“சாரி, இந்தர் என்னிடம் இப்போ சுவிஸ் பிரான்க், அவ்வளவு இல்லை , அதனால் எனக்கு வேண்டாம். நீங்க உங்களுக்கு வாங்கிகோங்க....... எனக்கு யாரிடமும் பரிசு வாங்கி பழக்கமில்லை........
“இங்க வாங்கினால் ஒரிஜினலா இருக்கும், எங்க வீட்டில் ஏற்கனவே இருக்கு, அதனால் உனக்கு தான் வாங்கினேன்.......... சரி, இப்போ இதை வாங்கிக்கோ, பின்னால் உனக்கு பணம் வந்ததும் எனக்கு கொடுத்து விடு என கூறி அதை அவள் கையில் தினித்தான்..........
“நீங்க கண்டிப்பா என்னிடம் பிரான்க் வாங்கிக்கணும் என கூறி கடிகாரத்தை, வாங்கி கொண்டாள் பூர்வி.........
பின் இருவரும் அங்கிருந்த, உணவு பரிமாறும் அறைக்கு சென்று உணவருந்தினர்........ நுழைவு சீட்டிலேயே உணவிற்கும் சேர்த்தே பணம் வசுளிக்கின்றனர். அந்த சுவிஸ் வகை உணவின் முடிவில் “Blackforest cake” பரிமாறபட்டது...... இங்கு நாம் விரும்பி உண்ணும் இந்த கேக் தோன்றிய இடம் இது தான்....... தோன்றிய இடத்திலேயே சென்று சாப்பிட நன்றாகவே இருந்தது...... இரவு அம்மா, அக்காவுடன், skypeல் பேசும் பொழுது இதை பற்றி கூற வேண்டும் என நினைத்து கொண்டாள்........
திரும்பி வரும் பொழுது காரில் எறியவுடனேயே, கண்ணை சுழற்றி தூக்கம் வந்தது........ காலை சீக்கிரம் எழுந்ததாலா? என யோசித்து இந்தரிடம் தூக்கம் வருகிறது என கூறிய பொழுது......
“இந்த கேக்களில் கொஞ்சம் wine சேர்ப்பார்கள், அதனால் தான் உனக்கு தூக்கம் வருகிறது. சீட் பெல்ட் அணிந்து தூங்கு என கூறினான்.........
“அப்ப உங்களுக்கு தூக்கம் வராதா? எப்படி கார் ஓட்டுவீங்க?
“இந்த உணவு எனக்கு பழக்கம், உனக்கு முதல் முறை என்பதால் இப்படி இருக்கு....... நீ தூங்கு, ஒன்னும் பிரச்சனை இல்லை.......
பூர்வியும் தூங்கி போனாள் வீடு வரும் வரை ..........
அவளது வீட்டு வாசலில் காரை நிறுத்தி அவள் தூங்கும் அழகை சிறிது நேரம் ரசித்து கொண்டு இருந்து விட்டு, அவள் முகத்தில் விழுந்திருந்த மூடி கற்றைகளை ஒதுக்கி மெல்ல பாட துவங்கினான்......
கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
இரண்டு வரி முடிவதற்குள் பூர்வி கண் திறந்து பார்த்தாள்......
“சும்மாவே தூக்கமா வருது, நீங்க இந்த பாட்டை பாடி இன்னும் தூங்க வைக்கறீங்க . ரொம்ப நன்றி, எல்லா வற்றிற்கும் , இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். Thanks Indhar……… என கூறி வீட்டினுள் நுழைந்தாள் பூர்வி......
இந்தரும் மனநிறைவோடு காரை கிளப்பி சென்றான்..........
நாமும் அங்கே அவர்களோடு...
{kunena_discuss:1103}