Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart 'I love you' series discussion

18 Feb 2018 19:48 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • “இன்னும் என்ன புதுசா பொய் சொல்லலாம்னு யோசிக்காத வெற்றி. அந்த பொண்ணு முகம் நீ சொன்னதை கேட்டு எப்படி வாடி போயிருக்கு”

    மீண்டும் அவள் பக்கம் பார்த்து உதட்டை ஏளனமாக வளைக்க போகிறான் என அவள் நினைக்க வெற்றி அவள் பக்கம் திரும்பவே இல்லை.

    “நான் சொல்றதை கேக்க கூடாதுன்னு முடிவு செய்து வச்சிருக்கீங்க மேல நான் என்ன பேசி என்ன ஆக போகுது. லவ் செய்றேன்னு சொன்னா இல்லை, இல்லைன்னு சொன்னீங்க. நேரா கொண்டு வந்து நிறுத்துறேன்னு சொன்னா வேண்டாம் உனக்கு பிடிச்ச பொண்ணை எனக்கு கட்டாயம் பிடிக்காதுன்னு சொன்னீங்க. இப்போ யாருன்னே தெரியாத ஒருத்தியை இவ தான் உன் காதலி, காதலின்னு சொல்லிட்டு இருக்கீங்க. நான் என்ன சொல்ல”

    “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்”

    “அப்போ சரி நான் போறேன்”

    ********************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-12

    Regards,
    Chillzee Team :-)
    18 Jun 2018 18:03 #14 by Nanthini

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 1102
  • Like received: 567
  • அழகாக பராமரிக்க பட்டிருந்த தோட்டத்தில் நடை பயின்றுக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

    மெத்தென்ற மெத்தையில் படுத்து போட்டிருந்த குட்டி தூக்கம் அவளுக்கு மிகுந்த உற்சாகத்தை அள்ளிக் கொடுத்திருந்தது.

    அவளுடைய வாழ்க்கையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கு இனியாவது முடிவு வருமா?

    உறவினர் என்று சொல்லிக் கொண்டு அந்த மாமா மகன் வந்தது முதல் அவளும் எத்தனை திடுக்கிடும் திருப்பங்களை சந்தித்து விட்டாள்.

    ஷ்யாம் சுந்தரும் அவனின் பேச்சும் நினைவுக்கு வந்து அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

    ச்சீ என்ன மாதிரியான மனிதர்கள்.

    அவர்கள் மட்டுமா இந்த வீட்டில் ஒருவன் இருக்கிறானே, வெற்றியாம் வெற்றி! பேரை பார்!

    ஆனால் மற்ற இருவருடன் வெற்றியையும் சேர்க்க அவளுக்கே மனசு வரவில்லை.

    சீக்கிரமே வேறு ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டு இங்கிருந்து போய் விட வேண்டும். ஆண்களே இல்லாத ஊரு எதுவாவது இருந்தால் அங்கே போகலாம்.

    **********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-13

    Rgds,
    Nanthini
    01 Jul 2018 19:04 #15 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • டொயோட்டா ஃபார்ச்சுனரின் டிவிடி ப்ளேயரில் பாடிக் கொண்டிருந்த frozen திரைப்படப் பாடலை சத்தமாக கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள் யசோதாவின் பிள்ளைகள் தீபக்கும், தீக்ஷாவும்.

    சந்திரிகா காதை பொத்திக் கொண்டு அமர்ந்திருக்க, சாயின் அம்மா அரசி நெற்றியை தேய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

    பெரியவர்கள் இருவரும் கோவிலுக்கு போகலாமென யசோதா, தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் கூட அழைத்து வந்திருந்தார்கள்.

    Idina Menzelன் குரலுக்கு போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பிள்ளைகளும் அலற, அரசி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்து, டிரைவரிடம்,

    “வேலு, இந்த பாட்டை நிறுத்திட்டு, கார் கதவை திறந்து வை. ஏ.சிலேயே இருந்து தலை வலிக்குது. யசுவும் அந்த பொண்ணும் இவ்வளவு நேரம் என்ன செய்றாங்க? கதவை திற” என ஆணையிட்டார்.

    டிரைவர் வேலுவும் தப்பிக்க வழி கிடைக்க காத்திருந்திருப்பார் போலும். துள்ளிக் குதித்து ஓடி வந்து அரசி, சந்திரிகா பக்கம் இருந்த கார் கதவை திறந்து வைத்தார்.

