(Reading time: 17 - 34 minutes)

அடுத்து அர்ஜுனுடைய, மருத்துவமனை மருத்துவர்கள், அங்கு வேலை பார்க்கும் மற்ற ஊழியர்கள் என்று ஒரு கூட்டம் வந்து சென்றது.

இதற்கு நடுவில் சில அமைச்சர்களும், அதன் பின் நம் ஊரை போன்று, பெரிய சலசலப்பில்லாமல், அந்நாட்டு ஜனாதிபதியும் வந்து மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி சென்றனர். மிகவும் எளிமையாகவே இருந்தனர் அனைவரும்.

“கால் வலிக்குதாடா, கொஞ்ச நேரம் உட்காறியா? என பூஜாவிடம் கேட்டான் இந்தர், அவள் முகத்தில் தோன்றி மறைந்த ஒரு சிறு சுழிப்பை கண்டு..........

“இல்லை ஜித்து, என்னால் சமாளிக்க முடியும்” என்று பூஜா கூறிக் கொண்டிருந்த பொழுது..........

 சம்யுக்தா மேடை ஏறி வந்து “நீங்களும் சாப்பிட ஆரம்பிக்கலாம்” என கூறினார்.

அவர்கள் இருவரும் உடன் இருந்தோரும், மேடை விட்டு இறங்கி வந்து தங்கள் தட்டுகளில் உணவை எடுத்து கொண்டு ஒரு மேஜையில் சுற்றி அமர்ந்தனர்.

இசை குழுவினர் மெல்லியதாக இசைத்து கொண்டு இருந்தனர். அவர்களும் முடித்து சாப்பிட அமர்ந்ததும், அங்கிருந்த பெரிய திரையில் இணைக்க பட்டிருந்த மடி கணினி மூலம் ஒரு படம் ஓட துவங்கியது.

அதில் முதலில் அர்ஜுனும், சம்யுக்தாவும் தோன்றி இந்தரை பற்றிய  சிறு வயது குறும்புகளை கூறி அதன் பின் அவன் தங்கள் வாழ்வில் வந்த வசந்தம் என்று அர்ஜுனும், தனக்கு கிடைத்த வரம் என்று சம்யுக்தாவும் நெகிழ்ச்சியுடன் கூறி, இருவரையும் வாழ்த்தி பூஜாவை தங்கள் வீட்டின் தேவதையாக வரவேற்பதாக கூறி முடித்தனர்.

அடுத்து பீஷ்மரும், சரோஜினியும் தோன்றி பூஜாவை பற்றி இரண்டு வரி கூறி இனிமேல் அவளை விட்டு இருப்பது தான் கொஞ்சம் கஷ்டம் என கூறி நெகிழ்ந்தனர். உடனே பூஜா எழுந்து அவர்கள் நாற்காலியின் பின்னே நின்று, அமர்ந்திருந்த இருவரையும் அணைத்து கொண்டாள்.

அடுத்தும் ஒவ்வொருவராக தோன்றி இந்தரை பற்றியும் பூஜாவை பற்றியும் இரண்டு வரி கூறினர். அதில் இளையவர்களும் தோன்றினர்.

அபி வந்து, இந்தர் அண்ணா ரொம்ப படிப்ஸ், என் பாடத்தில் சந்தேகம் கேட்டால், நன்றாக சொல்லி கொடுப்பார், அதில் திருப்பி எதாவது கேட்டு எனக்கு தெரியவில்லை என்றால் தலையில் நன்றாக கொட்டு விழும்.

“அப்போ நீங்க மக்கா” என்று மெதுவாக கேட்டாள் அருகிலிருந்த குழலி, அபியிடம்.

“ஹே, அது எதோ சின்ன வயதில்”. என்று சமாளித்தான் அபி......

ஸ்ருதியும், ஹெலனாவும் தோன்றி, பூஜாவுடனான நட்பை பற்றி கூறினர்.

அனைவருக்கும் சாபிட்டு கொண்டே அந்த குறும் படத்தை  பார்க்க நன்றாக இருந்தது. அதற்கு யோசனை கூறிய இந்தரை அனைவரும் பாராட்டினர். பூஜாவிற்கு தான் இன்ப ஆச்சரியமாக இருந்தது.

அனைத்தும் முடிந்து கிளம்ப இருந்த பொழுது ஒருவர் வந்து பரிசை நீட்டினார். இந்தரிடம் அவர்கள் மொழி திவைஹியில் பேசினார். முதலில் அதிகம் கவனிக்காமல் ஸ்ருதியுடன் பேசிக் கொண்டு இருந்த பூஜா, அவரது குரல் எங்கோ கேட்டது போல் இருக்கவும், திரும்பி அவரை பார்த்தாள். எங்கோ பார்த்தது போல் இருந்தது.

அடுத்து அவர் அர்ஜுனிடம் சென்று சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். தான் வர தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டு , கல்யாணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்.

அர்ஜுனும், அவரிடம் “அன்று மழை இரவில் இருவருக்கும் பாதுகாப்பு அளித்து, தங்க இடம் கொடுத்தற்கும் நன்றி கூறிக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு அவர் அர்ஜுனிடம், “இதுக்கே இப்படி சொல்றிங்க, நான் தான் அவங்க கல்யாணத்தை முதலில் நடத்தி வைத்ததே” என்று பெருமையாகக் கூறினார்.

அதை கேட்ட பூஜாவிற்கு, நியாபகம் வந்தது அவர் யார் என்று.  அந்த பொடு ஹுரா தீவின் தலைவர் என்பது. இவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறார், அன்று ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை என யோசிக்க ஆரம்பித்தாள்.

அர்ஜுனுக்கும் அவர் கூறியதை கேட்டு குழப்பமாக இருந்தது, இவர் ஏன் திருமணம் செய்து வைத்தார் என்று. அனைவரையும் நன்றாக குழப்பி விட்டு அவர் கிளம்பி சென்று விட்டார்.

விழா முடிந்து விருந்தினர் அனைவரும் கிளம்ப, ஊரிலிருந்து வந்தவர்கள் அவரவர் அறைக்கு திரும்பினர்.

அர்ஜுன், சம்யு, இந்தர் , பூஜா, இவர்களுடன் பீஷ்மரும் சரோஜினியும் கிளம்பி விரைவு படகில் மாலே சென்று அடைந்தனர். வீட்டை அடைந்ததும், முன்பே வீட்டிற்க்கு வந்திருந்த சித்தி சுஜி ஆரத்தி எடுத்து உள்ளே மணமக்களை அழைத்து சென்றார்.

இந்தரின் அறை அலங்கரிப்பை முடித்திருந்த சுஜி , சம்யுக்தாவுடன் சேர்ந்து, பீஷ்மருக்கும்,சரோஜினிக்கும், வீட்டை சுற்றி காண்பித்து, அடுத்த தளத்தில் இருந்த, விருந்தினர் தங்கும் அறைக்கு அவர்களை அழைத்து சென்று தங்க வைத்தனர். மற்றொரு அறையில் சுஜியையும் விட்டு மேலே வந்தார் சம்யுக்தா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.