(Reading time: 15 - 30 minutes)

13. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

ன்று மலர்ந்த காலைப் பொழுதே அனைவருக்கும் புத்துணர்ச்சி தருவதாய் இருந்தது. கல்லூரிக்கு கிளம்பும் சமயம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மனது சந்தோஷத்துடன் இருந்தது. அனுவுக்கு ஆருவை சமாளிக்க ஒரு நூலின் பிடி சிக்கியதை நினைத்து சந்தோஷம். ஆருவுக்கு அனுவிடம் புரியும்படி எடுத்துக் கூறியாகி விட்டது, இனிமேல் அவள் தன்னை வற்புறுத்த மாட்டாள் என்று நிம்மதியாக இருந்தது. நந்துவிற்கு காலையிலிருந்து உற்சாகமே வடிவாய் தன்னிடன் நட்புடன் பேசும் தீப்தியைக் கண்டு சந்தோஷமாய் இருந்தது. தீப்திக்கு இன்று தன் எண்ணம் நிறைவேறப் போகும் நாள் என்று சந்தோஷமாய் இருந்தது. ஜெனிக்கு தன் தந்தை தன்னிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டார் என்று சந்தோஷமாய் இருந்தது. கவினுக்கு ஒரு இரவு முழுதும் விடுத்து ஜெனியை சந்திக்க போகும் சந்தோஷம், அருணுக்கு கனவில் நஸ்ரியா ஆர்யாவை விட்டுவிட்டு தன்னுடன் டூயட் பாடிய சந்தோஷம், செல்வாவுக்கு ஹாஸ்டல் ஆயா ஒரு தோசை எக்ஸ்ட்ரா தந்த சந்தோஷம், சீனியர்ஸ்க்கு ஜுனியர்ஸ் வர்றாங்கன்னு சந்தோஷம், ஜுனியர்ஸ்க்கு புதுசா காலேஜ் போறோம்னு சந்தோஷம், செகுரிட்டி அண்ணாவுக்கு கடுகடு பிரின்சி இன்னிக்கு அவரைப் பார்த்து ‘ குட் மார்னிங்க் ‘ சொன்னது சந்தோஷம்.....இன்னும் அங்கிருந்த காக்காகு.....ஒ.கே ஒ.கே நீங்க போதும்னு ஹை டெஸிபல்ல கத்துரதுனால்ல இதோட விடுறேன் இல்லனா, லிஸ்ட் இன்னும் நீளும்..............

ஃப்ரெஷர்ஸ் உள்ளே நுழைவதை வேடிக்கைப் பார்த்தபடி தங்களுக்குள் கதை அடித்துக் கொண்டிருந்தார்கள் கவின் மற்றும் நண்பர்கள். ஜெனியும் சிறிது நேரத்தில் வந்து கலந்து கொள்ள, அவளை சீண்டியபடியே தன் மொக்கையை தொடர்ந்து கொண்டிருந்தான் கவின். அப்போது பேசிக் கொண்டிருந்த அருண், பேச்சுக்கு அப்படியே ஃபுல் ஸ்டாப் போட்டு, கண்களை விறித்து எதிரே பார்க்க, என்னவென்று பார்த்த மற்றவர்களும் அதே நிலைக்கு போயினர். அழகான பிங்க் கலர் சுடியில் மிதமான மேக் அப்புடன், ரதி போல் அவர்களை நோக்கி வந்தாள் தீப்தி. அங்கிருந்த பெண்களே ஒரு நிமிடம் மற்றதை மறந்து அவளை ரசித்தார்கள் என்றால், பசங்களை கேட்கவா வேண்டும். அலட்சியமாய் ஒற்றை முடியை பின்னால் தள்ளியபடி கவினின் அருகில் சென்றவள்,

“ஹாய் கவின்....” என்றாள்,

“ ஹா..அ...ய்..” என்று ஒருவாறு திக்கித் திணறி கவின் சொல்லி முடிக்க,

“ உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்....” என்றாள்,

“ எங்கிட்டயா...என்ன பேசனும்...??”

“ அத தான் தனியா பேசனும்...” அவள் அழுத்தத்துடன் சொல்லவும், தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

“ பரவாயில்ல...இங்க இருக்கிறவங்களுக்கு தெரியாம ஒன்னும் பேச வேண்டியதில்ல...அதுனால இங்கயே சொல்லு..” என்றான், ஒரு நிமிடம் தயங்கியவள், தோள்களை குளுக்கிக் கொண்டு,

“ உனக்கே ப்ரச்சனை இல்லாதப்போ எனக்கு ஒன்னுமில்ல....” என்றபடி ஒரு முறை ஆழமூச்செடுத்துவிட்டு, கவினைப் பார்த்தவாறே,

“ ஐ லவ் யு கவின்...” என்றாள். இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத கவின்,

“ வாட்...??? கம் அகைன்.....?? “ என்றான், ( பார்றா, தொர பதட்டத்துல இங்குலீஸ்ளாம் பேசுது...)

கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல், “ ஐ மீன் ஐ லவ் யு....அண்ட் யு ஹாவ் டூ லவ் மீ....” என்றாள். ஒருவேளை தன்னுடன் விளையாடுகிறாளோ என்று அவள் கண்களைப் பார்த்தவன், அதில் மருந்துக்கு கூட தயக்கம் சிறிதும் இல்லை, அதில் ஒரு நிச்சயமும்  ஒரு வெறியுமே இருந்தது. அதிர்ந்து போய் நின்றிருந்த அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தவள்,

“இன்னும் தெளிவா சொல்லனும்னா...யு ஆர் மைன்....நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்....நீ வேற யாரையும் விரும்பகூடாது.....நா… அத அலோ பண்ணவும் மாட்டேன்...” என்று குறிப்பாக ஜெனியைப் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். அவள் அப்படி சொன்னவுடன் ஜெனியை திரும்பிப் பார்த்த கவினின் கண்களில் பயம் தெரிந்தது. அதைக் கண்ட ஜெனியின் முகம் மாறியது, வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

கோபத்துடன் தீப்தியை பார்த்தவன், கண்களை மூடி கோபத்தை அடக்கி, நிதானத்துடன், கை சொடுக்கி அவளை அழைத்தான்,

“ஹல்லோ மேடம்.....இங்க வாங்க....” என்றவுடன், திரும்பி அவனைப் பார்த்த தீப்தி, அதே அலட்சிய பாவத்துடன் அவன் அருகில் வந்தாள்.

