(Reading time: 3 - 6 minutes)

அறிவிப்பு - எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்! - ஜூலை ஸ்பெஷல்ஸ்

 July encourage

பிரென்ட்ஸ்,

Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க "எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்!" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

 

தன் ஜூலை மாத விபரங்கள் இதோ.

 

TOP COMMENT POSTER:

ஜூலை மாதத்தில் அழகான கருத்துக்கள் பகிர்ந்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அருமையான வாசகரை தேர்வு செய்யும் பொறுப்பை மது [ முடிவிலியின் முடிவினிலே, துடிக்கும் இதயம் உனதே உனது, மார்பில் ஊறும் உயிரே] ஏற்றுக் கொண்டிருந்தார்.

[உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி மது.]

து தேர்வு செய்த வாசகர் பற்றிய விபரம் இதோ:

எழுத்தாளர்களின் சிந்தையில் கருவாகி, கரங்களில் உருவாகி, கதையாய் கவிதையாய் கட்டுரையாய் பிறந்து புத்தகங்களிலும் இணையதளங்களிலும் நாம் வாசிக்க, ரசிக்க, நேசிக்க நம்மோடு உடன் பயணிக்கும் உற்றத் தோழியவள்...

துன்பத்தில் துணையாக, இன்பத்தில் இணையாக, சிந்தைனையை செதுக்கும் சிற்பியாய், வாழ்வின் தத்துவங்களை உணர்த்தும் போதி மரமாய் திகழும் அவள் அருமையும் பெருமையும் அனைவரும் அறிய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் செயல் படும் சில்சீ...

எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து. சிறப்பான பின்னூட்டங்கள் மூலம் அவர்களை ஊக்குவித்து அவர்தம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அருமையான வாசகர்களை பாராட்டி மகிழும் ஓர் சிறந்த முயற்சி.  

வாசகராய் இங்கே நுழைந்த எனக்கு இன்று ஒரு எழுத்தாளர் எனும் அடையாளம் தந்தது சில்சீயும் வாசக தோழமைகளும் தான்.

அந்த வகையில் ஜூலை மாதம்  சில்சீயில் வெளிவந்த படைப்புகளை ஊக்குவித்து சிறந்த முறையில் பின்னூட்டம் வழங்கிய “TOP COMMENTOR”  ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை  தந்திருப்பது எனக்கு கிடைத்த பெருமையாக உணர்கிறேன்.

சில்சீயில் பல வாசகர்கள் தங்கள் அழகான கருத்துக்கள் மூலம் ஒவ்வொரு எழுத்தாளரையும் ஊக்குவித்து வருகின்றனர். எனினும் ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்பது சற்று கடினமான ஒன்றே.

எல்லா படைப்புகளுக்கும் தனது கருத்துக்களைப் பதித்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது  எழுத்தாளரின் படைப்புக் கடலில் அடி ஆழம் வரை மூழ்கி அவர்தம் சிந்தனை சிப்பிக்குள் உதித்த முத்துக்களை எடுத்து அழகிய பின்னூட்டமாக கோர்த்து முத்து மாலையாக அழகு சேர்க்கும் ADHARV JO விற்கு நான் மிகப் பெரிய விசிறி. வாசகராய் எனக்கொரு மிகப் பெரிய inspiration அவர்.

 “TOP COMMENTOR” ராக ADHARV JO  அவர்களை தேர்வு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் அதர்வ் ஜோ 👍👍👍👍

 

TOP Contributor:

ஜூலை மாதத்தில் அதிக பங்களிப்புகள் கொடுத்து நம் chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTOR" பட்டம் பெறுபவர் சசிரேகா [முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி].

வாழ்த்துக்கள் சசிரேகா 👍👍👍👍

 

தர்வ், சசிரேகா இருவரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏

 

கஸ்ட் மாத சிறப்பு எழுத்தாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம்.

{jb_purplebox}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_purplebox}

மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.