(Reading time: 8 - 16 minutes)

துணிச்சலோடு தன்னை எதிர்த்தவனின் பால் அவள் மனம் பகையை வளர்த்துக் கொண்டிருந்தது.

நேரம் கடக்க,அது அவளது விழிகளை சிவக்க வைத்தது.

"மேடம்!"-அவள் சிந்தனையை அவள் பாதுகாவலனின் குரல் கலைக்க,நிமிர்ந்து பார்த்தாள்.

"அர்ஜூன் சார் வந்திருக்கார்!"-அவள் தலையசைக்க,அவன் வெளியேறினான்.

சில நிமிடங்களில் உள்ளே நுழைந்தான் அர்ஜூன்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

வந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.வந்தவன் சில நொடிகள் மாயாவின் முகத்தை உற்றுப் பார்த்தான்.பின் ஓரமாக தன் காலணிகளை கழற்றிவிட்டு அவள் பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த மகேந்திரனின் புகைப்படத்தினை சென்று வணங்கினான்.அவன் நடவடிக்கைகளை பார்த்தவள் மீண்டும் தன் கணினியில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

சில நிமிடங்கள் கடந்ததும்,

"உன்கிட்ட பேசணும் மாயா!"என்றான்.

"அதுக்கு தானே வந்திருக்க!காயத்ரி ரகுராம் தவிர்த்து எந்த விஷயத்தையும் மாயா கேட்க தயாரா இருக்கா!"

"காயத்ரி ரகுராம் இல்லை...காயத்ரி மகேந்திரன் பற்றி பேசணும்!"-அவன் கூறியதும் கணினியில் விளையாடிக் கொண்டிருந்த தன் விரல்களை நிறுத்தினாள் அவள்.

"அவங்க செத்துப் போய் 20 வருஷம் ஆயிடுச்சு!"அழுத்தமாக உரைத்தாள்.

"மாயா!"

"கடந்த மூணு வருஷமா!என் அப்பாக்கூட சேர்த்து நான் அவங்களுக்கும் தான் திதி கொடுத்துட்டு இருக்கேன்!"-அவ்வாறு அவள் கூறியதும் அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

"ஏ..என்ன உளர்ற?"

"அடுத்த மாசம் அப்பாக்கு திதி வருது!நம்பிக்கை இல்லைன்னா வந்து பார்!"

"மாயா!அவங்க உன் அம்மா!"

"அதான் சொல்றேன்ல!அவங்க செத்துப்போய் 20 வருஷம் ஆகுது!மூணு வருஷமா அவங்களுக்கும் சேர்த்து தான் திதி கொடுக்கிறேன்னு!"

"நீ பண்றது உண்மையிலே எனக்கு கோபத்தை தூண்டுது!"

"அதனால ஒரு பயனும் இல்லை!மாயாவை யாரும் எதிர்க்க முடியாது!எதிர்க்க அளவுக்கு ஒருத்தன் இந்த உலகத்துல இல்லை!அப்படியே தைரியம் வந்து எதிர்த்தாலும் அவன் உயிரோட இருக்க மாட்டான்.அது நீயா இருந்தாலும் சரிதான்!"

-சாதாரணமாக கூறினாள் அவள்.

"பைத்தியமா நீ??நான் அப்போ இருந்து சொல்றேன்!காலம் எல்லாத்தையும் மாற்றும்!பொறுமையா இரு!வாழ்க்கையை வெறுக்காதே!ஆணவத்தை வளர்க்காதேன்னு!"

"ப்ச்...எனக்கு ஆர்டர் போடுற உரிமையை நான் உனக்கு கொடுக்கலை!வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு!எனக்கு உன்னைவிட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு!"அவளின் பதில் அவன் இதயத்தை சுக்கலாக உடைத்து சிதறடைத்தது.

"நத்திங்!அப்பறமா வரேன்!"

"அப்பறம்லாம் எனக்கு டைம் இல்லை!"

"தென்!ஸாரி ஃபார் ஆல்!"-என்றவன் மௌனமாக வெளியேறினான்.

"வேஸ்ட் ஆப் டைம்!"-என்று முணுமுணுத்தவள் மீண்டும் தன் கணினியில் மூழ்கிக் கொண்டாள்.

"பிஸ் போகலாமா?வேணாமா?"-கடிகாரத்தில் மணி பதினொன்று என்று காண்பித்த வேளையில் அருமையாக மெத்தையில் அமர்ந்தப்படி சிந்தித்துக் கொண்டிருந்தான் ருத்ரா.அரை மணி நேரம் தன் பொன்னான உறக்கத்தினை தியாகம் செய்து சிந்தித்தவன்,"இன்னிக்கு லீவு!"என்று போர்வையை போர்த்திக் கொண்டான்.

"பிரதாப்!"-உண்மையில் அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணி அவனை எழுப்ப உள்ளே நுழைந்தார் மஹாலட்சுமி.

"நான் தூங்கிட்டேன்!"-போர்வைக்குள்ளே இருந்து குரல் மட்டும் வந்தது.

"தூங்கிட்டியா நீ?"-என்றவர் நன்றாக அவன் மேல் நான்கு போடு போட்டார்.

"ஐயோ!பாட்டி வலிக்குது!"-எனறு கூவிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் ருத்ரா.

"சோம்பேறி கழுதை!மணி 12 ஆக போகுது இன்னும் தூங்குற நீ?"

"காலையில எழுந்து என்ன பண்ண போறேன்?"

"ஏன்டா!என்னிக்காவது ஒருநாள் பொறுப்பா 9 மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிருக்கியா?வாரத்துக்கு 3 நாள் போக வேண்டியது!மீதி நாள் எல்லாம் தூங்க வேண்டியது!"

"காமெடி!ஆபிஸ் திறக்கிறதே 10 மணிக்கு தான்!அதுவும் இல்லாம நான் ஏன் போகணும்?அதான் குரு இருக்கானே!"

"ஏன்டா!உனக்காக உழைத்து ஓடா தேயுறது அந்த அர்ஜூன் தான்!நீ என்னடான்னா குருவை தூக்கி வைத்து கொண்டாடுற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.