“ என் பதில கேக்காம போற?..” என்றான்,

“ நான் உங்கிட்ட எந்த கொஸ்டினும் கேக்கலியே.....!! அதோட சரின்னு சொல்றத தவிர உனக்கு எந்த ஆப்ஷனும் இல்ல.....” என்றாள்,

“ ஏய்..!!!.உன் திமிர எல்லாம் உங்க வீட்டோட வச்சிக்கோ.... நான் என்ன நீ வளக்குற நாய்குட்டினு  நெனச்சியா, நீ கூப்பிட்டவுடனே உன் பின்னாடியே வர்றதுக்கு....” என்றான் சட்டென்று மூண்ட கோபத்துடன்,

“வராம....எங்க போகப் போற...?, இங்கபாரு என்னால கெஞ்சலாம் முடியாது. நீயே சரினு சொல்லிரு...இல்லனா சொல்ல வப்பேன்...!!” என்றாள் திமிறாக,

“ ஒரு பொண்ணுகிட்ட போயி ஹார்ஷா பேசவேணானு பார்த்தா, ரொம்ப பேசிட்டே போற....உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ....” என்றான்,

“ செய்யத்தான் போறேன்...ஆன இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ...” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.

கவின் நேராக ஜெனியிடம் சென்றான். எப்படி அவளை அனுகுவது என்று யோசித்தபடியே அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

“ ஜெனி...நீ என்மேல கோவப்படுறது ஞாயமே இல்ல...” என்றான். அவள் எதுவுமே பேசவில்லை, நிமிர்ந்து அவனைப் பார்த்து விட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள். அதற்குள் அவள் கண்களில் வருத்தத்தை பார்த்தவன், ஆச்சர்யத்துடன்,

“ஏய், கவலைபடுறியா..? அவள்ளாம் ஒரு ஆள்னு அவ சொன்னதுக்கெல்லாம் கவலைப் படலாமா..?” என்றான்,

“ நான் அதுக்காகலாம் கவலைப்படல....நீ செஞ்சது தான் வருத்தமா இருக்கு...!!” என்றாள், கவின் புரியாமல் பார்க்கவும்,

“ காதலுக்கு நம்பிக்கைதான்டா முக்கியம், அது போயிருச்சுன்னா, அங்க காதலே இல்லடா...அவ வந்து என்ன சொன்னாலும் நான் நம்பிடுவேன்னா.? அப்படி பயந்து போயி என்னப் பாக்குற..?, என்ன நீ புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..?. உன்னவிட, உன்னப் பத்தி எனக்குத்தான்டா நல்லா தெரியும், ஆனா அது உனக்கு தெரியாம போயிருச்சே....” சொல்லி முடிக்கும் போதே கண்களில் நீர் திரண்டது.

அவள் சொன்னதையெல்லம் உள்வாங்குவது போல் அவளையே பார்த்தவன்,

“தாங்க்ஸ் அன் சாரிடா ஜேக்குட்டி... உனக்கு தெரியாதா, உன் மாமனுக்கு தான் அப்பப்போ நட் லூஸாயிருது...விடு அதான் டைட் பண்ண நீ இருக்கியே...” என்றான் நிலமையை இலகுவாக்க எண்ணி. பின்பு, அவள் கைகள் இரண்டையும் எடுத்து மடக்கி, அதில் தன் உதடுகளைப் பதித்தவன்,

“ இத உங்கப்பாகிட்ட பெர்மிஸன் வாங்கினதுக்கு அப்புறம் தான் சொல்லனுன்னு நெனச்சேன். ஆனா இப்போ சொல்லாம இருக்க முடியல....ஐ லவ் யு சோ மச் மை டியர் ஜே...” என்றான் தன் இதயத்திலிருந்து. வாழ்னாளில் முதல் முறையாக வெட்கப்பட்ட ஜெனிக்கு, பரவசத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்களில் கண்ணீருடன் சந்தோஷமாக சிரித்தவளின் பிம்பத்தை தன் மனதின் சேஃப்டி லாக்கரில் பூட்டி வைத்துக் கொண்டான் கவின்.

“ ஒகே...போலாமா.. நமக்குள்ள என்ன ப்ரச்சனையோன்னு எல்லாரும் கவலைப் பட்டுட்டு இருப்பாங்க...அதோட, நம்ம ரெண்டு பேருக்கும் இந்த எமோஷனல் சீன் எல்லாம் செட்டாகாது. நமக்கு ஆக்ஷன் + காமெடி தான் வொர்க்கவுட் ஆகும்..” என்றான்.

“ காமெடி சரி, அதென்ன ஆக்ஷன்..ஏதோ ஹீரோ ரேஞ்சுக்கு பேசுற..நீ எப்பவுமே  காமெடி பீசுதான்... “ என்றாள், பழைய நிலைக்கு திரும்பிய ஜெனி,

“ ஹலோ... அடிச்சாதான் அக்ஷன்னு யார் சொன்னா? அடி வாங்கினா கூட அக்ஷன் ஹீரோ தான்...” என்றான் கெத்துக் குறையாமல்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.