(Reading time: 9 - 18 minutes)

“ஓ ஓகே.... ஆனா அவங்களுக்கு துணிக்கடையை விட சேட் செனட்டர்லதானே நல்ல வருமானம்.... சாயங்கால நேரத்துல கூட்டம் அலைமோதுமே....”

“ஆமாம் மேடம்... அதுதான் அவங்களுக்கு அதை இடிக்க மனசு வரலை...”

“சரி உங்களுக்கு அந்த இடத்தைக் கொடுக்க சம்மதம் இல்லையா.... வீடும் எப்படியும் பழசாயிடுச்சுன்னு சொல்றீங்க... நல்ல விலை வந்தா வித்துட்டு போய்ட வேண்டியதுதானே.....”

“மேடம் அது எங்க பூர்வீக வீடு... அதை கொடுக்க எங்களுக்கு இஷ்டம் இல்லை... எங்களுக்குன்னு இருக்கற ஒரே சொத்து அந்த வீடுதான்... மூணு தலைமுறையை பார்த்த வீடு மேடம்...”, மயூரி கண்கலங்கியபடியே கூற, சாரங்கனுக்கு மனது பிசைய, அவளை பரிதாபப் பார்வை பார்த்தான். ‘சப்பாணி பீலிங்க்ஸ் கம்மி பண்ணுடா’, என்று அவன் காதில் கிசுகிசுத்தாள் பாரதி.

“நீங்க உங்களுக்கு கொடுக்க இஷ்டம் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே....”

“நாங்க பலமுறை சொல்லிட்டோம் மேடம்.... முதல்ல அந்த கடையோட மேனேஜர்தான் வந்து எங்ககிட்ட பேசினாரு... நாங்க முடியாதுன்னு சொன்னதால அந்தக்கடையோட  முதலாளியே நேரடியா  எங்கக்கிட்ட ஃபோன்ல பேசினாரு.... அவர்கிட்டையும் விக்கமுடியாதுன்னு சொல்லிட்டோம்... அதுக்குப்பிறகும் ரெண்டு மூணு முறை எங்களை கன்வின்ஸ் பண்ணப் பார்த்தாங்க... நாங்க கண்டிப்பா தரமாட்டோம்ன்னு சொல்லிட்டோம்..... இப்போ என்னடான்னா அந்த மேனேஜர் இந்த ஏரியா கவுன்சிலர் ஆளுங்களை  கூப்பிட்டு வந்து மிரட்டறாரு.... வீட்டை விட்டு வெளிய வரவே பயமா இருக்கு மேடம்... நான் ஸ்கூல் போகற வழில நின்னுட்டு போகும்போதும் வரும்போதும் கண்டபடி பேசறாங்க....”

“என்ன சாரங்கா இது, எந்த கேஸ் வந்தாலும் இந்த ஏரியா கவுன்சிலர் அதுல இன்வால்வ் ஆகி இருக்கான்... இவன் கால் வைக்காத துறையே இல்லை போல.... ஏன் மயூரி நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கலாமே....”

“எங்கப்பாவால நடக்க முடியாததால மாமாக்கூட எங்கம்மா கம்ப்ளைன்ட் கொடுக்க போனாங்க.... ஆனா அங்க இருக்கறவங்க எங்கம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் வாங்கவே இல்லை மேடம்.... வாங்காட்டாகூட பரவாயில்லை... அவங்களும் சேர்ந்து வீட்டை விக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்காங்க... இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை மேடம்... நாளுக்கு நாள் அவங்க கொடுக்கற தொல்லை அதிகமா இருக்கு”

“ஹ்ம்ம் சரி இப்போ நான் உங்கக்கூட....”,என்று பாரதி ஆரம்பிக்கும்போதே நடுவில் புகுந்த சாரங்கன்,

“பாரதி நீ இப்போ அர்ஜென்ட்டா ராஜாவைப் போய் பார்க்கணும்னு சொன்னியே....”,எனக்கூற,

“அப்படி எல்லாம் ஒரு வேலையும் இல்லையே சாரங்கா....”, என்றபடியே அப்பாவி லுக் விட்டாள் பாரதி.

“படுத்தாதடி பக்கி... என் ஆளுக்கூட இப்போ  என்னைப் போக விடலை, ராஜாவை உனக்கு கூஜா தூக்க விடாம பண்ணிடுவேன்.... எப்படி வசதி.... டீலா, நோடீலா....”

“எப்படியோ ஒழி... இங்கப்பாரு அந்த ஏரியா  இன்ஸ் கொஞ்சம் இம்சை புடிச்சவன்... ஸோ பார்த்துப்பேசு.... அதுக்கு முன்னாடி நீ மயூரி வீட்டுக்கு போயிட்டு அவங்கக்கிட்ட இருக்கற டாக்குமென்ட்ஸ்  எல்லாம் பக்காவா இருக்கான்னு செக் பண்ணிடு.....”

“ஏய் பக்கி, இன்னைக்கு நல்ல நாளா பார்த்தியா.... முதல் முறையா மாமனார் வீட்டுக்குப் போகப்போறேன்... நேரம் காலம் நல்லா இருக்கணும் இல்லை...”

“அடேய் நீ இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வைய்யி... உன்னைக் கொசுவடிச்ச கொலைக்கேசுல மாமியார் வீட்டுக்கு அனுப்பிடுவேன்... கபர்தார்....”

“ஹிஹி கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேனோ....”,சாரங்கன் அசடு வழிய இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது போல மயூரி பார்த்தாள்.

“மயூரி இவர் சாரங்கன்... நாங்க ரெண்டு பேரும் ஒரே வக்கீல்க்கிட்டதான் ஜூனியரா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கோம்... எனக்கு இப்போ அர்ஜெண்டா ஒரு வேலை வந்துடுச்சு... நீங்க இவர்கூட உங்க வீட்டுக்குப் போய், வீட்டோட டாக்குமென்ட்ஸ் எல்லாம் காட்டுங்க... அதைப் பார்த்த பிறகு என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்...”, என்று கூற பாரதியிடம் நன்றி கூறி சாரங்கனுடன் புறப்பட்டாள் மயூரி.

சாரங்கன் மனதிற்குள் பார்த்த முதல் நாளே பாட்டை ஓடவிட்டு அவன் பின்னால் மயூரி உட்க்கார்ந்து வருவதுபோல் கற்பனையில் வாயிலுக்கு வர அந்தோ பரிதாபம், மயூரி வந்திருந்தது அவளின் ஸ்கூட்டியில்... பாரதி வட போச்சே லுக்கை சாரங்கனை நோக்கி விட, அவன் பதிலுக்கு இதெல்லாம் லவ் life-ல் ஜகஜமப்பா லுக்கை விட்டான்.

தன்பின் பாரதி  மாரியிடம் பேசி ராணிக்கு இடம் ஏற்பாடு செய்து, அதை அவளிடம் கூறிவிட்டு உடனடியாக முக்கிய சாமான்களுடன் கிளம்பி வர சொன்னாள்.  அங்கிருந்து கிளம்பி சந்திரன் வீடு சென்று அவருக்கும், மதிக்கும் அன்று தேவிகாராணி கூறிய விஷயங்களை கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.