(Reading time: 11 - 22 minutes)

"எதுக்கு கத்துறீங்க?"

"நீங்க இங்கே என்னப் பண்ற?"

"உங்களுக்கு காபி எடுத்துட்டு வந்தேன்!"

"என்ன அதிசயமா நீ கொண்டு வந்திருக்க?"

"பாட்டியும்,மித்ராவும் ஊரில் இல்லை தெரியாதா?"

"எங்கே போனாங்க?"

"மதுரைக்கு போயிருக்காங்க!உங்கக்கிட்ட வேற சொன்னாங்களாம்."

"ஆமா!ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க!"-விஷமமாக புன்னகைத்தான் அவன்.

"அப்போ ஒரு வாரத்துக்கு பிரச்சனையில்லை!"-என்றப்படி சட்டென அவளை இழுத்தான் ருத்ரா.சிறிது சுதாரிப்பு இல்லாதவள் அவள் மேல் சரிந்தாள்.

"என்ன பண்றீங்க?விடுங்க!"

"முடியாது!"

"விடுங்க.."-பெரும் போராட்டத்திற்கு பின் அவளை விடுவித்தான் ருத்ரா.

"வர வர ரொம்ப சேட்டை பண்றீங்க!"

"ப்ச்...கல்யாணம் பண்ணிக்கலாமா?"-பட்டென கேட்டுவிட்டான் அவன்.

அவள் முகத்தில் விளக்க இயலாத மாற்றம் குடிக்கொண்டது!!

"என்ன அவசரம்?நான் எங்கே போயிட போறேன்?"

"நீ இல்லை...அடுத்த வாரம் நான் ஊருக்கு போக போறேன்!"-அவள் முகத்தில் அதிர்ச்சி ரேகை பரவியது.

"காலேஜ் முடித்துட்டேன்!அப்பா உயிலில் எழுதி இருந்த மாதிரி அடுத்த வாரத்தோட 20 வயது முடிய போகுது!ஸோ..சட்டப்படி,இனி அவர் பிசினஸ் எல்லாம் நான் தான் நல்ல நிலைக்கு கொண்டு வரணும்!"

"எப்போ வருவீங்க?"

"ம்...தெரியலை!ஆறு மாசம்,ஒரு வருடம் கூட ஆகலாம்!"-அவளது முகம்  வாடிப்போனது.

"ஏ...லூசு!என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை!"

"நிலைமை அப்படி ஆயிடுச்சு!உன்னை விட்டுட்டு போக எனக்கும் விருப்பமில்லை தான் செல்லம்!கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தா அந்தளவு இரண்டு பேருக்கும் வயசாகலை!"

"ஒரு 4 வருடம் போகட்டும்!நானே பாட்டிக்கிட்ட பேசுறேன்!"

"ச்சீ..ச்சீ...அதெல்லாம் இல்லை!உங்களை பார்க்காம எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை அதான்!"

"பேசாம ஒண்ணுப் பண்றேன்!சென்னை போய் ஒரு இரண்டு மாசத்துல பாட்டி,மித்ரா,உன்னை கூட்டிட்டு வர ஏற்பாடு பண்றேன்.எனக்கு மட்டும் உன்னைப் பிரிந்திருக்கணும்னு ஆசையா என்ன?"-அவன் முகமும் வாட்டம் கண்டது.அவனை இயல்பாக்க விரும்பியவள்,அவனது கன்னங்களை ஏந்தி,"அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க!நீங்க உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்க!உங்களைப் பிரிந்து 18 வருடமா வாழ்ந்துட்டேன்.இன்னும் கொஞ்ச நாள் தானே!"-ஆறுதல் அளித்தாள் அவள்.சில நொடிகள் அவள் முகத்தையே ஆழமாக ஊடுறுவினான் ருத்ரா.அவனது எண்ணத்தினை அவள் ஊகித்திருக்கலாம்!அவளிடமிருந்து கனத்த மௌனம்!!தன்னை நோக்கி அவளை ஈர்க்க தொடங்கினான் ராணா.என்ன நினைத்தாளோ சட்டென அவனை தடுத்தாள் கங்கா.

"4 வருடம் முடியட்டும்!"-என்றாள் குறும்போடு!!அவன் தனது முகத்தினை பாவமாய் வைத்துக் கொண்டான்.

"காபி ஆறி போகுது சீக்கிரம் குடிங்க!"-என்றவள் வெளியே புன்னகையோடும்,உள்ளே பெரும் பாரத்தோடும் அவ்வறையை நீங்கி வெளியேறினாள்.

அழகான காதல் அல்லவா??கலியுகத்தில் உன்னதமான உறவு ஒன்று பிறக்குமாயின் இந்த விதிக்கு அது பிடிக்காதல்லவா???எப்படியாவது அதை சிதைக்க முயலும்...!

ரின் எல்லையில் இருந்த தேவியின் ஆலயத்தில் ருத்ராவை வழியனுப்பி வைத்துவிட்டு,மனம் சோர்ந்துப் போய் இல்லம் நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள் கங்கா.மனம் முழுதிலும் அவன் மட்டும் தான் நிறைந்திருந்தான்.முதல் காதல் ஆயிற்றே!!கவனம் எதிலும் பதியாதப்படி நடந்தவளின் பாதையை தடுத்தது,"கங்கா"என்ற குரல்!!

திடுக்கிட்டு திரும்பியவளின் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது!!

காரில் முழுதும் கங்காவின் நினைவுகளோடு பயணம் செய்தவனின் மனதில் ஏதோ சறுக்கல் ஏற்பட,சட்டென காரை நிறுத்தினான் அவன்.மனதில் புதியதாய் ஒரு அச்சம் எழுந்தது. "கங்கா!"என்று காரை விரைந்து திருப்பினான் அவன்.

"வேணாம்!உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்.என்னை எதுவும் பண்ணிடாதே!"-கண்ணீர் மல்க வேண்டினாள் கங்கா.

"ம்...நான் இவளுக்காக 4 வருடமா காத்திருப்பேனாம்!இவ,நேற்று வந்தவனை காதலிப்பாளாம்!கல்யாணம் செய்துப்பாளாம்!சந்தோஷமா வாழுவாளாம்.அப்படி என்ன என்கிட்ட இல்லாதது அவன்கிட்ட இருக்கு?"-வார்த்தைகளை சொடுக்கினான் அவன்.

"எனக்கு நீ வேணும்!அதுவும் இப்போவே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.