Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Saki's 'uyiril kalantha urave' series discussion

03 Jun 2018 00:24 #13 by Bindu Vinod

 • Administrator
 • Administrator
 • பிந்து :-)

 • Posts: 1569
 • Like received: 833
 • இரு தினங்களாய் சீர்கெடுத்த உடல்நல கேடு,தலையில் ஏதோ பாரத்தை வைத்து அழுத்தியதாக ஒரு உணர்வு!!!பார்வையால் எரித்தல் என்பார்கள்...அசோக்கின் உடல் இருந்த உஷ்ணத்தில் உண்மையில் எதிர்வருபவரை அவர் எரித்திடுவான் போலும்!!!உடல் முழுதும் படர்ந்த சோர்வு உள்ளத்தையும் தளர வைத்தது.உறக்கமும் வராமல் உண்ணவும் இயலாமல் விழிகளை தைத்துவிட்டதாய் ஒரு உணர்வு!!இரு தினங்களாய் பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பு ஏற்றிருந்தான் அவன்!!உதகையின் தோஷனநிலை அவனுக்கும் தோஷத்தைப் பீடிக்க வைத்தது.

  "தம்பி!எழுந்து கொஞ்சமாவது சாப்பிடுப்பா!"அவன் மேல் அக்கறை கொண்டு அவனுடன் இருந்த அந்த ஒரு ஜீவனுக்கும் பதிலளிக்க இயலாமல் படுத்திருந்தான் அவன்.சில நொடிகளில் அக்குரலும் ஒலிக்கவில்லை.மனம் ஏனோ இரணமாகிப் போனது.

  என்றோ ஒரு நாள் இதைப்போல் வாட்டி வதைத்த துயரை போக்கிய தாயின் அருகாமையை நினைவுப்படுத்தியது அவன் மனம்!!!அன்று அவர் இருந்தார்.அவனுக்கு ஒன்று என்றால் மனதில் எழும் அச்சத்தை அவர் என்றும் வெளியிட்டதில்லை,அது அவனை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் அவருக்கு!!பொறுமையாக கையாளுவார்!

  **********************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-11
  15 Jun 2018 07:55 #14 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • இத்தனை ஆண்டுகளாய் தேடப்பட்ட வினாவிற்கான விடை இன்றோ அவன் கரத்தில்!!ஆனால், உண்மையின் உரத்த குரல்,அவனை தடுமாறவே வைத்தது. பேரதிர்ச்சிக்குள்ளாகியது!!

  நடந்த உண்மையை முழுதுமாக உரைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.இவனோ தன் கடந்த காலத்தை எண்ணியும்,தன் தாயின் வேதனையை எண்ணியும் சோர்வுற்றிருந்தான்.எத்தனை வேதனை அடைந்துள்ளார்.ஏன் இதை என்னிடம் கூறவில்லை?குற்றவுணர்வில் நிலைகுலைவேன் என்ற அச்சமா??அதற்காக தான் என்னிடம் உண்மையை மறைத்தாரா?ஆனால் இன்று அந்த உண்மை கன்னத்தில் அறைகிறதே!!

  சிவன்யாவிற்கோ அன்று அவன் கூறிய கூற்று நினைவு வந்தது.

  "எனக்கு என் அப்பா யாருன்னு தெரியாது! என் அம்மா தான் என்னுடைய உலகம்!"எவ்வளவு குற்ற உணர்வில் தவித்திருப்பான்!!எந்த நிலையில் இவரை வளர்த்திருப்பார் அந்த அன்னை!கண்கள் பனித்தன அவளுக்கு!!

  நீண்ட நேரமாக தலையை கைகளால் தாங்கியப்படி அமர்ந்திருந்தான் அசோக். மனம் வலித்தது இந்நிலையில் அவனை காண!!

