(Reading time: 9 - 17 minutes)

07. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

வாழ்கை கதையில் இன்னல்கள்  ஓசைப்படாமல் அறிமுகமாகி, திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைந்து, மாறுதல்கள் மெல்ல இதயத்தில் கத்தியின்றி சில ரத்தங்கள் சிந்தி சிதறி விடுகிறது.

மனசாட்சி உறுத்தல் அதிகமாக இருக்க நிஷா கவிதாவின் செல்லுக்கு அழைத்தாள். மூன்று முறை முயற்சிக்கு பின் எடுத்தவள் கேள்விகளை தொடுக்கலானாள்,

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!"நிஷா, எப்படிங்க இருக்கீங்க, உங்க போட்டோகிராப்பி எப்படி இருக்கு?? எப்போது முடியும்?? நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.."

"ஏய், கவி மூச்சு விட்டுக்கோ, ஏன் இப்படி வேகமா பேசுற ?? "

"இல்லைங்க வேலை இருக்கு" மூன்று வேளை சமையலும் மற்ற  வேலைகளுமே அவள் நேரத்தை உறுஞ்சி எடுப்பதை எப்படி சொல்ல முடியும்.

"ஏய் வாழ்த்துக்கள், வேலை உனக்கு இவ்வளவு சீக்கரமாக கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைப்பா "

மேலும் இனி தான் நிம்மதியாக வேலையில் இறங்குவதாகவும், சில நாட்களாக அவள் மனம் அமைதியின்றி இருந்ததை  அவள் சொல்லவும் கவி ஏதும் சொல்லவில்லை.

 இரசனைக்கு மன அமைதி தேவை. ஏதோவொரு வகையில் தனக்கு உதவி செய்த நிஷாவாது நன்றாக இருக்கட்டும் என்று தோன்ற தன் நிலையை அவள் சொல்லாது விட்டாள்.

ந்த பக்கமாக கடந்து சென்ற ஆகாஷ் இவள் மரியாதையுடன் பேசுவதை கேட்டவன் சலனப்பட்டான். சிலென்று காற்று வீச பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தவள் எதற்குமே நேர்மறையாக கேட்போரின் மனம் சங்கட படாதவாறு பேசுவதை கேட்டவனிர்க்கு நிஷாவாக இருக்குமோ என்று தோன்ற

"நிஷா, நிஷா " என்று கூச்சலிட்ட படி அவள் முன் நின்றான்.

பேசிகொண்டிருந்தவள் கைபேசியில் பேச்சை நிறுத்தி " சொல்லுங்க ஆகாஷ் " என்றாள்.

சத்தமாக எரிச்சலுடன்," எனக்கு பசிக்கிறது, நீ என்ன ஜாலியாக பேசிட்டு இருக்க இங்க??" என்று உரிமையுடன் கேட்டான்.

கவி,"இப்போ தானே அண்ணா வரட்டும் என்றீர்கள் ?" என்று கேட்க,

"பரவாயில்லை, இப்போ எனக்கு பசிக்கிறது, பேசிவிட்டு  சீக்கிரம் வா!!  " என்று சொல்லி அங்கேயிருந்து அகன்று மறைந்து நின்று அவள் பேசுவதை கேட்டான்,

"ஒன்னுமில்லைங்க, அது நான், அர்ஜுன், ஆகாஷ் எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம் அதற்க்கு தான் ஆகாஷ் கூப்பிட்டு போறார் "

உணவை அருகில் அமர்ந்து சாப்பிட அல்ல பரிமாற அழைக்கிறான் என்றால் அது இன்னமும் அதிகமாக தெரியும், பின்னே  நீயும் நானும் சேர்ந்து போட்ட திட்டம் உடைந்து சுக்குநூறாகி போக தெரிந்தவன் தண்டனை கொடுத்திருக்கிறான். தண்டனை அனுபவித்து கொண்டிருகிறேன் என்று சொல்லவா முடியும்.

கேட்டவளிற்கு காந்தலாக போனது. எதையோ இழந்துவிட்ட உணர்வு. அழைப்பை துண்டித்து விட்டாள் ஆகாஷ் பசியாக இருப்பானே என்பது தோன்ற.

ஆகஷிற்கு குஷியாகி போனது அவன் மனம் நிச்சயமாக நிஷா குழம்பி போயிருப்பாள் என்பதை நம்பியது.

