Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Prama's Unnil tholainthavan naanadi series discussion

08 Jul 2018 09:44 #19 by Chillzee Team
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • ஊரில் இருக்கும் தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு அவள் சொல்லப்போகும் பதிலுக்கென அவன் காத்திருக்க அவளோ

  கதிர் நான் ரிசைன் பண்றேன் கதிர், இனிமேலும் என்னால இங்க வர்க் பண்ண முடியாது. ப்ளீஸ் என்னை உடனடியா ரீலீவ் பண்ணிடுங்களேன் என்று சொல்ல ,

  ஹெட் செட் போட்டு அவளிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு, எங்கு போய் முட்டி கொள்வது என்று புரியவில்லை

  நிலா என்று அவன் மேற்கொண்டு பேசும் முன்

  ரேகா வில் டூ குட் ஜாப் கதிர். நான் வேணும்னா அவ கிட்ட பேசட்டுமா? என்று ரேகாவிற்கு இவள் வக்காலத்து வாங்க

  பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு

  ஏய் என்ன அதிகாரம் உன் கையில் இருக்குன்னு ஆடி பார்க்கலாம்னு நினைப்பா? எப்ப பாரு, போறேன் போறேன்னு பயம் காட்டுற, நீயில்லன்னா கம்பெனி ஒன்னும் குடி முழுகி போயிடாது. எனக்கு தேவை கம்பெனி என் பெயருக்கு மாறனும். லுக் இது நானும் என் ஜெனியும் சேர்ந்து ஸ்டார்ட் பண்ண கம்பெனி. இப்போ எல்லா அதிகாரமும் உன் மாமனார் பெயர் ல இருக்கு.

  ***************************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-17

  Regards,
  Chillzee Team :-)
  09 Sep 2018 19:36 #20 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • மருத்துவமனையில் இருந்து தனது இல்லம் நோக்கி ஆட்டோவில் புறப்பட்டவள் மனம் முழுக்க கதிரின் நினைவே நிரம்பி இருந்தது.சமீப காலமாக அவனின் பிடிவாத குணம் பற்றியே கேள்விப்பட்டுக்கொண்டு வந்ததை மனம் அசை போட்டது. அன்று ஜாஸ்மின் தன்னிடம் கூறிய “கதிர் சார் எவ்வளவு நல்லவரோ அவ்வளவு பிடிவாதக்காரர் இளா, முடியவே முடியாதுன்னு சொன்ன என்னை எத்தனை தரம் சந்தித்து பேசி தைரியம் கொடுத்து, இன்னிக்கு உங்க முன்ன நான் இப்படி இருக்கேன்னா அதுக்கு அவர் தான் காரணம்” என்று அவள் சொன்னதை நினைத்து இப்போதும் இவள் இதழ் விரிந்தது.

  “அதே போல் தானே அந்த பெங்களூரு ப்ரொஜெக்ட்டை “நீ தான் பொறுப்பேற்று செய்ய வேண்டும்” என்று பிடிவாதமாய் எவ்வளவு சொல்லியும் கேளாமல் சம்மதிக்க வைத்தான். அது மட்டுமா இன்றுவரை என்னை இரு சக்கர வாகனத்தை எடுக்க விடவில்லையே, உருட்டி மிரட்டியாவது காரியத்தை சாதித்து கொள்கிறான் பிடிவாதக்காரன்” என்று அவள் தனக்குள் சிரிக்க, அவள் இல்லம் வந்து விடவும் ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே வந்தவளை இன்னும் தலைவலி விட்ட பாடில்லை.

  எப்போதும் போல் தன் தந்தையிடம் நலன் விசாரணையை வைத்தவள் தேனீர் தயாரிக்க செல்ல தலை வலி இப்போது மண்டையை பிளப்பதாய் இருந்தது.

  ************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-18

  Regards,
  Chillzee Team :-)
  16 Sep 2018 05:45 #21 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • அசோக்கின் வருத்தம் தாள முடியாமல் மாமாவிடம் பேசுவதாய் சொல்லிவிட்டாலும், தான் பேசலாமா? கூடாதா? என்ற தயக்கம் இருந்தது அவளிடம். தான் ஏதேனும் அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொள்வதாய் அவர் நினைத்து விட்டால்?

  கதிரின் லட்சியம் கனவு என்றெல்லாம் சொன்னானே! அந்த அசோக்

  “டேய் கரடி அவ்வளவு கனவு கண்டவன் அப்புறம் ஏன் டா இப்படி அதை அம்போன்னு விட்டுட்ட?” என்று யோசித்தவளுக்கு தலை வலி எடுக்க டீ பருக வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு

  “வர வர தானும் அதிகமாக இந்த டீக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்” என்று சலித்தவள் வேலைக்கார பெண்மணியிடம் டீ கேட்டு அதை ரசித்து பருகியபின், இரவு எட்டு மணிக்கு மொட்டை மாடிக்கு சென்றாள்.

