Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Endrendrum unnudan 01 series

02 Aug 2018 02:30 #31 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • அன்று நிஷாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, சரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

    மித்ரனை பற்றி நினைக்க கூடாது என்று அவளுக்குள்ளே அவளே போட்டுக் கொண்டிருந்த கட்டுப்பாடு, அவளிடமே பூமராங் போல வந்து தொல்லை செய்துக் கொண்டிருந்தது.

    அதிலும் அவனுடைய வீட்டிலேயே தங்கிக் கொண்டு அவனை பற்றி யோசிக்காமல் இருக்க அவள் செய்த முயற்சி, மற்ற சாதாரண நாட்களில் அவள் அவனை நினைப்பதை விட அதிகமாக அவனை நினைக்க வைத்திருந்தது.

    அவளுக்காக கதவை திறந்த நளினியின் புன்னகை மித்ரனின் சிரிப்பை நினைவுபடுத்தியது.... நிஷாவுடன் பேசியபடி யார் வந்திருப்பது என்று எட்டி பார்த்த மைத்ரேயியிடம் இருந்த மித்ரனின் சாயலும் இன்று தான் அவளின் கண்ணுக்கு பளிச்சிட்டது....

    அதனாலேயே மற்ற நாட்களை போல நளினியிடம் நின்று பேசாமல் உடனேயே நிஷாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

    ஆபிஸுக்கு எடுத்து சென்றிருந்த கைப்பையை மேஜை மீது வைத்து விட்டு சரண்யா தன் யோசனையில் ஆழ்ந்திருக்க, நிஷா அன்று நடந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-21

    Regards,
    Chillzee Team :-)
    17 Aug 2018 17:42 #32 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • “இவங்க தானா பேஷன்ட்?” என்ற டாக்டரின் கேள்வி நளினியை யோசனையில் இருந்து வெளியே கொண்டு வந்தது.

    “ஆமாம் இவங்க தான்” என நளினி சொல்லவும், சரண்யாவின் அருகே சென்றார்.

    சத்தம் கேட்டு திரும்பி பார்த்த மித்ரன், நிஷாவை தூக்கி கொண்டு தள்ளி நிற்க, சரண்யாவின் அருகே சென்று அவளை சோதித்தார் டாக்டர்.

    டெம்பரேச்சர், பல்ஸ் ரேட் எல்லாம் பார்த்தவர் சரண்யாவிற்கு முந்தைய தினம் உடல் நலமில்லாமல் இருந்ததா என்று விசாரித்தார்.

    நிஷாவிற்கு சொல்ல தெரியவில்லை.

    நளினியும், மித்ரனும் அவள் சோர்வாக இருந்ததாக மட்டும் சொன்னார்கள்.

    “வைரல் பீவர் மாதிரி இருக்கு. பயப்பட எதுவுமில்லை. ஜுரம் விட்டு, விட்டு வரும். கஞ்சி மாதிரி ஈசியா ஜீரணம் ஆகுற சாப்பாடு கொடுங்க. நான் சொல்ற மருந்தை விடாம டைமுக்கு கொடுங்க. கொஞ்ச நேரம் தெம்பா நல்லா தெரிவாங்க. இது அவங்க சாப்பிடுற மருந்தோட எஃபக்டினால வரது... ஆனால் மருந்தோட வீரியம் குறைஞ்ச உடனே திடீர்னு ரொம்ப டையர்ட் ஆன மாதிரி தெரிவாங்க, ஜுரம் திரும்ப வரும். அதனால மருந்தை மறக்காம நேரத்துக்கு கொடுக்கனும்.”

    ***********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-22

    Regards,
    Chillzee Team :-)
    13 Sep 2018 07:28 #33 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • “ஹேய் சரண்யா, எப்படி இருக்க? ஜுரம் பரவாயில்லையா? ஆபிஸ் பத்தி கவலை படாமல் நல்லா ரெஸ்ட் எடு. நான் உனக்கு லீவ் சாங்க்ஷன் செய்ய சொல்றேன்...”

