(Reading time: 22 - 43 minutes)

அட என் சஹி பேபி நா எப்பவுமே உன் மேல இதே லவ்வோடதான் இருப்பேன் ஏன் தேவையில்லாம யோசிக்குற??

இல்ல எனக்கு எதாவது ப்ரச்சனையிருந்தாலும் என்ன வெறுத்துறமாட்டல??

சஹி..

இல்ல மாமா இப்போலா எனக்கே ஏதோ டிப்ரண்ஸ் தெரியுது அப்பப்போ  டயர்டா ஆய்டுறேன் ஏதேதோ பேசுறேன்னு தோணுது..நேத்துகூட ஏன் அப்படி பிகேவ் பண்ணேண்ணு தெரில..

நீ பேசாம பேஷன்டிசைனிங்க்கு பதிலா டைரக்டிங்க்கு படிச்சுருக்கலாம்.அழகா யோசிக்குற..நீ நார்மலாதான் இருக்க..நேத்து நீ அப்படி மயங்கினதுல இருந்து நா கொஞ்சம் பயந்துட்டேன் சஹிம்மா அதான் உன்னையே சுத்தி சுத்தி வரேன் ஓவர் பீல்லா பாடினதுக்கும் அதான் காரணமா இருக்கும் மத்தபடி ஒண்ணுமில்ல..நீயா எதையாவது போட்டு குழப்பிக்காத என்ன புரியுதா??

ம்ம் என தலையாட்ட அவனும் அவளைப் போன்றே தலையாட்டிச் சிரித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..

ஏன் சஹி எப்போயிருந்து உனக்கு இப்படிலா தோணுதுநு நியாபகம் இருக்கா??

ம்ம் சரியா தெரில ஆனா ஒரு கெஸ் இருக்கு..நீ என்ன பாக்காம ஒரு மாசமா அவாய்ட் பண்ணிணல அந்த டைம்ல ரொம்ப ப்ரெஸ்ட்ரேட் ஆய்ருந்தேன் மாமா..எதுவுமே பிடிக்கைல என்ன பண்றதுனே தெரில ..அப்படி ஒரு நாள் ரொம்ப கடுப்பா வீட்ல இருந்தப்போ அப்பாஅம்மா எங்கேயோ வெளில போய்ருந்தாங்க வாசல்ல ஏதோ சத்தம் கேக்க போய் பாத்தா வயசான சாமியார் ஒருத்தர் இருந்தாரு..என்ன பாத்தவுடனே ரொம்ப சந்தோஷமா சிரிச்சாரு..தேவிகா நல்லாயிருக்கியா தாயீ???

ஐயா என் பேரு சஹானா..

பேர்ல என்னம்மா இருக்கு ரெண்டுமே அந்த மஹாலட்சுமியோட பேருதான்..என் தாயீக்கு எதுக்கு மனகுழப்பம் எ ன்னைக்கு இருந்தாலும் கார்த்திகேயன் தான் உன் புருஷன்..நீ சந்தோஷமா இரும்மா..அந்த ஈசன் உன் மனசுக்கேத்த மாங்கல்யத்த கொடுப்பான்..நா வரட்டுமா..

ஐயா எதாவது சாப்ட்டு போங்க..

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா உன்னபாத்ததே போதும்..னு சொல்லிட்டு போய்ட்டாரு மாமா..உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவரு சொன்னது ஸ்ட்ராங்கா மைண்ட்ல பதிஞ்சுருச்சு அதுக்கப்பறம் அதபத்தியே மறந்துட்டேன்..உன்கிட்ட சொல்லலனு தப்பா எடுத்துக்காத

ஹே சஹி நீ எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கியோனு தோணிச்சு அதான் கேட்டேன் மத்தபடி உன்கிட்ட எனக்கு எந்த டிவ்ரெண்ஸ்ஸும் தெரில..சந்தோஷமா நம்ம கல்யாணத்தை நினைச்சு தூங்கு புரியுதா..என அவளை சமாதானப்படுத்தி வெளியே வர கௌரி தன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்..

