(Reading time: 12 - 24 minutes)

னால் அவனால் அப்படி எல்லாம் இருந்துவிட முடியாது என அவனுக்கே தெரியும்தான். ஏனென்றால் விவேக் ஸ்ரீநிவாசன் அல்லவா அவன்!!!  ஸ்ரீநிவாசனின் மகனல்லவா  அவன்!!!

காக்பிட்டின் கதவுகளை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன் ஒரு நொடி கண்களை மூடித்திறந்தான்.

‘அப்பா!!!!’ அடி மனதிலிருந்து எழுந்து அவன் உதடுகள் தொட்டது அந்த வார்த்தை. அடுத்த சில நிமிடங்களில் மும்பை நோக்கி மறுபடியும் திரும்பிக்கொண்டிருந்தது விமானம்.

‘லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்..’ ஒலித்தது விவேக்கின் குரல். ‘தேர் இஸ் அ மெடிக்கல் எமெர்ஜென்சி ஆன் போர்ட். ஸோ வீ ஆர் ஃபளையிங் பேக் டு மும்பை. வீ வில் ஃபளை பேக் டு வைசாக் ஒன்ஸ் தி எமெர்ஜென்சி இஸ் ரிசால்வ்ட். சின்சியர் அபாலிஜீஸ் ஃபார் தி இன்கன்வீனியன்ஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்..’

கண்களில் நீர் கட்டிக்கொள்ள பாதி உயிர் திரும்பியது சுதர்ஷனுக்கு.

மும்பையில் உடனடியாக தரை இறங்க அனுமதியை பெற்றுகொண்டு அங்கே ஆம்புலன்ஸை காத்திருக்க செய்திருந்தான் விவேக்..

‘கேபின் க்ரூ இன் ஸ்டேஷன் ஃபார் லேண்டிங்..’ விவேக்கின் அறிவிப்பு வர அடுத்த சில நிமிடங்களில்  மும்பை விமான நிலையத்தில் விமானத்தை மறுபடியும் தரை இறக்கி இருந்தான் விவேக்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் ஸ்ட்ரெசரில் அப்பா அழைத்து செல்லப்பட அங்கே எல்லா முதலுதவி ஏற்பாடுகளும் தயாராக இருப்பது புரிந்தது சுதர்ஷனுக்கு. காக்பிட்டின் ஜன்னலிலிருந்து  இந்த காட்சிகளை  பார்த்துக்கொண்டேதான் இருந்தான் விவேக்.

சுதர்ஷன் நிமிர்ந்து, நன்றி சொல்லிவிட அவசரமாக இவன் முகம் தேடுவதை புரிந்துக்கொள்ள முடிந்தது விவேக்கால். ஆனால் அதை எல்லாம் இவன் எதிர்ப்பார்க்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ள தயாராகவும் இல்லை. கண்களை மூடி பின்னால் சாய்ந்துக்கொண்டான் விவேக்.

‘உன்னோட ஃபளைட்லே ட்ராவெல் பண்ற எல்லாரோட உயிரும் அப்பா உயிருக்கு சமம். மறுபடியும் காதில் கேட்டது விவேக்குக்கு!!!

டுத்த சில நிமிடங்களில் மறுபடியும் ஆகாய வீதியில் விவேக்!!! இரண்டு மணி நேரங்களில் விசாகபட்டிணத்தை அடைந்திருந்தது விமானம்.

நிதானமாக, அமைதியாக, நிறைவாக ஒரு காபியை சுவைத்து முடித்துவிட்டு அடுத்த டெல்லி விமானத்துக்கு இவன் தயாராகிக்கொண்டிருந்த போது ஒலித்தது இவனது கைப்பேசி..

‘சென்னையிலிருந்து அப்பாவாக இருக்கும். காலையில் அவனது தம்பி மனைவி செய்த அந்த ரோஜாப்பூ விளையாட்டை மன்னிக்க முடியவில்லையோ இவரால்??? மனம் ஆறவில்லையோ??? மறுபடி மறுபடி அழைக்கிறாரே’ என்று  யோசித்தபடியே இவன் எடுக்க...

அழைத்தது சுதர்ஷன்!!! எப்படியோ யாரையோ கேட்டு இவனது எண்ணை வாங்கி இருக்க வேண்டும் அவன்.

‘அப்பா அபாய கட்டத்தை தாண்டிட்டார் விவேக்.. சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் வந்திட்டோம் நிஜமாவே உனக்கு வார்த்தையாலே எல்லாம் தாங்க்ஸ் சொல்ல முடியாது...’ அவன் சொல்லிக்கொண்டே போக

‘டேக் கேர்..’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் விவேக். அதற்கு மேல் அவனிடம் பேசவோ அவன் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கவோ எந்த தேவையும் இருப்பதாக தோன்றவில்லை விவேக்குக்கு.

கடமையை சரியாக செய்தாகிவிட்டது!!! அவ்வளவுதான்!!! ஒரு ஆழமான சுவாசத்துடன் ‘அப்பா..’ என மறுபடியும் ஒரு முறை மனதார சொல்லிக்கொண்டான் அருமை மகன்

அங்கே முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அமர்ந்தான் சுதர்ஷன்.

அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்பது இதுதானோ??? நான் இப்போது என்ன செய்ய??? நான் செய்த பாவத்துக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா இந்த உலகத்தில். இருந்தால் காட்டிக்கொடு இறைவா!!!

இரவு!!!

விசாகபட்டினத்திலிருந்து டெல்லி வந்து இப்போது டெல்லியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் விவேக். அவனருகில் இந்த முறை இருந்தது ஒரு பெண் விமானி.

சந்தியா சதுர்வேதி!! ஹிந்தி பேசும் பெண்ணவள். அவனது உற்சாக பபுன்னகை அவளிடமும் தொற்றிக்கொண்டது. இந்த முறை விமானத்தை செல்லுத்தும் பொறுப்பை அவளிடம் கொடுத்திருந்தான் அவன்.

இரவு நேர வானமும் விமான பயணமும் அவனுக்கு அதிகமாகவே பிடிக்கும். குளிர் கண்ணாடி அணிய தேவை இல்லாமல், சுடும் வெப்பம் இல்லாமல், டர்புலன்ஸ் போன்ற தடைகள் இல்லாமல் நிம்மதியாய் அமைதியாய் இருக்கும் அந்த பயணம்.  .

‘குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென்... திஸ் இஸ் விவேக் ஸ்ரீனிவாசன் வித் அவர் கேப்டன் இன் கமாண்ட் சந்தியா சதுர்வேதி!!!  ப்ளீஸ்  ஃபாஸென் யுவர் சீட் பெல்ட்ஸ். இட் இஸ்  டைம் ஃபார் டேக் ஆஃப்’ விவேக் அறிவித்து முடிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.