Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

04 Nov 2017 07:50 #2 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களுக்குள்ளும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும், இருந்தும் அதை பெரிதாக்காமல் பிரச்சனைகளை முடித்துவிட தான் பார்ப்பார்கள்.. அதுவும் பெரியவர்களுக்கிடையே தான், சிறியவர்கள் என்றும் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர் இன்று வரையும், சிறுவயதில் கூடி விளையாடி மகிழ்ந்த அவர்கள், இப்போது படிப்பு, வேலை, திருமணம் என்ற கூடுதல் பொறுப்புகள் வந்திருந்தாலும், இன்னும் அவர்கள் ஒன்று சேர்ந்தால், கொண்டாட்டமும் கும்மாளமும் தான்..

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-01

    Regards,
    Chillzee Team :-)
    01 Dec 2017 19:11 #3 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • அதிலும் இன்று அவர் ஆசைப்படி மகிழ்வேந்தனுக்கும் அருள்மொழிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதில் இன்னும் பூரிப்போடு தெரிந்தார்.. அவர்கள் பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வரை பெரியவர்கள் யார் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கவில்லை.. முத்துப் பாட்டி தான் அந்த யோசனையை முன் மொழிந்தார்.. அவர் மனதில் ஆரம்பத்திலேயெ இந்த எண்ணம் இருந்திருக்கிறது.. இருந்தும் இத்தனை வருடமாக பொறுமை காத்தவர், சில நாட்களுக்கு முன்பு தான் அதை வெளியில் சொன்னார்.. பின் அனைவரும் பேசி நல்ல முடிவு எடுக்க இருந்த நிலையில், சில சங்கடங்களால் என்னன்னவோ நடக்கவிருந்தது.. அதெல்லாம் பாட்டியின் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை என்றாலும் அமைதி காத்தவர், இன்று அவையெல்லாம் மீறி தன் பேரன் பேத்திக்கே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அகமகிழ்ந்து போனார்..

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-02

    Regards,
    Chillzee Team :-)
    17 Dec 2017 06:06 #4 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • “ஹே மச்சி என்னடி சொல்ற..?? இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு வந்து மகி அண்ணாக்கிட்ட பேசனும்னு சொல்ற..?? இன்னும் கொஞ்ச நேரத்துல பங்ஷன்க்கு எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.. இப்போ போய் நீங்க பேசறது சரியா இருக்குமா? நம்ம வீட்டு ஆளுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க தான்.. ஆனா வர்ற ஆளுங்க ஏதாச்சும் சொல்வாங்கன்னு இதுக்கு தடை போடுவாங்களே!!”

    “எனக்கும் அந்த யோசனை தான் மச்சி.. இல்லன்னா மகிக்கிட்ட பேச எனக்கு என்ன தயக்கம் சொல்லு.. இப்போ நான் வெளிய வரக் கூடாதுன்னு அம்மாவும் பாட்டியும் சொல்வாங்க.. அதான் உன்னோட ஹெல்ப் கேக்கறேன்..”

    “பேசாம அண்ணாவோட போன்ல பேசிடேன்..”

    “இல்ல நான் நேர்ல தான் பேசனும்..”

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-03

    Regards,
    Chillzee Team :-)
    05 Jan 2018 18:32 #5 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • அலைபேசியின் அழைப்பை மகிழ் ஏற்றதும் சுடர் மகிழ்ச்சியடைந்தாள்.. “ஹலோ மகிழ்.. மகிழ்..மகிழ்” என்றதற்கு மேல் அவளுக்கு பேச்சு வரவில்லை..

    மகியோ, அவள் குரல் கேட்டும் அமைதியாக இருந்தான்.. அருள்மொழிக்கோ சுடரின் குரலை கேட்டதும், மறக்க நினைத்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.. அவளின் குரலை கூட கேட்க பிடிக்கவில்லை, இருந்தும் அவள் இப்போது எதற்காக மகிக்கு போன் செய்தாள், என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டி, சுடர் மேல் எழும்பிய கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

    அலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டும், அவள் பேசிய பின்னும் கூட எதிர்முனையிலிருந்து பேச்சு வராததால் குழம்பிய சுடர், “ஹலோ மகிழ் லைன்ல தான இருக்க” என்றுக் கேட்டாள்.

    அப்போதும் மகி அமைதியாக இருக்க, பேசு என்பது போல் அருள் கண்களை அசைக்க, “எதுக்க போன் பண்ண?” என்று குரலில் கடினத்தை காட்டி பேசினான்.

    **********************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-04

    Regards,
    Chillzee Team :-)
    02 Feb 2018 19:48 #6 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8181
  • Like received: 2980
  • “புவி இங்கப் பாருடா.. சுடர் லண்டனுக்கெல்லாம் போகமாட்டா.. அவளை நான் போக விடமாட்டேன்.. கண்டிப்பா உன்னோட அக்கா இங்கத் தான் இருப்பா.. நீ விருப்பப்பட்டதெல்லாம் செய்யலாம்.. உங்க அக்காவை நீ பிரியவே வேண்டாம்”

    “நிஜமா தான் சொல்றிங்களா மாமா?? அக்காவை கூட்டிட்டு வந்துருவீங்களா?”

    “கண்டிப்பா நான் கூட்டிட்டு வருவேன்.. நீ கவலைப்படாதே” என்றவன், அங்கிருந்து உடனே தன் அத்தையை பார்க்கச் சென்றான்.

    பெண்களும் மேற்பார்வை பார்க்க வேண்டிய வேலையெல்லாம் முடித்ததால், வரவேற்பறையில் தான் இருந்தார்கள்.. மகியும் அங்கே போய் அத்தையிடம் எப்படி பேசுவது என்று யோசித்தப்படி நின்றிருந்தான்.. ஆனால் சுடர் லண்டனுக்கு செல்லப்போவது நினைவுக்கும் வந்ததும், உடனே.. “எழில் அத்தை” என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டான்.

    *****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-05

    Regards,
    Chillzee Team :-)
    03 Feb 2018 09:47 #7 by AdharvJo

  • Platinum Boarder
  • Platinum Boarder

  • Posts: 518
  • Like received: 472
  • Chill chithra ma'am eppodhum ninga engala hot pan LA nikka vaipinga iniki naa hot SPOT LA pottuteno! sorry :( if I was offending.. Take your sweet time no problem at all...... We can always wait :)

    Thank you and happy Saturday day :)
    The following user(s) Liked this message: Chithra V
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top