(Reading time: 9 - 17 minutes)

31. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ன்னோடு ஒன்றிக்கொண்டவளை தன் நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக்கொண்டவனுக்கு இத்தனை நாள் தனக்குள் எரிந்து கொண்டிருந்த அந்த நெருப்பு இப்போது தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது போல் தோன்றியது…

அவனது அணைப்பு அவளுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் பரிசளிக்க, ஆண்டாண்டு காலமாய் அதற்காய் காத்திருந்தது போல் அவனை விட்டு விலக மறுத்தாள் அவள்…

அவளின் கண்ணீர் பட்டு நெஞ்சில் ஈரம் உணர்ந்த ஜெய், சட்டென தன் இரு கரங்களிலும் அவளின் முகம் பற்றிக்கொண்டவன், அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்…

அதில் தெரிந்த ஒருவகை மகிழ்ச்சியும், அவளது விழி ஓரம் விழப்போவதற்கு தயாராக இருந்த கண்ணீரும் தென்பட, அந்த ஒற்றைத்துளி கண்ணீரினை தன் விரல்களினால் துடைத்து எடுத்தவன், அவளைப் பார்த்த போது, ஒருவித தயக்கமும், கேள்வியும் அவளது முகத்திலும், விழிகளிலும் காணமுடிந்தது அவனால்….

மெல்ல அவளின் முன்பு, தன் கரத்திலிருப்பதை அவன் நீட்ட, அவளுக்கு சுவாசம் எகிறியது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ருத்ரன்……..”

“நான் உன் ருத்ரன் மட்டும் தான்…. யுகம் யுகமாய் உனக்காகவே காத்திருக்கும் இந்த பொக்கிஷம் உன்னை சேரும் நாள் தொலைவில் இல்லை….”

அவன் சொல்லி முடித்ததும், எகிறிய சுவாசத்துடிப்பு அவளுக்குள் பல மாற்றத்தை உண்டுபண்ண, அவனின் மார்பில் மீண்டும் தஞ்சம் புகுந்தாள் அவள் வெட்கத்துடன்…

இதழின் ஓரம் துளிர்த்த சிரிப்புடன், தன்னை சேர்ந்தவளை அணைத்துக்கொள்ள, அவன் கரம் உயர்த்தியபோது, சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த இடியும், மின்னலும், அவர்களுக்கு நிகழ்காலத்தினை உணர்த்த,

சட்டென அவனிடமிருந்து அவளும், அவளிடமிருந்து அவனும் விலகினார்கள்…

விலகியவள் ஏனோ சுற்றும் முற்றும் பார்க்க, அவளின் கண்களில் தென்பட்டார்கள் இஷான், தைஜூ, பிரம்மரிஷி மற்றும் அவளுக்கு உதவி செய்தவன்…

அனைவரும் அவளையே வியப்பாய் பார்த்திருக்க, அவள் நேராக தனக்கு உதவி செய்தவனிடம் வந்தாள்…

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை… நீங்க செஞ்ச உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்… ரொம்ப நன்றிண்ணா….”

அவள் குரல் தழுதழுக்க அவனிடம் கூற, அவனின் அருகில் வந்தான் ஜெய்…

“என் உயிரையே மீட்டுக்கொடுத்திருக்க அருண்…. காலம் முழுமைக்கும் உன்னை நான் எப்பவும் மறக்க மாட்டேன்…..” என ஜெய் கூற,

“அய்யோ என்ன சார் இது.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க… நீங்க எனக்கு செஞ்ச உதவியில இது கொஞ்சம் கூட பெரிசில்லை… ஆனா நீங்க உங்க உயிர்னு அவங்களை சொல்லும்போது தான், நான் செஞ்ச அந்த சின்ன உதவி எவ்வளவு பெரிய நல்லது செஞ்சிருக்குன்னு எனக்கு புரியுது… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்…. நீங்க இரண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்… கல்யாணத்துக்கு சீக்கிரம் கூப்பிடுங்க சார்… கண்டிப்பா வருவேன்….”

அருண் மனம் நிறைய சொன்னதும் யோசனையுடன் ஜெய்யின் பார்வை சதியின் மேல் விழ, அவளோ நிலம் பார்த்துக்கொண்டிருந்தாள்…

“நிச்சயமா அருண்…” என்றவன், மீண்டும் அவனுக்கு தன் நன்றியினை கூறிவிட்டு சதியிடம் திரும்ப, அவளோ அமைதியாக நின்றாள்…

“சதி……”

அவன் அழைப்பு மென்மையாக அவளின் செவிமடலை வருட, தேகம் சிலிர்த்தது அவளுக்கு…

“என்னைப் பாரு சதி….”

அவன் மீண்டும் அவளை அழைக்க, அவள் தலை நிமிரவே இல்லை…

அவளின் கரம் பற்ற தன் கரங்களை அவன் உயர்த்திய நொடியே, என்ன நினைத்தானோ சட்டென தன் எண்ணத்தை கைவிட்டுவிட்டு,

“நீ எனக்குள்ள வந்த நொடியிலிருந்து, கொஞ்ச நேரம் முன்னாடி வரை, அதை நான் யார்கிட்டயும் தெரியப்படுத்திக்கிட்டதில்லை… உன்னை விட்டு ஒதுங்கி போனதுக்கு சில காரணங்கள் இருக்கு… ஆனா இனி எந்த காரணத்துக்காகவும் உன்னை விட்டு ஒதுங்கி போக நான் தயாரா இல்லை…” என்றவன் தன் ஒற்றை விரலால் அவளின் முகம் நிமிர்த்தி அவளின் விழிகள் பார்க்க,

அதில் தெரிந்த காதல் அவனை மலைக்க வைத்திருந்தது… சந்தோஷமா, அழுகையா, வரம் கைசேர்ந்த நிம்மதியா, இல்லை வேறெதுவுமா?... இனம் பிரித்து அவனால் கண்டுகொள்ளமுடியவில்லை…

அனைத்தும் ஒருசேர அவளின் விழிகளில் அவன் காண,

தன் பொக்கிஷத்தை எடுத்து அவளின் முன் காட்டி, “இது உன்னை சேர வேண்டியது, என்னைப்போல…” என்றதும்,

சட்டென அவளுள் ஓர் அதிர்வு எழுந்து அவளை ஆட்டிப்படைக்கியிலே,

ஜெய் தன் மார்பினை சுட்டிக்காட்டி,

“இங்க நீ மட்டும் தான் இருக்குற… இத்தனை நாள் நான் இதை சொல்லலை… அதுக்கு சில காரணம் இருக்கு… ஆனா இன்னைக்கு இதை நான் முழுமனசோட எந்த வித தயக்கமும் இல்லாம சொல்லுறேன்… ஆமா… நான் உன்னை விரும்புறேன் சதி…”

என அவன் சொல்லி முடிக்கையில், அவளுக்குள் எங்கும் பரவியது காதல் பரவசம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.