    *************************************************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-14

    Regards,
    Chillzee Team :-)
    13 Jul 2018 17:25 #16 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • அமுதினி பைத்தியம் பிடித்து அலைந்துக் கொண்டிருக்கும் வெற்றி, என் சுயமரியாதை முக்கியம் என முறுக்கி கொண்டு நிற்கும் தமிழ்ச்செல்வி, உடனே அமுதினியை கொண்டு வந்து நிறுத்தாவிட்டால் ஷ்யாமளாவை கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என மிரட்டும் இரண்டு அத்தைகள்!

    யசோதாவிற்கு தலை வலித்தது.

    என்னடா இது எனக்கு வந்த சோதனை என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

    தீபக்கும், தீக்ஷாவும் தூங்கி ரொம்ப நேரம் ஆகி இருந்தாலும், தன் பக்கத்தில் வந்து விளையாட்டாக சீண்டாமல், அந்த நாள் நடந்ததை பற்றி பேசாமல், அவளுக்கு பிடித்த பெண்கள் பத்திரிக்கையை கூட புரட்டாமல் இருந்த மனைவியை சந்தேகமாக பார்த்தான் சாய்.

    “யசு? ரொம்ப நேரமா யோசனையில இருக்க மாதிரி இருக்கு, கோட்டையை பிடிக்க தேர்தல்ல நிக்க போறீயா? நான் வேணா உனக்கு உதவட்டுமா?”

    “போங்க சாய் நீங்க வேற நேரம் காலம் இல்லாமல் விளையாடிட்டு இருக்கீங்க”

    **************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-15

    Regards,
    Chillzee Team :-)
    17 Jul 2018 11:25 #17 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • “அப்போ இவ தான் உன் காதலி அமுதினின்னு சொல்ற?”

    அரசியின் குரலில் கட்டாயம் கிண்டல் இருந்தது.

    உதடுகளை கடித்துக் கொண்ட தமிழ்ச்செல்வி “ராஜமாதா” சந்திரிகாவை பார்த்தாள். சந்திரிகா இவர்கள் யாரையும் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “ஆமா” – விட்டேற்றியாக பதில் சொன்னான் வெற்றி.

    “அப்போ தமிழ்ச்செல்வி யாரு?”

    “இவளோட சொந்த பேரு தமிழ்ச்செல்வி. நான் செல்லமா கூப்பிடுற பேரு அமுதினி.”

    “அதென்ன இப்படி ஒரு செல்ல பேரு?”

    “அதெல்லாம் இப்போ முக்கியமா?”

    “ஏன் நீ முதல்லேயே இவ தான் அமுதினின்னு சொல்லாம மறைச்ச?”

    **********************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-16

    Regards,
    Chillzee Team :-)
    18 Jul 2018 17:46 #18 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • தமிழ்ச்செல்வியின் நிலைமையை புரிந்துக் கொண்ட யசோதா அவளிடம் நெருங்கி நின்றாள். பெரியவர்களுடைய கண்ணை உறுத்தாத விதத்தில் நட்பு பாராட்டுபவளை போல தமிழ்ச்செல்வியின் தோளில் கையை வைத்தாள்.

    யசோதா அப்படி கைகளால் ஆதரவளித்ததால் மயங்கி விழாமல் இருந்தாள் தமிழ்ச்செல்வி.

    இல்லையென்றால் கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டு மயங்கி விழுந்த முதல் பெண் என்று வைரல் நியூசாக மாறி இருந்திருப்பாள்.

    தமிழ்ச்செல்வி ஒருவழியாக நேராக நிற்கவும், யசோதா சத்தமில்லாமல் அவளின் காதின் அருகே பேசினாள்.

    “பயப்படாதே தமிழ். உன்னை தாண்டி எதுவும் நடக்காது”

    யசோதாவின் பேச்சு தமிழ்ச்செல்விக்கு தெம்பைக் கொடுத்தது. நிமிர்ந்து நேராக நின்றாள்.

    “திடீர்னு கல்யாணம்னு சொல்லிட்டீங்க சின்னத்தை!” – யசோதா

    “என்னத்த திடீர்னு? காதலிச்சா கல்யாணம் செய்துக்கனும்னு தெரியாதா? இரண்டு பேரும் விரலை வச்சா கடிக்க தெரியாத சின்ன பாப்பா பாரு” – அரசி

    *****************************************************************

    இந்த அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-17

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top