(Reading time: 5 - 10 minutes)

01. ஆசை ஆசையாய் - அனிதா S

டே மச்சா நம்ம டீம் ஜெய்க்கனும்டா, ஒரே பால் தாண்டா இருக்கு. சிக்ஸ் அடிக்கனும் டா.” என்று சொல்லிக்கொண்டே வந்தான் ராம்,தனது நண்பன் கிரிஷ்னாவிடம், சரி மச்சி என்று கூறி நான் பாத்துக்கிறேன் என்னும் ஜாடையில் தலையை அசைத்து விட்டு அடிக்க தயாரகினான்.

12 ஆம் வகுப்பு விடுமுறை நண்பர்கள் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் தெருவின் முடிவில். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க பந்து கிரிஷ்னாவை நோக்கி வந்தது. பந்து வரும் திசையை உற்று நோக்கியபடி தனது பேட்டை பிடித்து கண்களை மூடி ஓங்கி அடித்தான். பந்து கண்ணுக்கு புலப்படும் தூரத்தைக் கடந்தது. பந்தை தேடிச் சென்றனர் அடர்ந்த காட்டுக்குள் கண்டு பிடித்தனர். கிரிஷ்னா பந்தை எடுக்க குனிந்தன். நிமிர்ந்த அவனுக்கு முன்னாடி சிங்கமும் பின்னாடி கரடியும்.இரண்டும் சுற்றி சுற்றி வந்தன கிரிஷ்னாவை.

Aasai aasaiyaaiகிரிஷ்னா பயப்படாதவனாக திமிராக பேசிக்கொண்டிருந்தான் அவைகளிடம், அவை இரண்டும் கிரிஷ்னாவை நெருங்கியது. திடீரென்று ராம் மரத்திலிருந்து கீழே குதித்தான். சிங்கமும் கரடியும் ஓடிப்போயின பயத்தில். விழுந்தவன் விழித்தான்...

டே ராம் மணி பத்தாச்சு, இன்னும் என்ன தூக்கம் உனக்கு, இன்னும் ரெண்டு நாள் தாண்டா, ரிசல்ட் வரட்டும் இருக்கு உனக்கு” என்று அப்பாவின் குரல் கேட்டு. கனவு கலைந்தது ராமிற்கு.

“லீவ் ல தான புல்ல தூங்குறான். இவ்ளோ நாள் படிச்சா களைப்பு போகனும்ல” என்று ராமிற்கு அம்மா சப்போட்.

“இப்புடி செல்லம் குடுத்தே கெடுத்து வச்சுருக்க அவன நீ. சரி எழுப்பி நேரத்துக்கு சாப்பாடு குடு. இவ்ளோ நேரம் தூங்குனா எப்போ சாப்புட. அப்பரம் ஐய்யாவுக்கு ஏகபட்ட வேலை இருக்கும் வெளில கெளம்பிருவாரு, சாப்புடலாம் நேரம் இருக்கது, உடம்பு என்னத்துக்கு ஆகுறது”, என்று அப்பாவின் அன்பு கலந்த கண்டிப்பு பேச்சு.

“அதெல்லாம் சமத்தா இருப்பான், நா பாத்துக்கிறேன்” என்றாள் லஷ்மி.

“நா கேளம்புறேன், லன்ச் எடுத்துகிட்டேன்” என்றவாறு வேலைக்கு புற்ப்பட்டார் தியாகு.

“ராம் எழுந்திரு” என்று அழைத்தபடி தனது வேலைகளை செய்யத் தொடங்கினாள்.

ப்பாவின் குரல் மறைந்ததும் ராம் மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து குளித்து சாப்பிட்டு வெளியில் கிளம்பினான் வழக்கம் போல. விடுமுறை நாட்களில் நண்பர்கள் சந்திக்கும் இடம் தெரு முனையில் உள்ள க்ரவுண்ட்ல. அங்க மீட் பன்ன பின்னாடி தா வேற எங்கனாலும் போறது அவர்களின் வழக்கம். ராமும் கிரிஷ்னாவும் நெருங்கிய நண்பர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து.

அன்றும் க்ரவுண்ட்ல் நண்பர்கள் ஒன்று கூடினர். என்றும் இல்லாத அமைதி அந்த சந்திப்பில். காரணம் இன்னும் இரண்டு நாளில் 12த் ரிசல்ட். ஆனால் அவர்கள் மதிபெண் பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் பாஸ் செய்துவிடும் அளவிற்கு தான் தேர்வு எழுதியிருப்பதாக நம்பிக்கை. மேற்படிப்பிற்காக பிரிய வேண்டிய சூழ்நிலை வரலாம். அது தான் அவர்களின் வருத்தம்.