    மைத்ரேயியின் இது போன்ற படபட பேச்சு சரண்யாவிற்கு புதியதல்ல... ஆனால் சில நாட்களாக கண்டுக்கொள்ளாமல் பேசாமல் இருந்தவள் திடீரென வந்து பாச மழை பொழியவும் சரண்யாவிற்கு வியப்பாக இருந்தது.

    மைத்ரேயியின் கூடவே வந்திருந்த நளினி சரண்யாவின் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்டவளாக,

    “வீடு பக்கத்தில எங்கேயோ போதி மரம் இருக்கு போலருக்கு சரண்யா, நம்ம மைத்தி அது பக்கத்துல போயிட்டு வந்திருப்பா போலிருக்கு...” என்றாள் கிண்டலாக.

    “ஆமாம் சரண்யா, அந்த போதி மரத்துக்கு பேரு கூட இருக்கு... நளினி... நான் செல்லமா அம்மான்னு கூப்பிடுவேன்...”

    ஜூரத்தின் பிடியில் இருந்த சரண்யா கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்.

    அதையும் கவனித்த நளினி,

    ***************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-23

    Regards,
    Chillzee Team :-)
    11 Oct 2018 07:07 #34 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • அங்கே கதிர்வேல், கற்பகம், சுரேஷ் நின்றிருந்தார்கள்...

    சுரேஷின் முகத்தில் மன்னிப்பு கோரும் பாவம் இருந்தது... கற்பகமோ வருத்தத்துடன் இருப்பதாக தோன்றியது...

    கதிர்வேலின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது...

    அவர்களை அங்கே பார்த்த அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த பிறகும், அவர்களின் முகத்தில் இருந்த வெவ்வேறு பாவம் சரண்யாவை குழப்பியது.

    இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,

    “வாங்க, வாங்க மாமா, அத்தை...” என்று பெரியவர்களை வரவேற்றாள்.

    “எவ்வளவு தைரியம் இருந்தா இன்னும் என்னை உறவு சொல்லி கூப்பிடுவ...?” கோபத்துடன் உரக்க பேசினார் கதிர்வேல்.

    சரண்யா குழப்பத்துடன் கற்பகத்தையும், சுரேஷையும் பார்த்தாள்... அவர்கள் அமைதியாக நின்றிருந்தார்கள்...

    “இன்னைக்கு என்ன நாள்ன்னு ஞாபகம் இருக்கா?” மீண்டும் உரக்க ஒலித்தது கதிர்வேலின் குரல்.

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-24

    Regards,
    Chillzee Team :-)
    05 Feb 2019 04:41 #35 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • மைத்ரேயி அறையில் மித்ரனை எதிர்பார்த்திராத சரண்யா ஒரு வினாடி திகைத்துப் போனாள்!

    அது பற்றி தெரியாத மித்ரன் அவளை பார்த்து எப்போதும் போல புன்னகைக்கவும் அவளின் மனதில் மெல்லிய அமைதி தோன்றி பரவியது...

    தானாக அவளின் உதடுகளில் அவனுக்கான பதில் புன்னகை ஒன்று உதயமானது!

    ஆனால் முந்தைய இரவில் எடுத்திருந்த முடிவு நினைவில் வரவும் அவசரமாக மித்ரனை விட்டு பார்வையை திருப்பினாள்!

    “வர சொன்னீங்க மேடம்!” என்றாள் மைத்ரேயியை பார்த்து...

    ********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-25

    Regards,
    Chillzee Team :-)
    21 May 2019 05:48 #36 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8263
  • Like received: 2988
  • காற்றில் பறந்து கண் மீது விழுந்த முடிக் கற்றையை கையால் ஒதுக்கி விட்டு, காரை ஒட்டிக் கொண்டிருந்த மித்ரனின் பக்கம் பார்த்தாள் சரண்யா.

    அவள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், அவனின் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே அவளின் பார்வையில் விழுந்தது...

    தயக்கத்துடன் ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்தாள்...

    அங்கே அவனின் கண்களும், நாசியும் பிம்பமாக தெரிந்தது...

    *********

    Don't miss it!!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-26

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top