(Reading time: 29 - 58 minutes)

அவன் நெற்றியில் ஒற்றை விரலால் கோலம் வரைய சற்றாய் அசைந்து படுத்தான்..பின் மெதுவாய் எழுந்தமர்ந்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு எழுந்து குளித்து கீழே சென்றாள்..காலை வேளை ஆதலால் யாரும் எழுந்திருக்கவில்லை கிட்சனில் சத்தம்கேட்க அங்கே சென்றவள் கீதாவை கண்டு உள்ளே நுழைந்தாள்..

குட் மார்னிங் ஸ்வீட்டி..

வாடா குட்மார்னிங்.. என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட??

சும்மாதான்.இதுக்குமேல தூக்கம் வரும்நு தோணல அதான்..நா எதாவது ஹெல்ப் பண்ணவா ஸ்வீட்டி??

ரொம்ப நல்லாயிருக்கு வீட்டுக்கு வந்து ஒருநாள் கூட ஆகல அதுகுள்ள வேலையா நா காபி தரேன் அத சாப்ட்டு வேணா என்கூட கதைபேசிட்டு இரு..வேற ஒண்ணும் பண்ண வேண்டாம் என்றவாறு காபியை கொடுக்க அதை வாங்கியவள் மேடை மீது ஏறியமர்ந்து பருக ஆரம்பித்தாள்..

அதன்பின் காலை உணவுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொடுக்க அவரோடு கதைபேசியபடி நேரம் நகர்ந்தது..ஹாலில் பேச்சு சத்தம் கேட்க கீதாவிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டு அனைவருக்கும் கொடுக்க சென்றாள்..

குட்மார்னிங் அங்கிள்..

குட்மார்னிங்மா..தேங்க் யூ என்று அவர் காபியை எடுத்துக் கொள்ள ஷரவ் ஷரவந்தி என ஒவ்வொருவருக்காய் காபியை கொடுத்துவிட்டு கீதாவிடமிருந்து கார்த்திக்கிற்கு வாங்கிச் சென்றாள்..அப்போதும் அவன் உறங்கிக் கொண்டிருக்க,

ஹே மாமா எழுந்துரு எவ்ளோ நேரம் தூங்குவ நா எவ்ளோ குட் கேள்ளா மார்னிங்கே எழுந்துட்டேன் எழுந்துரு மாமா..

மெதுவாய் அசைந்தவன் பாதி கண்களை திறந்து பார்த்து அவளை கைநீட்டி அழைக்க,அவனருகில் சென்று அமர்ந்தாள்..குட்மார்னிங்..

குட்மார்னிங் சஹி ஏன் சீக்கிரமே எழுந்துட்ட புது இடம்நு தூக்கம் வரலையா??

அப்படிலா ஒண்ணுமில்ல மாமா..இந்தா காபி எடுத்துக்கோ..சீக்கிரமா ரெடி ஆகி ஸ்வீட்டி கீழே வர சொன்னாங்க போ ரெடி ஆகு..

ஆமா நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் இன்னுமும் ஸ்வீட்டிதானா??நல்ல மாமியார் என சிரிக்க,

கண்ணு வைக்காத மாமா..என்றவள் உடைமாற்றச் செல்ல அவனும் குளிக்கச் சென்றான்..வெளியில் வந்தவனின் கண்கள் தன்முன் நின்றவளை கண்டு விரிந்தன..அவன் வாங்கிக் கொடுத்த அந்த வைலட் நிற பட்டில் கழுத்தில் நீளமாய் ஒரு செயின் அணிந்து காதில் பெரிய குடை ஜிமிக்கி அணிந்து அளவான ஒப்பனையோடு தலையில் மல்லியை சூடிக் கொண்டிருந்தாள்..அவனை கண்டவள்,மாமா நீ வாங்கி கொடுத்த புடவை தான் எப்படியிருக்கு??

ம்ம் கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லனுமா சஹி என்றவனின் குரலில் வித்யாசத்தை உணர்ந்தவள் புடவையை சரிசெய்வதை நிறுத்தி அவனைப் பார்க்க அதற்குள் அவளை நெருங்கியிருந்தான்..சுவரோடு அவளை சாய்த்து  தன் ஒரு கையை சுவரில் ஊன்றி மறுகையை அவள் இடையில் படரவிட பெண்ணவளோ மொத்தமாய் உருகிப் போயிருந்தாள்..அவன் தொடுதல் கூறிய பாஷை புரிய மனம் படபடக்க இமைத்துடிக்க அவன் மார்பில் தன் கைகளை வைத்தவாறு தலைகுனிந்திருந்தாள்..

தன்னவளின் நாணத்தில் மேலும் தன்னை தொலைத்தவன் இதழோடு இதழ் பதித்தான் நொடிகள் நிமிங்களாய் கரைய கதவுதட்டப்படும் ஓசையில் தன்னிலையடைந்தவர்கள் சட்டென விலகி நிற்க சஹானாவோ சுவரைப் பார்த்து திரும்பிக் கொண்டாள்..கார்த்திக் சென்று கதவை திறக்க ஷரவந்தி சாப்பிட அழைப்பதற்காக வந்திருந்தாள்..இதோ வரேன் ஷரவ் என்று பதிலளித்து உள்ளே வந்தவன் இன்னுமும் சஹானா அப்படியே நிற்க மென்மையாய் பின்னிருந்து அணைத்தான் இதுக்கே இப்படி ஆனா எப்படி சஹிம்மா இன்னும் எவ்ளவோயிருக்கே என காதில் கிசுகிசுக்க அவனை தள்ளிவிட்டு வாசல்புறம் நகர்ந்தவள் நீ ரொம்ப மோசம் கார்த்திக் என்று ஓடிவிட்டாள்..

ஹலோ ப்ரெண்ட்ஸ் கல்யாண கவனிப்புகள் எப்படியிருந்தது..புதுமண தம்பதிகளை தேன்நிலவு கொண்டாட வைத்தபின் நம்ம வில்லனை பார்க்க வருவோம்..

தொடரும்

Ninnai saranadainthen - 17

Ninnai saranadainthen - 19

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.