(Reading time: 8 - 15 minutes)

மாரி பழ மொழி இருக்குதேன்னு அர்த்தம் தெரியாம உளறக்கூடாது..... பழமொழில வர்ற அடி கடவுளோட பாதம்.... நீ சொல்ற அடி வேற... மணி சொல்றது கரெக்ட்தான் இந்த மாதிரி அரசியல்வாதிங்ககிட்ட வேகத்தைவிட விவேகம்தான் சிறந்தது.....”

“தங்கச்சி நீ சொல்ற கடவுளையே பாதி எடத்துல கமிஷன் இல்லாம பார்க்க முடியறதில்லை.... சரி அதை எல்லாம் விடு.... இன்னும் எத்தனை நாள் இப்படியே விவேகம், விவேகம்ன்னு உக்கார்ந்துட்டு இருக்கறது.... தெருவுல இறங்கி போராடினாதான் நமக்கு நியாயம் கிடைக்கும்.....”

“நீயும், நானும் இறங்கி போராடினா போலீஸ் கையால லட்டி சார்ஜ்தான் கிடைக்கும்.... நியாயமெல்லாம் கிடைக்காது.....”, மணி கடுப்புடன் சொல்ல யோசனையுடன் இருந்த பெண்ணை இருவரும் பார்த்தார்கள்.

“என்ன  யோசனை தங்கச்சி.....”

“ஹ்ம்ம் இல்லை மாரி..... நீ சொல்றது ஒரு விதத்துல சரி.... இவங்களை சும்மா விடக்கூடாது..... அதுவும் ஏழைங்க சாப்பிடற சாப்பாட்டைத் திருடறவனை கட்டி வச்சு உதைக்கணும்...”

“நானும் அதத்தானேம்மா சொல்றேன்...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“கரெக்ட்.... ஆனா நீ சொல்ற வழில இல்லை.... வேற வழில.... இது சினிமா கிடையாது மாரி.... அதுலதான் ஹீரோ முதல்வர்  வீட்டு வாசல்ல போய் கத்துவான்... போலீசையே அடிப்பான்.... எல்லாம் நடக்கும்.... இது நிஜ வாழ்க்கை.... நான் போய் என் சீனியர்க்கிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்ன்னு சொல்றேன்.... நாளைக்கு காலைல நீயும், சுந்தரும் வீட்டுக்கு வாங்க....”

“சரி தங்கச்சி..... அது சரி....  நீ இன்னைக்கு எங்கியோ வெளிய போறேன்னு சொன்ன.... எப்படி இந்நேரம் இங்க வந்த......”

“ஹ்ம்ம் மச்சானும், மாப்பிள்ளையும் அடிச்சுக்கறதை தாங்க முடியாத வடிவுதான் ஃபோன் பண்ணி சொன்னா...”, என்று கூற மணி வடிவை காதலுடன் பார்க்க, மாரி அவளைக் கொலைவெறியில் பார்த்தான்.

“என் வீட்டிலேயே ஒரு ஏழாம் படைய வச்சுட்டு என்னாத்த பண்றது..... டேய் மணி என் குடும்பமே உனக்கு முழு சப்போர்ட்டுடா....”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் ஒரு ரெட் கலர் ஸ்கூட்டி பெப்பை பார்த்த நம்ம ஹீரோயின், அவசர அவசரமாக அவளின் புல்லட்டின் மீதேறிப்  பறக்கப் பார்க்க அதற்குள் ஹை ஸ்பீடில் வந்து பிரேக் அடித்து நின்றது ஸ்கூட்டி பெப்.   வந்த உருவம் வண்டியிலிருந்து இறங்கி,  புல்லட்டில் இருந்த நம்ம ஹீரோயினை முறைத்தபடியே புசு புசுவென்று மூச்சு வாங்கியபடி எதிரில் வந்து நின்றது.

“அடியேய்  ராங்கி சுந்தரி..... எதுக்குடி  என்னோட புல்லட்டை ஆட்டைய போட்டு ஓட்டிட்டு வந்த....”

“பெரிய Harley Davidson வண்டி..... ஈயாம் பித்தாளைக்குப் பேரிச்சம்பழத்துக்குக் கூட போகாது..... இதை நாங்க ஆட்டைய போட்டோம்..... போடா போடா..... போய் புள்ள குட்டிங்கள படிக்க வை...”

“ஐயோ சம்பந்தமே இல்லாமப் பேசி சாவடிக்கராளே.... என் வண்டிய என்னத்துக்கு இப்போ சினிமால ஏதோ சேஸிங் சீன்ல ஓட்டறா மாதிரி அவ்ளோ வேகமா ஓட்டிட்டு வந்த..... என்னோட குழந்தைடி அது.... அதைப் போய் இப்படி கொடுமைப் படுத்தற நீ.... இரு வாயில்லா ஜீவன வதைக்கறேன்னு உன்ன PETA ஆளுங்ககிட்ட பிடிச்சு கொடுக்கறேன்”

“அவங்களே இப்போ பல்லு பிடிங்கின பாம்புடா பேட்டா....”

“ஹி ஹி....  TR மாதிரி நீ அடிச்ச மொக்க காமெடிக்கு இவ்ளோதான் சிரிக்க முடிஞ்சுது..... என்  செல்லத்த எதுக்கு எடுத்த பதில சொல்லு”

“என்ன கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசற நீ..... சுத்தி கலவர பூமியா இருக்கே கண்ணு தெரியல...”, பைக் சுந்தரி சொல்ல, ஸ்கூட்டி சுந்தரன் நெற்றியில் கை வைத்து கலவர பூமி எங்கே என்று தேடினான்.

“உன்னோட டப்ஸா கண்ணை  வச்சு தேடினா எதுவும் தெரியாது.... சுத்தி நல்லாப் பாரு.....  நான் மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னு வச்சுக்கோ பெரிய கலவரம் நடந்து  ஏழெட்டு தலை விழுந்திருக்கும்.... தெரிஞ்சுக்கோ..... உன்னால நல்லது பண்ண முடியாட்டாலும் பன்றவங்களைத் தடுக்காத......”

“எது....  இங்க கலவரம் நடந்து ஏழெட்டு தலை விழுந்திருக்கும்..... அப்படி விழாம நீ தடுத்திட்ட.... எப்படி இப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உன்னால பேச முடியுது.... மாரி இங்க என்ன சண்ட..... யாரு குடத்தை யாரு எடுத்து தூக்கி போட்டது...”, என்று கேட்க, பைக் சுந்தரி இதெல்லாம் எனக்கு ஜகஜமப்பா ரேஞ்சில் அசராமல் உட்கார்ந்து இருந்தாள்....

“தம்பி மெய்யாலுமே இங்க சண்டை நடந்துச்சுப்பா.... தங்கச்சி வந்துதான் சமாதானம் பேசிச்சு.....”, என்று கூறி ஆதியோடு அந்தமாக அங்கு நடந்த சண்டையைப் பற்றி மாரி சொல்ல.... கிடைத்த சந்து கேப்பில் புல்லட்டில் பறந்து விட்டாள் ஹீரோயின்.... ஆவ்வ்வ்  மறுபடி முதலில் இருந்தா என்று நொந்தபடியே பெப்பில் அவளை சேஸ் செய்ய ஆரம்பித்தார் நம்ம ஸ்கூட்டி சுந்தரன்.....

தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.