கௌரி ஒரு நிமிஷம் காலைல சொல்லிருந்தனே அதபத்தி கொஞ்சம் பேசலாமா??

சொல்லுங்கண்ணா ஏன் இவ்ளோ தயங்குறீங்க???

இல்லடா அது..சஹானாவபத்தி தான்..என ஆரம்பித்து மேலோட்டமாய் விஷயத்தை கூறிமுடித்தான்..நீ சைக்காலஜி படிக்குறனு கேள்விப்பட்டேன் அதான் உன் மூலமா எதாவது ஹெல்ப் கிடைக்குமாநு கேக்கலாமேநு பாத்தேன்..எனக்கு அவளோட பாஸ்ட் லைப்ப பத்தி தெரிஞ்சுகனும்..

அண்ணா இதெல்லாம் விளையாட்டு விஷயமில்ல டாக்டர பாக்கலாமே????

இல்லடா சஹானாக்கு தெரியாமதான் இத பண்ணணும் அவ எந்த அளவு ஜோவியலோ அதே அளவு சென்சிட்டிவ்..அதனாலதான் உன்கிட்ட கேக்குறேன்..

சில நிமிடம் யோசித்தவள் சரிண்ணா என் சீனியர் ஒருத்தங்க இருக்காங்க  க்ளினிக்கல் சைக்காலஜி படிச்சு அல்மோஸ்ட் ப்ராக்டிஸ் முடிச்சு போஸ்டிங்க்கு வெயிட் பண்றாங்க..அவங்களை வேணா கேட்டு பாக்கலாம் பட் கன்பார்ம்மா முடியும்நு சொல்ல முடியாது..

தேங்க் யூ சோ மச் டா நீ கேட்டுபாரு நா கூட பேசுறேன்..சரி அண்ணா ஒரு நிமிஷம் என்றவள் மொபைலில் காயத்ரியை அழைத்தாள்..விஷயத்தை கேட்டவளோ முதலில் மறுக்க விஷயத்தின் அவசரத்தை புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டாள்..கார்த்திக்கும் அவளிடம் பேசியபின் அவளால் மறுக்க முடியவில்லை..மறுநாள் காலை வருவதாய் ஒத்துக் கொண்டாள்..

மற்றவர்களும் ஹாலிற்கு வந்திருக்க கார்த்திக் அனைவரிடமும் நாளை பற்றியே திட்டத்தை கூறினான்..கண்டிப்பா எல்லாரும் இருக்கும்போது இது எவ்ளோ சக்சஸ் ஆகும்நு தெரில சோ சிவா நீங்க ஷரவ்வ கூட்டிட்டு வெளில போய்ட்டு வாங்க..ஷரவன் நீ எதாவது ரீசன் சொல்லி ரூம்க்கு போய்டு சோ காயத்ரி வர்ற அப்போ நானும் கௌரியும்தான் இங்க இருப்போம்..கௌரி நான் சொல்றபடி சஹானாட்ட பேச்சை ஆரம்பிடா அப்படி போனா மட்டும்தான் தானாவே சஹானாவ நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்..எந்த விதத்தீலேயும் அவளுக்கு நா இதுல சம்மந்தபட்டுருக்கேன்னு தெரீயவே கூடாது ப்ளீஸ்..கவலயே படாதீங்கண்ணா நான் பாத்துக்குறேன் தைரியமாயிருங்க என்றவாறு அனைவரும் படுக்கச் செல்ல கார்த்திக்கிற்கு ஏனோ தூக்கம் வர மறுத்தது..அவளின் கடந்தகாலம் என்னென்ன அதிர்ச்சிகளை கொடுக்க காத்திருக்கிறதோ என்ற பயம் முழுவதுமாய் அவனை ஆக்கிரமித்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.