(Reading time: 16 - 31 minutes)

ண்கள் கூர்மையாய் தன்னவளுக்கான புடவைகளைத் தேட ஆரம்பிக்க அங்கு அவனவளோ காதலில் மூழ்கி இருந்தாள்..தன்னவனை அணுஅணுவாய் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்..சாதாரணமான செயலிலும்கூட அத்துணை ஆளுமை..அவனை ரசித்தவாறே தற்செயலாய் லேசாய் தலைத் திருப்ப அருகில் ஒரு பெண் அவனையே பார்த்திருப்பதை கண்டு கொண்டாள்..அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து பார்வையை அகற்ற கொன்னுடுவேன்என ஆள்காட்டி விரலை நீட்டி இவள் மிரட்ட சட்டென நகர்ந்துகொண்டாள் அவள்..அடுத்த நொடி அவளை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவாறே,என் பேபி இவ்ளோ பொசசிவ்வா எனக்கு தெரியாம போச்சே என்று கார்த்திக் புருவத்தை அசைக்க,

அடப்பாவி எல்லாத்தையும் பாத்துட்டா இருந்த கார்த்தி நீ பயங்கரமான ஆளு..

ம்ம்ம் பின்ன உன்னை எப்படி சமாளிக்குறது சரி உன் சிஐடி வேலையை எல்லாம் நிறுத்திட்டு கொஞ்சம் வந்த வேலையை பாரு..இந்த புடவை எப்படியிருக்கு சொல்லு..

ம்ம்ம் அது இந்த டாட்ஸ்க்கு பதிலா இதுல..

ஏய் நல்லாயிருக்கா இல்லையாநு மட்டும் சொல்லு புடவையவே ரீடிசைன் பண்ணாத..

ஹா ஹா சரி சரி கூல்..இன்னும் ஒரு சான்ஸ் குடு கார்த்திக் நா செலெக்ட் பண்ணிறேன்..

சத்தியமா நா பாவம் சஹி..என்றவாறே அடுத்த புடவையை பார்க்க கண்களை சுழற்றினான்..அழகான அந்த புடவை அவன் கண்களில்பட்டது..இரத்த நிற சிவப்புப் புடவை உடல் முழுதும் தங்கசரிகைகளால் நிறைந்திருக்க அகலமான பார்டரோடு அழகாயிருந்தது..சற்று பழைய டிசைன்தான் எனினும் ஏனோ அதை பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துவிட்டது..

சஹி இதையே எடுத்துக்கலாம்..என சட்டென்று கூறிவிட்டு அவளைப் பார்க்க முகம் முழுவதும் மலர்ந்து அழகாய் தலையசைத்தாள் பெண்ணவள்..

அடடா என்ன ஒரு அதிசயம் உடனே ஓ.கே சொல்லிட்ட??

ம்ம் அய்யோ பாவமேநு செலெக்ட் பண்ணா ரொம்ப பண்றியே??சரியில்லையே..

அம்மா தாயே சும்மா கிண்டல் பண்ணேன் சரி வா அடுத்த செக்ஷன் போவோம் இந்த ஸ்பீட்ல செலெக்ட் பண்ணா 60ம் கல்யாணம்தான் பண்ணிக்கனும் வா சீக்கிரம் என்றவாறு மற்ற புடவைகளை தேர்வு செய்ய சென்றனர்..

இவ்வாறாக நேராம் கழிய அந்த ஒவ்வொரு நொடியையும் இருவருமே ரசித்து லயித்திருந்தனர்..கார்த்தி இது எப்படியிருக்கு??கார்த்தி இது எனக்கு சூட் ஆகுமா??ஏதோ இத்தனை வருடமும் அவனை கேட்டுதான்உடை தேர்வு செய்ததுபோல் சளைக்காமல் கேள்விகேட்க அதை வீட அவள் ஆயிரம் முறை அவன் பெயரை உச்சரிப்பதை கேட்டு கேட்டு மகிழ்ந்தான்..அவளோ,தான் எத்தனை கேள்வி கேட்டாலும் சலிக்காமல் அலுக்காமல் உதட்டில் ஒட்டிய சிரிப்போடு அவளை ரசனையாய் பார்த்த வண்ணம் பதில்கூறீயதில் மெய் மறந்திருந்தாள்..

கார்த்திக்…

ம்ம் சொல்லு என அவளிடமிருந்து விழியகற்றாமல் அவன் கேட்க..

என்ன எவ்ளோ லவ் பண்ற என அசால்ட்டாய் கேட்டுவிட பணிப்பெண் சட்டென சிரித்ததில் சூழ்நிலை உணர்ந்து அவன் நினைவிற்கு வர அப்போதும் நம் 1000 வாலா விடுவதாயில்லை..சொல்லு கார்த்தி..

அவள் கையை பீடித்து சற்றுதூரம் தள்ளி அழைத்துச் சென்றவன் இப்போ இது ரொம்ப முக்கியமான டவுட்தான் அதுவும் அந்த பொண்ணு முன்னாடி ஏன் சஹி..

ரொம்ப முக்கியம்தான் பின்ன நீ பாட்டுக்கு தாராளமா என்ன சைட் அடிச்சுகிட்டே சூப்பரா புடவை செலெக்ட் பண்ணி குடுத்துட்டேயிருக்க..அவ உன்னையேதான் பாத்துட்டு இருந்தா தெரியுமா..இதுல பக்கத்துல புடவை எடுக்க வர்ரவங்களும் உன் செலெக்ஷனதான் பாத்துட்டேயிருக்காங்க..ஆனா நீ எதையும் கண்டுகிரதா இல்ல அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு..

சிறு மென்னகையோடு ஆனாலும் உனக்கு இவ்ளோ கான்விடென்ஸ் கூடாது..விட்டா இந்த ஊரே என்னதான் பாக்குதுநு சொல்லுவ போல..காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுநு பழமொழி கரெக்ட்டாதான் சொல்லிருக்காங்க என மறுபடியும் சிரிக்க..

என்ன இப்படி சொல்லிட்ட புஜ்ஜுப்பா..உன்ன யாருக்காவது பிடிக்காம போகுமா..அப்பப்போ காத்துல பறக்குற இந்த தலைமுடி உன்னோட இந்த துறுதுறு கண்ணு ஷார்ப் நோஸ்..உன்னோட இந்த க்யூட்டான லிப்ஸ் அதுக்கு இன்னும் அழகேத்துற உன்னோட மீசை..எல்லாத்துக்கும் மேல என்னபாத்தாலே உன் உதட்ல வந்து ஒட்டிக்குற அந்த ஸ்மைல்..ப்ப்பாபா வேற என்ன வேணும் சொல்லு..என ரசனையாய் முடிக்க அவனோ சிரிப்பை அடக்க மாட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்..

சஹி நம்ம கதையில எல்லாமே உல்ட்டாவா தான் இருக்கு போ..அவனவன் தன் கேள் ப்ரெண்ட்ட வர்ணிப்பான் பொண்ணு வெக்கப்படும் இங்க என்னடானா நீ தான் பிண்ற போ..

ஏன் பொண்ணுங்கள மட்டும்தான் வர்ணிக்கனும்னு ஏதாவது சட்டமிருக்கா என்ன??நா சொல்றது கரெக்ட்நு ஒத்துக்கோ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.