Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Prama's Unnil tholainthavan naanadi series discussion

01 Apr 2018 20:27 #13 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • வீட்டு மாப்பிள்ளையின் உடன் பிறந்த சகோதரன் வந்திருந்ததால் மகிழ்ச்சி அடைந்திருந்த சின்னையா

    தன் தம்பி மகளை தான் வளர்க்கப்போவதாய் சொன்னதும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

    அவளை அனுப்பும் எண்ணம் அங்கு எவருக்கும் இல்லாமல் இருக்க ,வாய் வார்த்தை நீண்டது. இவ்வளவு நாள் எங்கே சென்றாய்? என்ற கேள்வியில் தொடங்கி அனுப்ப முடியாது என்ற தீர்மானம் வரை வந்து நிற்க

    வந்தவரோ போன மாதம் வரை பிள்ளை செல்வத்திற்காக காத்திருந்ததையும் ஆனால் வாழ் நாளில் என்றுமே தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க போவதில்லை என்பதை அறிந்த பிறகு வாழ்வே நரகமாகிவிட்டது என்று பிள்ளை செல்வம் இல்லாமல் தானும் தன் மனைவியும் படும் வேதனையை சொல்லி அழ அங்கிருந்த அனைவருக்குமே சங்கடமாகிவிட்டது.

    தன் உயிருக்கு உயிராய் அந்த பட்டு ரோஜாவை வளர்ப்பதாய் சொல்லி மன்றாடினார் இருவரும்.

    தன் தொழிலை உடனடியாக ஏதும் செய்ய முடியாத நிலையில் சிறிது காலம் கழித்து தானே இந்தியா வந்து விடும் எண்ணத்தில் இருப்பதாக அவர் தெரிவிக்க

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-12

    Rgds,
    Nanthini
    15 Apr 2018 08:32 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8264
  • Like received: 2988
  • நாட்கள் எதற்கும் கவலை படாமல் ஓடியதில், வயோதிகம் பாடாய் படுத்த, குணாவின் தாயும் காலமானார். சற்றே கலங்கித்தான் போனாள் சுந்தரி.

    இத்தனை வருடம் உடன் இருந்த ஓர் உறவு, திடீரென்று ஒரு நாள் இல்லாமல் போனதில் சற்றே மனம் கலங்கினாள். தன் அம்மச்சி இறந்த போது, மனம் உடைந்து போன சுந்தரியை அன்பாய் ஆறுதல் கூறி தேற்றியவள் அவளின் மாமியார். இப்போது அவளின் மறைவிற்கு அவளுக்கு ஆறுதல் கூறியது வள்ளியம்மை மட்டுமே.

    எத்தனை ஆசை இருந்தது அந்த ஆத்மாவிற்கு! தன் மூத்த பேத்தியை மணப்பெண்ணாய் காண வேண்டும் என்று. ஒன்றா, இரண்டா எத்தனை வருடங்கள்? அவளுக்கும் வயது ஏறிக்கொண்டே தானே செல்கிறது?

    வருபவன் ஜாதகத்தை குறை கூறி, வரதட்சணையாக கேட்ட தொகை அவர்களை மலைக்க வைத்தது.

    இந்நிலையில், இங்கு இருந்தால் இவர்கள் தனக்கு திருமணமே முடிக்க மாட்டார்கள். இவர்கள் கையாலாகாதவர்கள் என்று எண்ணலானாள் சந்திரா.

    சந்திராவின் திருமணம் தவிர்த்து வேறெதற்கும் குறையில்லை அவர்கள் இல்லத்தில். ஆனால், அந்த நிம்மதிக்கும் ஆயுள் குறைவு தான் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

    **********************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-13

    Regards,
    Chillzee Team :-)
    22 Apr 2018 18:41 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8264
  • Like received: 2988
  • அவள் சொன்னவற்றை கேட்டு சிலை போல் அமர்ந்திருந்த ரேகாவை கண்டவள் மெல்ல சிரித்து விட்டு “அப்பா ரேகா அப்படியே சிலையாயிட்டா பாருங்க, ஓகே பா எனக்கு இன்னொரு டீ குடிக்கணும் போல இருக்கு உங்களுக்கு வேணுமா?” என்று அவள் பேசிக்கொண்டே கிச்சனுக்குள் செல்ல

    பக்கென்று இருந்தது ரேகாவிற்கு.