  நேராக நிமிர்ந்து அமர்ந்தவள் கண்களை மூடி "அப்பா, என்னை சுத்தி நடக்கிற எதையும் புரிஞ்சிக்கிறதுக்கு கூட எனக்கு அவகாசம் கிடைக்க மாட்டேங்குது. யோசிக்காம அசோக்கிற்கு சரி சொல்லிட்டேனோன்னு தோணுது. இப்போ நான் என்ன பண்ணனும் பா? புரியல, ஆனா நான் பேசுறேன்னு சொன்னதும் அவர் முகத்துல அவ்வளவு நம்பிக்கையை பார்த்தேன். அசோக் சாருக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு கேட்கிறேன் பா

  **************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-19

  Regards,
  Chillzee Team :-)
  23 Sep 2018 08:13 #22 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • வெகு சாதாரணமாக அவள் பேசிவிட்டு சென்றாலும் எத்தனையாய் யோசித்திருப்பாள் என்று உணர்ந்தான் அசோக்.

  “ம் மச்சான் உனக்கு ஏத்த ஆளு தான்டா” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அவளின் வயது அவனை வருத்தம் அடைய செய்தது.

  கதிரும் இந்த வயதில் கடினமாக உழைத்திருந்தான் தான். ஆனால் அதை ஒரு நாளும் உழைப்பாய் இவன் பார்த்ததில்லை. பேரார்வம் என்று தான் யோசித்ததுண்டு. ஆனால் இளம்பிறை?

  “இளா” என்று அவள் அருகே சென்றவன் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற? நீ ஸ்டடிஸ்ல போகஸ் பண்ணு” நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல

  “ம் உங்களுக்கு என்ன? ஈஸியா சொல்லுவீங்க, மாமா முன்னாடி நின்னது நான் தான? ஒரு வார்த்தை கூட ஏன்னு கேட்காம மொத்தமா தூக்கி கொடுத்திருக்காங்க அசோக் சார், என்னை பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப பெரிய விஷயமா நினைக்கிறது நம்பிக்கை தான்.

  மாமா உண்மையில் எனக்காக கொடுத்தாரான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா என்னை நம்பி கொடுத்திருக்கார். அந்த நம்பிக்கைக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சே ஆகணும் இல்லன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது.

  *******************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-20

  Regards,
  Chillzee Team :-)
  05 Oct 2018 07:39 #23 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • இந்த நிலையில் தான் சண்முகத்தின் நெருங்கிய உறவினன் வீட்டு திருமணத்திற்கு தன் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது சண்முகம் குடும்பத்தாருக்கு.

  நான்கு நாட்கள் ஊரில் இருந்தே தீர வேண்டும். செய்ய வேண்டிய சீர், வரை முறை என்று நான்கு நாட்கள் அங்கே இருப்பதாய் முடிவெடுக்கப்பட , கதிரை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் செல்ல வேண்டும் என்று சண்முகம் முடிவெடுக்க, இளம்பிறை நிச்சயம் கதிரோடு இருக்க வேண்டும் என்று பாட்டி பிடிவாதம் பிடிக்க, இளம்பிறையும் தனக்கு வர விருப்பம் இல்லை என்று மறுக்க, சண்முகம் வருந்துவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

  மனமே இல்லாமல் அவளை கதிரிடம் தனியே விட்டு செல்ல, முதல் நாள் இரவே சோதனையை சந்திக்க நேர்ந்தது இளம்பிறைக்கு.

  அவ்வளவு பெரிய வீட்டில் அவனை தனியே விட்டு செல்ல மனம் இன்றி அன்று KJ கும் போக வில்லை அவள். எதை கொடுத்தாலும் வேண்டாம் என்று கதிர் மறுக்க, அவள் பிடிவாதமாய் உணவை உண்ண வேண்டும் என்று அவன் வாயில் திணிக்க, அரை போதையில் இருந்தவன் அவளை முறைத்தபடி உண்டுவிட்டு மேலும் குடிக்க செல்ல “சே” என்று இருந்தது அவளுக்கு.

  ********************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-21

  Regards,
  Chillzee Team :-)
  14 Oct 2018 19:24 #24 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

 • Administrator
 • Administrator

 • Posts: 8169
 • Like received: 2980
 • இதற்கிடையில் கதிரின் இருப்பிடம் குறித்து அருண் அறிந்து கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சியும் வீணாய் போக அன்று அவன் வீட்டிற்கு சென்று திருட திட்டம் தீட்டிய இவனின் கும்பலை சேர்ந்தவனை துவைத்து எடுத்துவிட்டான் அருண்.

  கதிரை கண்டு பணம் கேட்டு வரலாம் என்ற எண்ணத்தில் சென்றவனை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான் வாயிற்காவலன். கதிரை காண யாரையும் அனுமதிக்க கூடாது. கதிர் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது என்பது சண்முகத்தின் கட்டளை.
  கதிரை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனோ "சரி, அப்போ அவங்க அம்மாவையாவது பார்த்துட்டு போறேன்”என்று சொல்லி கொண்டு வம்பு செய்ய

  "வீட்ல யாரும் இல்லை எல்லாரும் வெளியூருக்கு போயிருக்காங்க"என்று வாயிற்காவலன் சொல்லவும் அவன் புத்தி அவசரமாய் ஆலோசனை நடத்தி ஒரு திட்டத்தை தீட்ட தொடங்கியது.

  எப்படியும் கதிர் உள்ளே தான் இருக்கிறான் என்பதை வாயிற்காவலனுடன் நடந்த விவாதத்தில் புரிந்து கொண்டவன் மனது பேராசையில் துள்ளியது.

  *****************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-22

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.

  Come join the FUN!

  Write @ Chillzee
  Download Chillzee Jokes for Android
  (Click the image to get the app from Google Play Store)
  Go to top