(Reading time: 14 - 28 minutes)

01. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

 

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

 

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை

சோர்வில்லை, தோற்பில்லை

நல்லது தீயது நாமறியோம்

நாமறியோம் நாமறியோம்

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

காலை பத்து மணிக்குரிய பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது சென்னையின் முக்கிய பகுதியான தாம்பரம்..தன் டூவீலரை அந்த பெரிய வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக்..வழக்கமாய் வருபவன் என்பதால் அவனை பார்த்து சிநேகமாய் சிரித்தார் அந்த வீட்டின் செக்யூரிட்டி..பதிலுக்கு அழகாய் சிரித்துவிட்டு முன்னோக்கி நகர அதுகுள்ள அவரோட க்விக் இன்ட்ரோ பாத்ருவோம் வாங்க வாங்க..கார்த்திக் பேரை கேட்ட உடனே கவுதம் மேனன் படத்துல வர ஹீரோ மாறி இமஜின் பண்ணிறாதீங்க..28 வயது இளைஞன்..சீ.ஏ முடித்துவிட்டு ஆடிட்டராக பணிபுரிபவன்..நடுத்தர குடும்பத்தின் பொறுப்பான மூத்த மகன்…பொறுப்பிற்கேற்ற சுட்டிதனமும் உண்டு ஆனால் அவனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் மட்டும்…மாநிறம் கூர்மையான மூக்கு.காந்தமாய் கண்கள்..வயதிற்கேற்ற துறுதுறுப்பு தெரியும் அதில்..அவனை அடுத்து இரட்டையர்களான தம்பி ஷ்ரவன்,தங்கை ஷரவந்தி..அப்பா மோகன் ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்..அம்மா கீதா அழகான குடும்ப தலைவி..இவ்வளவு தான் இவனின் உலகம்..அளவான வருமானம் அமைதியான குடும்பம் இதுதாங்க இவரோட பேக்ரவுண்ட்..ஓ.கே கம்மிங் டு தி பாய்ண்ட்..இப்போது இவன் வந்திருப்பது அவனின் முக்கியமான க்ளையண்ட் பிரபல துணிக்கடை ஓனர் சேகர்ரின் இல்லத்திற்கு..வாரமொரு முறை இவ்வாறு வீட்டிற்கு வந்து ஆடிட்டிங் வேலை செய்து கொடுத்துவிட்டு போவான்..மற்ற யாருக்கும் அவன் இதை செய்வதில்லை..சேகர் மிகவும் பண்பானவர் அத்தனை பணக்காரனாக இருந்தாலும் ஒரு முறை கூட அவர் பேச்சில் அந்த திமிர் இருந்ததில்லை..இன்னும் சொல்லப் போனால் கார்த்திக்கிற்கு அவர் ஒரு நல்ல வெல் விஷ்ஷர்..அவன் தொழிலின் ஆரம்ப காலத்தில் அதன் நிறை குறைகளை கூறி யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை எடுத்து கூறுவார்..அவர் மீது அவனுக்கு எப்போதுமே தனி மரியதை உண்டு…இருப்பினும் அதற்காக அவரிடம் எந்த உரிமையும் எடுத்து கொண்டதில்லை..(ஓவர் பில்டப்பா இருக்கே..ஸ்ரீ கொஞ்சம் அடக்கி வாசி..சரி வாங்க உள்ளே என்ன நடக்குதுநு பாப்போம்..)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஹாலில் நுழையும் போதே நின்னை சரணடைந்தேன் பாடல் ஏதோ அறையில் ஒலித்து கொண்டிருக்க அதில் ஒரு நொடி மனதை பதித்தான்..பாரதியார் பாடல்களின் மீது அவனுக்கு என்றுமே அதிக ஈடுபாடு உண்டு..சட்டென சுதாரித்தவன்..என்னதிது புதுசா பாட்டுலா கேக்குது இதுக்கு முன்னாடி இப்படி இருக்காதே..பாடலை தாண்டி ஏதோ ஒரு அமைதி நிலவுவதாய் உணர்ந்தான்..என்னவோ சரியில்லயே..

சார்..

……..

சேகர் சார்..

…….

யாரும் வருவதற்கான அடையாளம் இல்லாமல் போக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்..அடுத்த நொடி அவன் மேல் வருணபகவான் தன் ஆசிகளை பொழிந்தார்..அதாங்க நம்ம ஹீரோ மேல யாரோ தண்ணிய கொட்டிட்டா..கோபமாய் மேலே பார்த்தவனின் கண்களில் பதிந்தாள் அழகிய தேவதை..

இதுக்குதான் இதெல்லாம் வேண்டாம்நு சொன்னேன் என்ற சேகரின் குரலில் நினைவிற்கு வந்தவன் சட்டென பார்வையை திருப்பினான்..அதற்குள் அந்த தேவதை வேகமாய் கீழிறங்கி அவனை நோக்கி வந்து சாரி ரியலி சாரி..நா என் பிரதர் வரேன்னு சொல்லிருந்தான்..அவன்னு நினைச்சு..எக்ட்ரீம்லி சாரி..என கண்களில் குறும்பு மின்ன ஆனால் உண்மையான வருத்தத்தோடு கேட்டாள்..

இட்ஸ்..ஓ..கே..

வா கார்த்திக் சாரீப்பா நீ எப்பவும் 11 மணிக்கு தான வருவ அதான் இவ ஏதோ சொன்னாலேநு..தப்பா எடுத்துக்காதப்பா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.