    அவள் உள்ளே டீ போட்டு கொண்டிருக்க, புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்த குணசேகரை கண்ட ரேகா, புருவங்களை சுருக்கி யோசித்துவிட்டு இளம்பிறையின் தோளை தொட

    நிச்சயமா நான் பயித்தியம் இல்லை ரேகா, “இந்தா ஸ்டராங் டீ குடி”என்று அவளிடம் நீட்ட

    ஏதும் பேசாமல் பருகினாள் ரேகா. நிச்சயமாக ரேகாவிற்கு இப்போது அது தேவைபட்டது.

    “இளா, அங்கிள்.. அது…” என்று அவள் தயங்கவும்

    “எப்பவும் இங்க என்னோட இருந்துட்டே என்னை வழிநடத்துறார் ரேகா” என்று அவள் இதயத்தை தொட்டு காட்ட

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-14

    Regards,
    Chillzee Team :-)
    20 Jun 2018 18:32 #16 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • கண்களை மூடி இளம்பிறை அமர்ந்திருக்க, அவள் எதிரில் வந்து அமர்ந்தாள் ரேகா.

    அரவம் உணர்ந்து விழிகளை திறந்தவள் "என்ன ரேகா?" என்று கேட்க

    பாதியை மட்டும் சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்ன அர்த்தம்?, என் நிலைமை என்னன்னு யோசிச்சியா? மண்டைக்குள்ள வண்டு குடையுது இளம்பிறை.

    அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற?

    ஒழுங்கா மொத்தத்தையும் சொல்லிடு, என்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ண முடியல

    அமைதியாக ரேகாவை பார்த்தாள் இளம்பிறை.

    ப்ளீஸ் இளா சொல்லேன் என்று அவள் அமர்ந்து கொள்ள, “இப்போ எனக்கு மனசு சரியில்லை, ஈவினிங் 6 மணிக்கு பீச்சுக்கு போவோம் அங்க பேசலாம் ஓகே” என்று இளம்பிறை சொல்ல

    ஓகே பட் எல்லாத்தையும் சொல்லிடு எதையும் மிச்சம் வெச்சே நான் இன்னிக்கு தூங்கின மாதிரி தான் என்று சலித்து கொண்டவள் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு இந்த மண்டை குடைச்சலை தாங்கிக்கணுமா என்று நொந்த படி செல்ல

    ********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-15

    Rgds,
    Nanthini
    04 Jul 2018 00:14 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8264
  • Like received: 2988
  • அதற்கு பின் அவன் முதுகலை பட்ட படிப்பிற்காக அதே கல்லூரியில் சேர்ந்து விட, கதிரும் ஜனனியும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்த கால கட்டத்தில் ஜனனியிடம் நிறைய மாற்றங்கள் நிறைந்திருந்தன. திருமணம் குறித்தே அனைவரிடமும் அதிகமாக பேசினாள். இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று உணர்ந்த சண்முகம் விடுமுறையில் வந்திருந்த கதிரிடம் தனிமையில் சென்று பேசி விட்டு வருவதாக வள்ளியிடம் சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல, வள்ளியிடம் இருந்து இதை அறிந்து கொண்ட ஜனனியும் அவர் அறியாமல் அவரை பின் தொடர்ந்தாள்.

    கதிர் என்ன சொல்ல போகிறான் என்று அவளுக்கு தெரிய வேண்டும்.

    கதிர் வேலையா இருக்கியா?

    இல்ல பா சும்மா புக் படிச்சிட்டு தான் இருக்கேன் சொல்லுங்க பா

    உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கதிர், உன் பியூச்சர் பத்தி பேசணும்

    என் பியூச்சர் பத்தியா? என்று நெற்றி சுருக்கியவன் சொல்லுங்க பா என்ன பேசணும் ?

    ***********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-16

    Regards,
    Chillzee Team :-)
    04 Jul 2018 02:25 #18 by SHIRUTHADEWI SETHAREN

  • Fresh Boarder
  • Fresh Boarder

  • Posts: 2
  • Like received: 1
  • Superb...but what happen..the way story give suspended unpredictable.. Then how nila love kathir before marriage...ooo
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top