சந்தோஷத்தில் கைகளை உயர்த்தி குதூகலித்து அவன் நிற்க, 

"அண்ணனும் தம்பியும் என் உசுர ஆளுக்கு ஆள் வாங்குறாங்க " என்றப்படி பால்கனியிலிருந்து கவி  வீட்டினுள் நுழைய,  இருவரும் மற்றவரிடம்  மாட்டிக்கொண்டமே  சிரித்துக்கொண்டே கீழ் இறங்கி வந்தனர்.

ந்த நேரம் வீட்டின் உள்ளே நுழைந்த அர்ஜுன் கண்களில் இந்த காட்சிப்பட எரிமலையாகி போனான் 

"அர்ஜுன் சார், சாப்பிட வாங்க" என்று கவிதா அழைக்க

ஒரு முறைப்பில் அவளை அளந்து விட்டு உடை மாற்றிக்கொண்டு வருவதாக சொல்லி சென்று விட்டான்.

உணவருந்தும் நேரம் மேஜையில் அமர்ந்தவன், சாப்பிடும் அனைத்தும் குறை சொல்லிக்கொண்டே உள்ளே தள்ள கோபத்தின் உச்சிக்கே சென்றாள் கவி.

இரவு வேலைகள் எல்லாம் முடிந்து, உடம்பு ஒய்வெடேன் என்பது போல் வலிக்க  படுக்க அறைக்கு சென்றுக்கொண்டிருந்தவள் கண்களில் அந்த காட்சி பட, உற்சாகமாகி போனாள்.

தோட்டத்தில் அர்ஜுன் மனதில் எண்ண ஓட்டங்களுடன் புகைப்பிடித்து கொண்டு நடந்துகொண்டிருந்தான். வேணிம்மா "என் பேரன் பத்திரைமாத தங்கம் " என்று பீத்திக்கொண்டது ஞாபகம் வர அங்கே நின்று அவனை கவனித்தாள். பலமான சிந்தனை போலும் ,அடுத்தடுத்து ஊதி தள்ளியவன் எதேர்ச்சையாக திரும்ப அங்கே கவிதா நின்றுகொண்டிருந்தாள் ,

"என்ன அர்ஜுன் சார், டவிடோப் பிரான்ட் போல, நீங்க டி-டோடளர் என்று உங்க பாட்டி சொன்ன ஞாபகம்!! "

"இது உனக்கு தேவையில்லாதது, போய் தூங்கு" என்று அவன் சொல்ல 

"அது எப்படி அர்ஜுன் சார்??" என்று குறும்பாக சொல்ல 

"ஏய்ய்.. ஒரு தடவை சொன்னா புரியாது..?? இப்போ இடத்தை காலி பண்ணு இல்லை நாளைக்கு மொத்தமா காலி ஆகிடுவ " என்று பிளிற 

கவிதா கிளம்பி விட்டாள் மனதில் திட்டத்துடன்.                       

நடக்க எத்தனிதவளை நிறுத்தி "என் தம்பியை மயக்க ரொம்ப முயற்சி பண்ணுவது போல் தெரிகிறதே ?' என்றான்.

"நீங்க இருக்கும் போது நான் ஏன் அர்ஜுன் சார் உங்க தம்பியை ட்ரை பண்ண போகிறேன் " என்றாள் நையாண்டியாக.

அவள் ஏளனமாக சொல்வது தெரிந்தும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதை அவனால் உணரமுடிந்தது.

"நல்லா பேசுற??"

"நன்றி "

டுத்த நாள் காலை வேணிம்மா அறையில் கவிதா " பாட்டிம்மா, இப்படி படுத்துட்டே இருந்தா சோர்வா தான் இருக்கும், வாங்க வெளியே தோட்டத்தில் கொஞ்ச நேரம் உலாவலாம் "

வேணிம்மா,"நான் கேட்கும் போதெல்லாம் வேண்டாம் உடம்பு தேறட்டும் என்பாயே " என்று கேட்க 

"நீங்க இன்னிலேர்ந்து நடக்கலாம் பாட்டி, வாங்க " என்று அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்து விட்டாள். 

உலாவி விட்டு முந்தைய தினம் அர்ஜுன் நின்று புகைத்துகொண்டிருந்த இடத்தின் பக்கத்தில் ஒரு பெஞ்ச் இருக்க அங்கே அமர செய்தாள்.

பலபலவென தெரிந்த அந்த புகைந்த சிகரெட் துண்டை கையில் எடுத்த கவி," பாட்டி இங்க பாருங்க யாரோ நம்ப வீட்டுல சிகரெட் குடிக்கறாங்க " என்று அதிர்ச்சியாக சொன்னாள்.

