(Reading time: 11 - 21 minutes)

"ப்பா!மற்ற விஷயமும் கல்யாணமும் ஒண்ணு இல்லைப்பா!கடைசி வரை வாழ போறது நான் தான்!நான் எங்கே இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு ஒருமுறை கூட நீங்க யோசித்து பார்க்கலையேப்பா!"

"என்னைவிட உனக்கு இவன் முக்கியமா??"

"சார்!ஒரு நிமிஷம் சார்!"

"நான் என் பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருக்கேன் தம்பி!"

"சில விஷயத்துல ஒரு பொண்ணால தன் அப்பாவோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது சார்!அந்த மாதிரி கேள்வி தான் நீங்க இப்போ கேட்டிருக்கீங்க!"

"காயத்ரிக்கு நான் முக்கியமா?நீங்க முக்கியமான்னு கேட்கிறீங்களே!உங்களுக்கு உங்க பொண்ணோட விருப்பத்தோட,உங்க ஈகோ முக்கியமா போயிடுச்சா சார்?"

"ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும்,கோபுரத்தை நிமிர்ந்துப் பார்க்கிறவங்க எல்லாம் அதை சொந்தமாக்கிக்க முடியுமா?"

"அப்பா!"

"முடியாது தான் சார்!ஆனா,ஒரு விஷயம் சொல்லுங்க!எனக்கு தெரிந்து எந்த பிரமணனும் அந்தக் கோபுரத்தை உருவாக்கினதா நான் கேள்விப்பட்டதில்லை!அந்தக் கோவில் உள்ளே அரசாட்சி செய்யுற இறைவன் விக்ரஹமும் இந்த ஜாதியை சார்ந்தவங்க தான் தன்னை உருவாக்கணும்னு உத்தரவு போட்டதா நான் கேள்விப்பட்டிதில்லை!"

"............"

"ஏன் பல யுகங்களுக்கு முன்னாடி நீங்க போற்றி வணங்குற ஈசனே சுடுகாட்டில் வாழ்ந்து,பிணங்களோட சாம்பலை தன் சரீரத்துல பூசி இருந்தவர் தானே!அவரோட காதலே அன்னிக்கு மறுக்கப்பட்ட போது,என் காதல் மறுக்கப்படுறது எனக்கு அதிர்ச்சி அளிக்கலை!"

"உங்க பொண்ணை நான் கூட்டிட்டு போறேன்!"-என்று திரும்பியவர்,

"வா!"-என்றழைத்ததும் மறுப்பேதும் கூறாமல் அவருடன் கிளம்பினார்.

ஏற்பட்ட துன்பமும் கதிரொளி பட்ட பனித்துளியாய் மறைந்துப் போனது.

காதலினில் கையெழுத்திடப்பட்ட இல்லறம் நல்லறமாய் அமைந்தது இருவருக்கும்!!

"எங்க காதலோட அடையாளமா மாயா எங்களுக்கு கிடைத்தாள்!அவருக்கு ரொம்ப சந்தோஷம்!உலகத்துல எந்த ஒரு அப்பாவும் தன்னோட மகளை அந்த அளவு தாங்க மாட்டாங்க!மாயாவை அவர் அந்த அளவு தாங்கினார்.ரொம்ப சின்ன வயதிலே புத்திசாலியா வளர்ந்தா என் மாயா!அவரோட மனவுறுதி அவக்கிட்ட அப்படியே பிரதிபலித்தது!!மாயாவை எதாவது சொன்னா அவருக்கு பிடிக்காது!இப்படி சந்தோஷமா போயிட்டு இருந்த எங்கே வாழ்க்கையில சுனாமி மாதிரி அந்த ஒரு நாள் மட்டும் வராம இருந்திருந்தா!"

"என்னாச்சு?"-சில நொடிகள் அங்கு ஆழ்ந்த மௌனம் நிலவியது!!மிக ஆழந்த மௌனம்!!

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.