(Reading time: 12 - 24 minutes)

08. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

னதினை இயலாமை தாக்கும் சமயம்,உடலும் மனமும் ஒரே நேரத்தில் சோர்வுற்று மனிதனை நிலைக்குலைய செய்யும்.ஆம்..!இப்போது கீதாவும் அதே நிலையில் தான் இருக்கிறாள்.அவளால் ருத்ராவினை மறக்கவும் இயலவில்லை,சிவாவை ஸ்வீகரிக்கவும் இயலவில்லை.இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கும் பெண் மனதினை விளக்கிக் கூறவும் ஒருவரது துணையும் அங்கில்லை.

எந்த ஒரு இரத்த சம்பந்தமும் இல்லாத சமயத்திலும்,விஷ்வாவின் மீது அவள் கொண்ட நேசம்!!அது,இன்னும் அவளை பலவீனமாக்கியது!!ருத்ராவின் மீதிருந்த காதலை காட்டிலும்,விஷ்வா மீதான பாசம் அவளை இன்னும் நரகத்தில் தள்ளியது.அவன் உண்மையில் தனது காதலை அழிக்கவில்லை என்பதற்கு தான் ஈன்ற புதல்வனுக்கு சூட்டிய நாமமே தகுந்த ஆதாரமாகி இருந்தது.ஆம்...!காதலித்த காலத்தில்,திருமணத்திற்குப் பின்,தங்களுக்கு பிறக்க இருக்கும் வாரிசுக்கு,'விஷ்வா!'என்று நாமம் அளிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம்!!தங்கள் இருவரின் சங்கமம் கைக்கூடா சமயத்திலும்,அவன் அவ்விருப்பத்தினை நிறைவேற்றியுள்ளான்.முதல் முறையாக அச்சிறுவனின் ஏக்கத்தினை காணும் பட்சத்தில் உயிரே ஒடுங்கிப் போனது அவளுக்கு!!எதற்காக,அவன் தன் காதலுக்கு தகுதியில்லாத நங்கையை ஏற்றான்??கள்ளம் கபடமில்லாத அக்குழந்தையின் இதயம்,முதன்முறையாக கிட்டிய பெண்ணின் அன்பினை தாய்மையாக ஏன் ஏற்க வேண்டும்???இவ்வாறு பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன அவளுக்கு!!மனம் தான் ஈனா புதல்வனைக் காண விழைந்தது!!ஆனால்,அது எவ்வாறு சாத்தியம்??இனி ருத்ராவின் நிழும் உன்னை தீண்ட அனுமதியேன் என்ற பாட்டனாரின் சபதம்!தனது கடந்தக்காலத்தை அறியா தந்தையின் மனம்!இவ்விரண்டும் பிரதான வாயில்களாக உருமாறி,அவள் வெளியேறும் பாதையை அடைத்திருந்தன.இதில்,போதா குறைக்கு கடல் கடந்து வந்திருக்கிறான் ஒருவன்!!மனதில் ஒருவனை வைத்து,வாழ்வில் ஒருவனை எவ்வாறு சுமப்பாய் என்றது அவள் மனம்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது!நாம கடைசி வரைக்கும் சேர முடியாது கீதா!நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு தான்!என்னை மன்னித்துவிடு!"-இறுதிவரை உடன் இருப்பேன் என்று கூறி,பாதியில் சென்றவனின் மீது அவளுக்கு குரோதமே வளர்ந்தது.

மறுநொடியே தாயன்பு பெறாத அவன் புதல்வனின் ஏக்கம் அவள் கண்முன் விளையாடியது!

"அக்கா!"

"............."

"அக்கா!"

"ம்..??"

"என்னக்கா?என்னாச்சு?என்ன யோசிக்கிற?"

"ஆ..ஒண்ணுமில்லை!தலைவலி அதான்!"

"சரியாப் போச்சு!என்னக்கா?மாமாவை பார்க்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா?அவரும் உன்னை பார்க்க எந்த முயற்சியும் செய்ய மாட்றார்!"

"..............."

"அக்கா!நீ ரொம்ப லக்கிக்கா!மாமா எவ்வளவு நல்லவர் தெரியுமா! இந்தக் காலத்துல இப்படி ஒருத்தனான்னு யோசிக்க தோணுது!"

"ஆரா!"

"பழைய விஷயத்தை எல்லாம் மறந்துடுக்கா!ருத்ரா உனக்கு ஏற்றவன் இல்லை!அவன் போயிட்டான்!இனி வர மாட்டான்."

"................"

"நிஜ வாழ்க்கைக்கு வாக்கா!உனக்கு இப்போ நல்ல வாழ்க்கை அமையப் போகுது!நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!சிவா இவ்வளவு நல்லவரா இருப்பார்னு!கல்யாணத்துக்கு சம்மதிக்கா!"

"ஆரா ப்ளீஸ்! என்னை தனியா விடு!"

"எத்தனை நாள்?உனக்கு இருக்குற அவகாசம் மூணு மாசம் தான்!"

"என்ன?"

"ஆமா!"

"மூணு மாசத்துக்கு அப்பறம்,உனக்கும் சிவாக்கும் நிச்சயம் நடக்கப்போகுது!அடுத்த ஒரு வாரத்துல கல்யாணமும் நடக்கப்போகுது!"-அவள் திடுக்கிட்டு போனாள்.

"நீ அதுக்குள்ள உன் கடந்தக்காலத்தை விட்டு வெளியே வரணும்!மனசு விட்டு இரண்டு பேரும் பேசுங்கக்கா!உனக்கு நிச்சயம் அவரை பிடிக்கும்!"-கீதாவின் நிலை பரிதாபத்திற்கு உரியதே!!அவள் வாழ்வில் இப்படி எல்லாம் ஏன் சோதனை வர வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு!!!

விருந்தினர் இல்லத்தில் இருக்கும் அந்த அறையில் தனிமையில் நின்று எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான் சிவா.அந்த அறையில் மெல்லிய வயலின் இசை பரவி இருந்தது!இயற்கையாக இசையின் மீது அதீத நாட்டம் கொண்டவன் அவன்!!அன்று அவன் மனதில் எழுந்த அலைகளை கட்டுப்படுத்த,இசையை முகமூடியாக்க எண்ணினான்.ஆனால்,அவனது முயற்சி தோல்வியில் முடிந்தது.அங்கிருந்த டிராவினை திறந்தவன்,அந்தப் புகைப்படத்தினை கையில் எடுத்தான்.அதில்,சிறு வயதில் கீதா தன் பாட்டனாரோடு அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.