reading time: 17 - 33 minutes)

11. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

தீர்வில்லா வழக்குகளின் நியாயம் நீ!!!

Marbil oorum uyire

பெரிய டான்சரா உலகமே பாராட்டும் படி வருவே” தன் பாதம் பணிந்து நமஸ்கரித்த அபூர்வாவை அணைத்து உச்சி முகர்ந்தார் சுசீலா.

பொங்கல் அன்று குழந்தை அபூர்வாவிற்கு நாட்டியப் பயிற்சியை தொடங்கிய சுசீலா அவரது கொள்கை படி ஓர் மாதம் முடியும் முன்னரே ரத்னாவதி விஜயகுமாரிடம் முறைப்படி குரு தட்சணை பெற்றுக் கொண்டு பயிற்சியை தொடங்கினார்.

“அபி நாட்டியத்தை ரொம்பவும் உள்வாங்கி உணர்ந்து ஆரம்ப அடவுகளிலேயே அவ்ளோ நேர்த்தியா பக்தி லயத்தோட ஆடுறா. கண்டிப்பா ஒரு நாள் பேரும் புகழும் பெற்று நமக்கெல்லாம் பெருமை தேடித் தருவா”

சுசீலா இவ்வாறு சொல்லவும் விஜயகுமாருக்கு அளவிலா பெருமையும் சந்தோஷமும்.

“டான்ஸ்க்கு தனியா டிரஸ் எப்போ தைக்க குடுக்கணும். சலங்கை சிதம்பரத்திலேயே ஆர்டர்  செய்திடலாம். இன்னும் என்ன என்ன தேவை என்று லிஸ்ட் போட ஆரம்பித்து விட்டார்.

“விட்டா உன் அண்ணா நாளைக்கே மகளுக்கு அரங்கேற்றம் செய்யணும்னு சொல்வார் சுசி” ரத்னாவதி கேலி பேசியபடியே கணவரை முறைத்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

“அண்ணா இப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். நம்ம தமிழ் சங்கத்திலேயே தைப் பூச திருவிழா போது மேடை ஏற்றிடலாம். அரங்கேற்றம் எல்லாம் பத்து பன்னிரண்டு வயசிலே செய்யலாமண்ணா”

“அப்படியா. இன்னும் ரெண்டு வருஷம் வெயிட் பண்ணனுமா என் பொண்ணு மேடையில் ஆடுறத பார்க்க” சற்றே வருத்ததுடன் சொன்னார் விஜயகுமார்.

“ஒரே மாசத்திலே கூட மேடையில் ஆட வைக்கலாம். ஆனா அது பூரணமாக இருக்காது. அபிக்கு நாட்டியத்தின் மேல் ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கு. அவளோட பர்ஸ்ட் பர்பார்மன்ஸ் பேர் சொல்லும் படி இருக்க வேண்டாமா”

சரி தான் என்று ஒத்துக் கொண்டார் விஜயகுமார்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடன வகுப்புகளை நடத்தினார் சுசீலா.

“சனி ஞாயிறு கட்டாயம் கிளாஸ் கிடையாது. பிள்ளைங்க லீவ் நாளை நல்லா என்ஜாய் செய்யணும். அன்னிக்கும் கிளாஸ் வச்சா அவங்களுக்கு அலுப்பும் நாளைடைவில் வெறுப்பும் வந்திடும்”

சுசீலா என்னவோ அப்படி ஒரு கொள்கை வைத்திருந்தாலும் அபூர்வா அதை எல்லாம் பின்பற்றுவாதாய் இல்லை.

தினமும் மாலை வேளைகளில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் அபூர்வா சித்தார்த் இருவரும் வீட்டுப் பாடங்களை விரைவில் முடித்து விடுவர்.

நடன வகுப்புகள் இருக்கும் நாட்களில் ரத்னாவதி அபி நிலாவோடு சித்தார்த் வீட்டிற்கு வந்து விடுவார். அபி நடனம் பயிலும் வேளைகளில் சித்தார்த் நிலாவை தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று அவளோடு விளையாடிக் கொண்டிருப்பான். ரத்னாவதி லலிதாம்பிகையோடு பேசிக் கொண்டிருப்பார். வகுப்பு முடிந்ததும் அபியும் சித்து நிலாவோடு சேர்ந்து கொள்வாள்.

பி சொன்னா கேளுமம்மா. டாடி எப்போ வருவாங்களோ தெரில. இப்போதைக்கு அத்தை சொல்ற மாதிரி சிம்பில்லா டிரஸ் சலங்கை வாங்கிக்கலாம்”

மூன்று ஆண்டுகள் உருண்டுவிட்டிருந்த நிலையில் அபூர்வா மேடையில் நடனம் ஆடும் அந்த தருணமும் வந்தது. அச்சமயம் விஜயகுமார் வடகிழக்கு மாநிலங்களில் எல்லை பாதுகாப்பில் பிரச்சனை வரவே அங்கு தற்காலிக பணியில் அமர்த்தப் பட்டிருந்தார்.

விழாவிற்கு இன்னும் பதினைந்து தினங்களே இருந்த போது நாட்டிய உடை மற்றும் அலங்கார அணிகள் சலங்கை முதலியவற்றை வாங்கி விடலாம் என சுசீலா தெரிவித்தார்.

“டாடி சிதம்பரத்துல வாங்கி தரேன்னு சொல்லிருக்காங்க” அடம் பிடித்தாள் மகள்.

“அரங்கேற்றம் போது கிராண்டா வாங்கிக்கலாம் அபி” சுசீலா சமாதானம் செய்ய முற்பட்டார்.

முடியவே முடியாது என்று ஒரே பிடிவாதமாக இருந்தாள். அபூர்வா வீண் பிடிவாதம் செய்யும் குழந்தை அல்ல. எதையும் இலகுவாக எடுத்து கொள்ளும் பாங்கு, மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் அடிப்படையிலே அமைந்திருந்தது. ஆனால் தந்தையின் சொல்,அவர் மீதான நம்பிக்கை எனும் போது அவள் பிடிவாதம் அசைக்க முடியாத ஒன்று.

அன்றைய நிலையில் சித்தார்த் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் விஜயகுமாரிடம் இருந்து தகவல் வந்தது உடனடியாக மெட்ராஸ்க்கு வருமாறு.

“எல்லோருக்கும் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடறேன். நான் வர முடியாது. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” கிருஷ்ணமூர்த்தி இரு குடும்பத்தினருக்கும் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து தரவே அனைவரும் சென்னை சென்றடைந்து பத்மா வீட்டில் தங்கிருந்தனர்.

பூர்வா சித்தார்த் வந்ததும் காவ்யா மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். தன் நட்பு வட்டத்தில் “என்னோட ரிலேடிவ்ஸ் தில்லி ல இருந்து வந்திருக்காங்க” அபூர்வாவையும் தனது உறவு என்று பெருமையாக சொன்னாள்.

“காவ்யா ரொம்ப மாறிட்டா. முன்ன மாதிரி பிடிவாதம் எல்லாம் இல்ல. எல்லோர்கிட்டேயும் ரொம்ப அன்பா இருக்கா” பத்மா சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

விடுமுறை போதெல்லாம் பத்மா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தில்லி வந்துவிடுவார். காவ்யாவும் அபூர்வாவும் நெருங்கிய தோழிகள் ஆகியிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.