வேணிம்மா,"தோட்டகாரன் குடித்திருப்பான்" என்று அவர் சொல்ல 

கவிதா "பாட்டி இது டவிடோப், ஸ்விஸ் மேட்!!" என்று சொல்லவும் அவளை உற்றுபார்த்தார் பின் 

அவரே,"அர்ஜுன்...” என்று குரல்  கொடுத்து கூப்பிட 

பதட்டமாக குரல் கேட்டு ஓடி வந்த அர்ஜுன் "பாட்டி ஏன் இப்படி கத்துறீங்க ??"  என்றான்.

அவர் கையில் இருந்ததை பார்த்தவுடன் புரிந்தது, பக்கத்தில் கவிதா கண்களை சிமிட்டிய படி இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்க அவளின் திட்டம் என்று புரிந்தது அவனிற்கு.

வேணிம்மா, "இன்னமும் நீ இந்த பழக்கத்தை விடலையா?? இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டார். அவர் குரலில் கோபம், சோகம், அதிர்ச்சி எல்லாமே கலந்திருந்தது. அர்ஜுன் கவிதாவை முறைத்தான்.

அதன் விளைவு அவனிற்கு நன்றாகவே தெரியும், அடுத்த அரைமணி நேரத்தில் சௌமியா போனில் "ஏன் கண்ணா பாட்டி மனசு கஷ்ட படற மாதிரி நடந்துகிற" என்று ஆரம்பித்து பிழிந்து விட்டாள்.

அர்ஜுன் மனம் ஓய்ந்துபோனது.  சிறு வயதிலிருந்தே அவன் செய்யும் எந்த ஒரு காரியத்தையும் அக்காவின், பாட்டியின் விளைவுகளை பற்றி யோசித்தே செய்வான் காரணம் அவர்களின் பொங்கி வழியும் பாசம்.

பல நேரத்தில் உறுதுணையாக நிற்கும் பாசம் சில நேரத்தில் முட்டுகட்டையாகவும் இருக்க சின்ன சின்ன சந்தோஷங்களை அவன் தொலைத்திருக்கிறான். இவை யாவும் அவனை பலமாக பாதித்தது.

ண்மூடி கடந்த காலத்தில் இருந்தவனை

"அர்ஜுன் சார் சாப்பிட வாங்க"  என்று அழைத்தப்படியே உள்ளே நுழைந்தாள் கவி.

கவிதா வீட்டில் அவன் பாட்டியோடு இருப்பது நல்லதல்ல அவர்கள் இருவரும் இணைந்து இருப்பது ஏதோ ஒருவகையில் எரிச்சல் மூட்டியது. 

"ஏய் உன் நிஜ பெயர் என்ன??"

"கவிதா "

"சரி என்ன படிச்சிருக்க "

"எம்.பி.ஏ பினான்ஸ் மனேஜ்மெண்ட் " அவள் சொல்ல 

"அப்போ நாளையிலிருந்து என்னோட கம்பெனிக்கு வா, சமையல்காரன் மத்தியானம் வேலைக்கு வந்திடுவான்"

அவள் இமைக்க மறந்து பார்க்க, அவன் "இந்த சகுனி வேலைக்கு பயன்படும் மூளையை நான் கொடுக்கும் வேலையில் பயன்படுத்து " என்று சொல்லிவிட்டு அகன்றான். கவிதா அதிர்ச்சியில் உறைந்து நின்றது நிமிடம் தான். அதன் பின் அவள் கீழ்வானம் விடிவதை அவள் மனம் கொண்டாடியது.

"ர்ஜுன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தவில்லையாம் கணேஷ்" என்று அழுது வடியும் குரலில் சௌமியா நூறு மூறை சொல்லிக்கொண்டே இருந்தாள்.

சௌமியின் புலம்பல்கள் கேட்டு கணேஷ் தலைவலிக்க ஆரம்பிக்க "ஐயோ சௌமி எனக்கு தலை வலிக்கிறது "

சௌமியா, "என்னங்க?? நான் அழுத்தி விடட்டா, நான் பிடித்து விட்டால் ஆகாஷ்குட்டிக்கு உடனே தூக்கம் வந்திடும்" என்று சொல்ல 

கணேஷிற்கு தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுப்போல் ஆனது.

