(Reading time: 26 - 52 minutes)

07. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

 

வர்கள் இருவரும் காரைவிட்டு இறங்கியதும் கவிழையா தன் அப்பாவை பார்த்து ஓடிச் சென்று கைகளைப் பிடித்தவள், அப்பா என்னப்பா எதற்கு என்னை வரச்சொன்னீர்கள்? என்று கேட்ட பிறகே அவள் இருக்கும் இடத்தைப் பார்த்தாள் .

அது பத்திரம் பதியும் அலுவலகமாக இருந்தது, அங்கு அவள் அப்பா மற்றும் அவருடன் இன்னும் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர் .அவர் பக்கத்தில் இருந்த நபரிடம் என் மகள் கவிழையா என்று அறிமுகப்படுத்தினார் .

அந்த நபரின் அருகில் இருந்தவன் கதிர் , .அவன் ஈஸ்வரனிடம்“சார் இவர் தான் மஹிந்தன் ,உங்கள் வீட்டைவாங்கப்போகிறவர்”.என்று மஹிந்தனை ஈஸ்வரனுக்கு அறிமுகப்படுத்தினான்.

ஈஸவரன் மஹிந்தனனை நேரில் பார்ப்பது அதுவே முதல் தடவை ,மேலும் அவன் தன் மகளுடன் வந்து காரில் இறங்கிய விதமும் அவள் அருகில் நின்றிருந்த உடல் மொழியும் தன் மகள் கவிழையாவை அவனுடையவள் என்று பறை சாற்றும் விதமாக இருந்ததை அவர் சுத்தமாக விரும்பவில்லை.

எனவே, ‘’கவி இந்தப்பக்கம் வா” என்று கூறி அவளை தன் மறுபக்கம் நகர்த்தப் பார்த்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஆனால் மகிந்தனுக்கு அவரின் உரிமையான செயல் மிகவும் பொறாமைப் படுத்தியது .அப்பொழுது மனதுக்குள் அவள் அப்பா என்றாலும் நான் இருக்கும் போது ழையாவிடம் உரிமையாக பேசக்கூடாது என்று கோபம் ஏற்பட்டது .

அதனால் மிஸ்டர் ஈஸ்வரன், ழையா இப்பொழுது என்னுடன் வந்துள்ளாள் .மேலும் உங்கள் வீட்டை எங்கள் இருவர் பேரிலும் ஜாய்ன்டாக எழுதிகொடுக்கப் போகிறீர்கள் அதற்கு கையெழுத்திட என்னுடன் ழையா இருக்கவேண்டும் என்று கூறி அவள் கைப்பிடித்து ரெஜிஸ்டரிடம் கூட்டிச்சென்றான்.

அவன் கூறியதைக் கேட்ட கவிழையா, அப்பா என்னப்பா நடக்குது இங்கே என்று மஹிந்தனுடன் போய் கொண்டே கேட்டாள்.

ஈஸ்வரனுக்கு என்ன சொல்வதென்றே அப்பொழுது புரியவில்லை. தன் மகளை தானே அவனிடம் கொண்டுசெல்லும் நிலைமையில் விட்டுவிட்டோமே என்று நொந்து போய் அவர்களின் பின்னால் நடந்தார்.

கவிழையாவிற்கு தன் அப்பா தன்னை இயலாமையுடன் பார்ப்பதைப் பார்த்தவள் அவரும் எதோ ஒரு வகையில் மகிந்தனின் சூழ்ச்சியில் மாட்டியிருப்பதை புரிந்துகொண்டு மஹிந்தனுடன் நடந்தாள்.

ரெஜிஸ்டார் மகிந்தனைப் பார்த்ததும் எழுந்து வாங்க வாங்க என்று கூறி பின்னால் இருந்த இரண்டு மாலையை எடுத்து கொடுக்க கைகளில் பெற்றுக்கொண்டவன் ழையாவிடம் இதை வைத்திரு என்று கூறினான்.

அவன் கொடுத்த மாலையை கையில் வாங்கும் போது கவிழையாவிற்கு தன் மீது பிளாஸ் அடித்ததுபோல் தோன்றியது.

அதன் பின் மஹிந்தன், கவிழையா இருவரும் பத்திரத்திலும் அலுவலக கோப்புகளில் சில இடங்களிலும் கையெழுத்து போட்டனர் . கவிழையாவிற்கு அங்கு என்ன நடக்குது என்றே மூளை வேலை செய்யமுடியாத அளவில் குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

கையெழுத்து போட்டபின் மஹிந்தன் மிகவும் சந்தோசமாக ஐம்பது லட்சம் பணத்திற்கான காசோலையை ஈஸ்வரனிடம் கொடுத்தவன் சிரித்தபடியே அங்கிள் அந்த சுப்ரமணி வாங்கிய இரண்டுகோடி லோன் பணத்திற்கு நீங்கள் கவலைப்படவேண்டாம் . அவரின் மில்லை நான் வாங்கியதால் முழுவதுமாக கட்டிவிட்டேன் இனி உங்களுக்கு வங்கியில் எந்த பிரச்சனைகளும் இருக்காது என்று கூறினான்.

அவருக்கு தன் மகளை நிமிர்ந்து பார்க்க முடியாத வகையில் குற்ற உணர்வு தாக்கியது.

அப்பொழுது மஹிந்தனுடைய போன் மணி அழைத்தது. அதனை எடுத்து பார்த்தவன் சொல் மதுரா என்றான் “.தங்கை மதுரா கூறியதை கேட்டவன்” இப்பொழுதே வீட்டிற்கு வா என்று கூப்பிட்டால் எப்படி என்னால் வர முடியும்? நான் என்ன வேலை வெட்டி இல்லாத ஆளா? என்று கோபமாக கூறியவன், பின்பு சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பேன் என்றவன் தொடர்பை துண்டித்தான்.

அவனுக்கு ழையாவை அப்பொழுது அவள் அப்பாவிடம் விட்டு போக மனம் இல்லை .எனவே ஈஸ்வரனிடம் நான் ழையாவை கூப்பிட்டுக்கொண்டு ஆபிஸ் போகிறேன் கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூட்டிக்கொண்டு சென்றான்.

ஈஸ்வரனுக்கு தன் இயலாமையை நினைத்து தன் மேலேயே வெறுப்பு தோன்றியது. அவர் தளர்ந்த நடையுடன் தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

மஹிந்தன், தன் காரின் டிரைவர் மூர்த்தியிடம் கார் கீயை வாங்கியவன் ஆபீஸ்ற்கு பஸ்ஸில் வந்து சேர் நான் முன்னால் போகிறேன் என்று கூறினான். பின்பு ழையாவிடம் முன்பக்க கதவை திறந்து உட்கார் என்று கூறினான் .

கவிழையா தன் தந்தையின் சோர்ந்த நடையை பார்த்தவண்ணம் காரில் ஏறிக்கொண்டாள். அவள் மனதிற்குள் பெறும் புயல் அடித்துக்கொண்டிருந்தது அவளுக்கு நடக்கும் எல்லாவற்றிர்க்கும் ஏன்? எதற்கு? என்று காரணம் முழுமையாக தெரியாவிட்டாலும் தானும் தன் குடும்பமும் மஹிந்தனால் பெரிய சுழலில் சிக்கியதைப் போல் உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.