  ***********************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-12

  Rgds,
  Nanthini
  24 Jun 2018 17:58 #15 by Nanthini

 • Platinum Boarder
 • Platinum Boarder

 • Posts: 1110
 • Like received: 567
 • மனிதனாகப்பட்டவன் என்று தனது சிரத்தில் உள்ள ஆணவம்,அகங்காரம்,தன்னலம்,தலைக்கனம் இவற்றை தன்னிலை உணர்ந்து மண்ணில் இறக்கி வைக்கிறானோ அன்று அவனது சிரத்தில் தர்மம் என்ற மணிமகுடம் சூட்டப்படுகிறது.எவ்வாறு மனிதர்களில் சிலர் எவ்வாறு தான் இவற்றின் பாரத்தினை சுமக்கின்றனரோ, தாயின் உதிரத்தில் இருந்து தோற்றம் பெறும் மனிதனானவன் சுதந்திரமானவன்,அன்பின் வடிவமாவான்,கருணை உடையான், பேதமற்றவன்,சங்கடம் களைபவன்.இறைவனின் படைப்பில் அனைத்தும் எழிலுடையவை! ஆனால்,அந்த அழகை மனிதர் கொச்சைப்படுத்தும் விதத்தை தான் காணுங்களேன்!என்ன சாதனைக் கிட்டப்போகிறது?மனதில் ஏனைய அகம்பாவத்தால் வசீகரிக்கப்படும் மனிதன், அவற்றுக்கு அடிமை ஆகின்றான்.காலம் உள்ளவரை அவனை அச்சங்கிலி பின்னிப்பிணைந்து வேதனை நல்குகின்றது.எனில் பெருமை கொள்ளுங்கள்,தங்கள் மனதினை வசீகரிக்க மேற்கண்ட வஸ்துகளால் இயலவில்லை அல்லவா!!!

  இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் அசோக்.மனதினில் இப்போதும் சலனங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. தான் யார் என்ற இரகசியம் உடைப்பட்டப் பின்னரும் தன் தாயின் அதிகாரம் அவருக்கு கிட்டவில்லை.இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருந்தால்?

  ***********************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-13

  Rgds,
  Nanthini
  07 Sep 2018 05:14 #16 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • காலம் கடக்கும் வேளை அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். மிக பெரிய மாறுதல்கள் உண்டாக நல்லோர்கள் வருந்துவதும், தீயோர்கள் சுகிப்பதும் வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனைகளாகும்.

  "என் மகளுக்கு கல்யாணம் வைத்திருக்கேன்மா! நீங்க கண்டிப்பா வரணும்." பார்வதியிடம் பத்திரிக்கையை வழங்கினார் ஒருவர்.

  "கண்டிப்பா! தர்மா..."பத்திரிக்கை வாங்கி வைத்துவிட்டு புதல்வியை அழைத்தார் அவர்.

  "மா!"

  "பீரோவுல இருந்து பணம் எடுத்துட்டு வா!"

  "சரிங்க மா!" தாயின் ஆணையை ஏற்று விரைந்தார் அவர்.

  "காதலித்து கல்யாணம் பண்ணிக்கலை தானே?"

  "ஐயயோ! இல்லைம்மா, உங்களைப் பற்றி தான் தெரியுமேம்மா! இது சின்ன வயசுலயே முடிவு பண்ண கல்யாணம், என்னுடைய தங்கச்சி மவனுக்கு தான் தரேன்."

  ***************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-14

  Regards,
  Chillzee Team :-)
  28 Dec 2018 21:41 #17 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • நாட்கள் மிக வேகமாக நகர ஆரம்பித்தன….புயலில் சிக்கிய படகானது ஒன்று கரை சேர வேண்டும் அல்லையேல், உடைய வேண்டும்; இரண்டிற்கு மத்தியில் நடகே்கடலில் படகினால் பல தினங்கள் தாக்குப்பிடிக்க இயலாது. படகானது காற்றின் நோக்கமறிந்து செயல்படும் என்றால் இறைவனின் அருளினால் அது கரை சேருவது உறுதி!!காற்றே தன்னை கரைசேர்க்கும் என்ற மாயவலையில் சிக்கும் என்றால் இறைவனின் எச்சரிக்கை நிச்சயம் அந்தப் படகிற்கு கேட்காது!!!காலச்சக்கரத்தின் மையத்தில் சிக்கி இருந்த தர்மாவிற்கு இதே நிலை தான். காதலென்னும் காற்றினை முழுமையாக நம்பி வாழ்பவளுக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியவில்லை.

  ************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-15

  Regards,
  Chillzee Team :-)
  15 Apr 2019 18:56 #18 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8377
 • Like received: 3017
 • இரவு நெடுந்நேரமாகியும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் அசோக். நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் வாழ்வியலில் இருக்கும் சொச்சங்களும் அவநிம்மதியுடன் கடந்துவிடுமோ என்ற அச்சம் இதயத்துள்!!பொறுப்புகள் கூடிக் கொண்டே செல்கின்றன. தாயார் இருந்தால் துன்பமே இல்லை. அவர் உயிருடன் இருந்திருக்கலாம்!! என்ன கடமை முடிந்தது என்று இறைவனிடம் சென்றுவிட்டார் அவர்??தன் புதல்வன் சமூகத்தில் மதிக்கப்படும் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் பொழுதுகளை கண்டாரா அவர்? தன் கௌரவம் மீட்கப்படும் வழிகளை கண்டாரா அவர்? தன்னை ஏமாற்றியவர் தலைக்கவிழ போகும் உதயங்களை கண்டாரா அவர்? அல்லையேல்..!

  **************

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-16

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top