பொறுமையாக அமைதியுடன்,"சௌமி வேற எதாவது பேசேன், உனக்கு பிடித்தது, பிடிக்காதது, என்னை பற்றி, எதிர்காலம் பற்றி " ஆசையாக அவன் கேட்க 

யோசித்து அவள் "பிடித்தது உங்க கிட்ட பேசுறது, பிடிக்காதது இங்க தனிமை" வளர்ந்த குழந்தையாக அவள் சொல்ல கணேஷிற்கு பரிதாபமாக போனது, அவள் குழந்தை தனமான செயல்கள் இரசிக்க கூடியதாக இருந்தாலும், வேலை பளு, சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் அவனிற்கு எரிச்சல் ஏற்படுத்தியது. கொடுமையில் கொடுமை அவன் எரிச்சலை கூட புரிந்துக்கொள்ளாமல் சௌமியா நடந்துக்கொள்வது தான்.

சௌமியா பெற்றோர்கள் இறந்த பின்னர் தனிமை, அவள் பாட்டியின் கண்டிப்பு, தம்பி இருவர் மேலிருந்த அன்பு எல்லாமே அவளை உளவியல் ரீதியாக மாற்றியிருந்தது. அவளுக்கென்ற ஓர் உலகம் அதில் அவள் குடும்பம், அவர்கள் நன்மைகள் மட்டுமே குறிக்கோள். தம்பிகள் இருவரின் மகிழ்ச்சிகாக பிரார்த்தனை என்று அவள் உலகின் வட்டம் மிகவும் சிறியது. 

தனிமை பாதிக்கின்றது என்று அவள் சொன்ன பின் சிறிதும் யோசிக்காமல் "என்னோடு நீயும் வந்து உதவியாக இரேன் நம் கம்பெனியில் " என்று அவள் நன்மைக்கு வழி செய்தான். அதுவே பிற்காலத்தில் அவனுக்கு துன்பத்தில் முடியும் என்பதை அறியாமல்.

"ன்னாங்க உங்க செல்லமகளை பார்த்ததாக மேலதெரு மேரி வீட்டுக்காரர் உங்க கிட்டே வந்து சொல்லியிருக்கிறார்??? நீங்க எனக்கு சொல்லவே இல்லை " என்றப்படி சண்டையை ஆரம்பித்தாள் வள்ளி.

வேல்முருகன்,"அடிபோடி, அந்த ஆள் யாரையோ பார்துவிட்டு என் மகள் என்று சொல்லுறான்"

வள்ளி, "எப்படி அவள் இல்லை என்று சொல்லுறீங்களாம்??"

முருகன்,"என் பொண்ணு எதுக்கு விமான நிலையத்துக்கெல்லாம் போறா??" 

வள்ளி ஆவேசமாக,"உங்க பொண்ணு எட்டு ஊரை விற்கிறவ, இப்போ யாரை என்ன பாடுபடுத்திட்டு இருக்களோ?? "

புதிய கிளை திறக்க போகும் பரப்பரப்பு, ஆண்டு கணக்கு வழக்கு நேர்படுத்துதல், பாட்டிம்மாவின் உடல்நிலை, தமக்கையை பற்றிய கவலை என்று பல இருந்தும் மனதின் ஓரம் கண்களில் குறும்புடன் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பார்த்தவள் நின்றாள்.

கண்மூடி உறங்க சென்றவளிற்கு ஆகாஷ் “நிஷா” “நிஷா” என்று அழைத்த அந்த குரல் செவிகளில் கேட்டுகொண்டே இருப்பது போல் இருந்தது.

பள்ளியில் அவள் முரட்டுதனம் பிடிக்காமல் மற்றவரெல்லாம் அவளை ஒதுக்க அவளை அன்பாக பார்த்தவன் ஆகாஷ் மட்டும் தான். பிடிக்காத தந்தைக்கு பின்னும் அவள் மனதில் குடிகொண்டவன் அவன் மட்டும் தான். நிஷாவை பொருத்த வரையில் ஆகாஷின் எண்ணம் எப்படியோ ஆனால் அவளிற்கு வாழ்கை  துணை என்றால் அவன் தான் இல்லாவிடில் திருமணம் வேண்டாம்.

தந்தையின் தீர்மானத்திற்கு உடனே பதில் சொன்னாலோ அதை எதிர்த்தாலோ நல்லதல்ல!! வீணே அவர் கோபத்தை கிளறி உள்ளதும் போச்சு என்ற நிலைமை வேண்டாம் என்பதால் அப்போதைக்கு எதுவும் பேசாமல் இருந்தவள் யோசிக்க தொடங்கினாள். 

தொடரும்!

Go to episode # 06

Go to episode # 08


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.