(Reading time: 8 - 16 minutes)

"மாம்!அர்ஜூன் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டான்!"-இதைக் கேட்டவளுக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன?ஏன்மா?"-அவர் நடந்தவைகளை விரிவாக கூறினார்.

அதைக் கேட்டவளுக்கு ருத்ராவின் மேல் மேலும் குரோதம் வளர்ந்து அவள் விழிகளை சிவக்க வைத்தது.

"அமெரிக்கா!ஆஸ்ரேலியா!கனடான்னு வந்த வேலை எல்லாம் விட்டுட்டு ஃப்ரண்டுன்னு போய்,கடைசியில மனசு உடைந்து இப்போ வீட்டில இருக்கான் மாயா!"-கண் கலங்கினார் அவர்.

"ஒரு மனுஷனுக்கு அழிவு வந்துட்டா,அவன்கிட்ட இருக்கிற நல்லவங்க எல்லாரும் விலக ஆரம்பித்துடுவாங்க!அதான் அர்ஜூனும் வந்துட்டான்!கவலைப்படாதீங்க...அர்ஜூனை எனக்கு போன் பண்ண சொல்லுங்க!"

"ம்..சரிம்மா!நான் வரேன்!"-என்று அவர் விலகினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷ்னியின் "ஹேய்..... சண்டக்காரா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் கண்கள் சிவக்க,தன் மனதுள் ருத்ராவின் முகத்தினை பதித்தாள்!!

நட்பு!!வெறும் மூன்றெழுத்து சொல்!!என்ன இருக்கிறது இதனுள்??அப்படி என்ன ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக மாற இது வரம் வாங்கி வந்தது??தன் துணை தன்னிடம் பேசவில்லை என்றாலும் மனிதனானவன் சகித்து வாழ்வான்!ஆனால்,நண்பனின் சிறு சிணுங்கல் மனிதனை பலவீனப்படுத்தும் வல்லமை பெற்றது!!தந்தை தாயிடம் கூட சிலவற்றை ஒருவனால் மறைக்க நேரிடும்!!ஆனால்,கூறவே வெட்கம் கொள்ள வேண்டியவற்றை கூட ஒருவனால் தன் நண்பனிடம் மட்டுமே பகிர இயலும்!!அது ஆண்,பெண் என்ற கோட்பாட்டினை நோக்காது!!உயர்வு தாழ்வை நோக்காது!!அதற்கு சிறந்த சான்றாய் மகாபாரதத்தை கொள்ளலாம்!!தர்மநெறியை அறிந்தும்,இறைவனே வேண்டியும் நட்புக்காய் தர்மஷேத்திரத்தில் உயிர் துறந்தான் ஒருவன்!!உலக சரித்திரத்தில் பாவப்பட்ட பிறப்பாய் பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணிற்கு நீதி வழங்க களம் புகுந்தான் இறைவன்!!துயர் துடைக்க எழும் கரங்களுக்கு ஆராய்ச்சி நிகழ்த்தினால் முதலில் எழுந்த கரம் நண்பனின் கரமாகவே இருக்கும்!!அதில்,எள்ளளவும் ஐயமில்லை!!உலகினில் தாய்மைக்கு அடுத்து ஒப்புமை இல்லாத ஒரே பந்தம் மித்திர பந்தம் மட்டுமே!!இங்கு நிகழப்போகும் யுத்தமும் நண்பனுக்காக எழ போவதே!!விசித்ரம் யாதெனில்,இரு துருவங்களும் ஒருவனுக்கு நியாயம் கிட்ட எதிர் எதிர் திசையில் போர் புரிய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றன.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.