அந்த நேரத்தில் நண்பர்களில் மணி எதோ கிண்டலாக சொல்ல, அவர்கள் வழக்கம் போல மாறி விட்டன. விளையாட தொடங்கி கலகலப்பாகி விட்டனர். இன்னாள் வரை ராமும் கிரிஷ்னாவும் யாரிடமும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்தது இல்லை.

இப்படி சந்தோஷமாக துள்ளி திரியும் இவர்களின் நட்பை பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்வார்கள். அதில் செந்தில் என்பவனும் ஒருவன். இவனும் அவர்களுடன் ஒரே பள்ளியில் தான் பயின்றான். இவன் மனதிற்குள் அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் அதை அவர்களிடம் காட்டிக்கொண்டது இல்லை. நன்றாக தான் பேசி பழகி வந்தனர் எல்லோரும்.

சாயங்காலம் நண்பர்கள் விடைகொடுத்துவிட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினர். ராமும் கிரிஷ்னாவும் சிறிது நேரம் கழித்து கிளம்புவது தான் வழக்கம். ராமிற்கு ஒரு தங்கை உண்டு. 11 ஆம் வகுப்பு முடிதிருக்கிறாள்.அடுத்து 12த். கிரிஷ்னாவிற்கும் ஒரு அக்கா உண்டு. 1ஸ்ட் இயர் பி.இ படிகிறாள்.

ரண்டு நாட்கள் ஓடியது. இரவு ஆனது.விடிந்தால் ரிசல்ட், அவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க போவது அது தான்.ராமிற்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. காரணம் உள்ளது அதற்கும். கிரிஷ்னாவிற்கும் அப்படி தான்.

ஏனெனில் 11த் படிக்கும் போது ராமும் கிரிஷ்னாவும் வேறு வேறு பிரிவுகளிளல் படித்தனர். ராமிற்கும் கிரிஷ்னாவிற்கும் நடுவில் ஒரு பெண் வந்தாள்.அவள் பெயர் நிஷா. ராமும் நிஷாவும் ஒரே பிரிவில் படித்தனர்.அவளுக்கு ராமை மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவனது துடிப்பான சுறுசுறுப்பான செயல்கள் மற்றும் ராம் அழகிய தோற்றம் கொண்டவன். நிஷா தானாக ராமிடம் சென்று அறிமுகமாகி பேச ஆரம்பித்தாள்.ராமும் எல்லாரிடமும் பேசுவது போல நன்றாக பேசுவான் அவளிடமும். ராம் தன் மீது மட்டும் தான் அதிக பாசம் வைத்திருக்க வேண்டும் தன்னிடம் மட்டும் தான் நல்லா பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்க தொடங்கினாள் நிஷா. அதனால் நிஷாவிற்கு ராம் கிரிஷ்னா நட்பு பிடிக்கவில்லை.ஏனெனில் ராமும் கிரிஷ்னாவும் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சேர்ந்தே தான் இருப்பர்.

நிஷா ராமிடம் ஏதேதோ சொல்லி பிரிக்க பார்த்தாள். அதை உணர்ந்த ராம் நிஷாவை விட்டு மெல்ல மெல்ல விலகினான். அதனால் கோபம் கொண்ட நிஷா ராமிடம் சவாலாக கூறினாள்.

“உங்க நட்பு எத்தனை காலம் என்று நானும் பார்க்கிறேன். நீங்க சேர்ந்து என்னத்த சாதிக்க போறீங்க. மொத 12த் பாஸ் பண்ண முடியுமா உங்களாள”, என்று கோபமாக கத்தி விட்டு அந்த இடத்தை விட்டு செல்ல தயாராகினாள்.

அதை எல்லாம் கவனித்த கிரிஷ்னா,

“என்ன நடக்க போகுதுனு பாரு பொறுத்திருந்து. குட் பாய்..வாடா நண்பா” என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றனர்.

12த் ல நிஷா வேற பள்ளிக்கு சென்று விட்டாள்..அதன் பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.அந்த நினைவுகளும் இன்னும் மறக்க வில்லை இவர்கள் மனதில்.அதனால் தான் அவர்களின் கண்ணில் தூக்கம் வராமல் நினைவுகளில் மூழ்கியிருந்தார்கள் எனலாம். இது நமக்கு சிறு பிள்ளை தனமாக தோன்றினாலும் அவர்கள் வயதிற்கு தன்மான பிரச்சனையாக தொன்றியது.

எப்படியோ யோசித்த படி உறங்கினான் ராம்...விடிந்தால் காலை 9.00 மணிக்கு ரிசல்ட்... 

தொடரும்...

Go to episode #02

{kunena_discuss:699}

24 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.