Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

30 Jun 2018 17:10 #19 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • அன்று நாள் முழுதும் சுடர் மகி இருவரும் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிய அந்த நிமிடத்திலிருந்து சுடர் எதற்கெடுத்தாலும் மகி மீது எரிந்து விழுந்தாள். இதற்கும் அவன் வேண்டும்.. அவன் காதல் வேண்டும்.. என்று நினைத்தாலும், அவன் அவளை திருமணம் செய்த முறை அவளுக்கு பிடிக்கவில்லை. அதுவே அவளது கோபத்திற்கு காரணமாக இருந்தது.

    அது புரிந்ததால் அவளை எப்படியும் மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு வர மகி முயற்சித்துக் கொண்டிருந்தான். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தும் இந்நேரத்தில், அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். இன்று ஓரளவிற்கு அவன் எதிர்பார்த்தது நடந்தது. சமையல் கற்றுக் கொள்ளும் ஆசையில் அவனோடு முன் போல் அவள் கொஞ்சம் சகஜமாக பழகினாள்.

    ஆனந்தியை பார்த்துவிட்டு வந்த எழில் அன்று மாலை தான் சுடரிடம் அவர் இங்கு வந்ததை பற்றியும், அவரது நோய் குறித்தும் பேசினாள். அந்த நேரம் மகி கொஞ்சம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றான். அவளை தனியே விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், ஹவுஸ் ஓனரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றிருந்தான். சிறிது நேரம் அவளோடு இருந்த அந்த பெண்மணியோ, கொஞ்சம் வேலை இருப்பதாக அவளிடம் சொல்லிவிட்டு சென்றவர், தனியாக இருக்க ஒரு மாதிரி இருந்தால், வீட்டுக்கு வந்து இரு என்று அழைத்தார்.

    *******************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-16

    Regards,
    Chillzee Team :-)
    07 Jul 2018 11:38 #20 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • காலையில் சுடர் ஆனந்தியை பார்க்க தயாராகிக் கொண்டிருந்தாள். நேற்று மகி அப்படி பேசியதால் ஆனந்தியை பற்றி எதுவும் அவனிடம் கூறவில்லை. அவன் கோபமாக வெளியில் சென்றதும் தான் காரணத்தை சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. சரி திரும்ப வந்ததும் சொல்லலாம் என்று நினைத்து படுத்தவள் உறங்கியிருந்தாள்.

    இப்போது கிளம்பும் போது அவனை மூட்அவுட் செய்ய வேண்டாமென்று நினைத்தவள், ஆனந்தியை பார்க்க தான் செல்கிறேன் என்று சொல்ல முடிவெடுத்தாள். ஆனால் அதற்கு முன்னரே மகி அவளிடம்,

    “சுடர் தனியா போக வேண்டாம்.. நான் உன்னை கூட்டிட்டுப் போறேன்..” என்று கூறினான்.

    அவளோ ஆச்சர்யத்தோடு, “நான் அமுதன் வீட்டுக்கு போறேன் ஞாபகம் இருக்கா?” என்றுக் கேட்டாள்.

    “ஞாபகம் இருக்கு.. என்ன இருந்தாலும் அமுதன் உன்னோட ப்ரண்ட்.. அது மட்டுமில்லாம மன்னிக்கிறது தான் மனுஷ குணம்.. சும்மா அவன் மேல கோபத்தை பிடிச்சு வச்சிட்டு இருக்கறதால என்ன ஆகப் போகுது.. இப்போ நீ அமுதனை மட்டும் பார்க்கப் போகல.. அவங்க அம்மாவையும் பார்க்கப் போற.. அவங்க உடம்பு சரியில்லாம இருக்க இந்த நேரத்துல, நீ அமுதன் கூட பேசாம இருந்தா அதுக்கும் அவங்க கஷ்டப்படுவாங்க.. அதனால அவன் மேல இருக்க உன்னோட கோபம் குறைஞ்சதும் நல்லதுக்கு தான்..” என்றான்.

    ****************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-17

    Regards,
    Chillzee Team :-)
    14 Jul 2018 15:31 #21 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • அமுதவாணனின் திடிர் செயலில் முதலில் ஒன்றும் புரியாமல் அப்படியே சில நொடிகள் அருள்மொழி அமைதியாக நின்றிருந்தாள். அதற்குள் “ஆன்ட்டி..” என்ற குரலில் தான் அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்து அடுத்து உடனே அவன் பிடித்திருந்த கையை அவனிடம் இருந்து இழுத்துக் கொண்டாள். அடுத்து அவள் யார் வந்திருப்பது என்று வாசலை பார்க்க, அங்கே நின்றிருந்த சுடரை பார்த்ததும் அவள் மனதில் ஆத்திரம் எழுந்தது.

    அருள் கையை இழுத்ததும் தான், அமுதனுக்கே அவன் என்ன செய்து வைத்திருக்கிறான் என்பது விளங்கியது. அவளது கையில் ரத்தத்தை பார்த்ததும் அவன் அவனையே மறந்து பதட்டத்தில் அப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டான். இதில் அவனும் வாசலில் வரும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்தவளை பார்த்து, உடனே அருள்மொழியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த கோபத்தில் அவள் சுடரை எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று மனம் பதறியது. ஆனால் அவளோ சுடரை எதுவும் சொல்லவில்லை. அதற்கு பதில் அவனிடம் ஒட்டுமொத்த கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டினாள்.

    *******************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-18

    Regards,
    Chillzee Team :-)
    21 Jul 2018 11:24 #22 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • மகி ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது மாலை மறைந்து இருட்ட ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குள்ளும் இருள் சூழ்ந்திருந்தது. கேட்டை திறந்துக் கொண்டு அவன் வரும்போதே எதிரில் வந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி, “உன்னோட வெளிய கிளம்பின சுடர் மதியமே வீட்டுக்கு வந்துட்டா.. அதுல இருந்து வீட்லயே அடைஞ்சு கிடக்குறா.. நான் கொஞ்ச நேரம் போய் பேசிட்டிருக்கலாம்னு நினைச்சு போனப்பவும், நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன் ஆன்ட்டி, அதனால தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லிட்டா.. நானும் வந்துட்டேன், ஆனா மதியம் சமைக்கவுமில்ல.. சாப்பிட்டாளான்னும் தெரியல.. இப்பவும் இதுவரைக்கும் எழுந்தது போல தெரியல.. என்னன்னு பாருப்பா..” என்று சொன்னவர், வெளியில் கிளம்பிச் சென்றார்.

    அதற்கேற்றார் போல் வீட்டில் விளக்குகள் போடாமலிருக்கவும் ஏதோ பிரச்சனை என்று மகியால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. சமையலறையில் சென்று பார்த்தால் எதுவும் சமையல் செய்ததற்கு அறிகுறியே இல்லை. சுடர் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். உள்ளே சென்றனவனோ, “சுடர் என்னாச்சு.. ஏன் இப்போ மூட் அப்சட்.. மதியம் சாப்பிட்டியா? ஏதாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொன்னா தானே தெரியும்.. இப்படியே ரூம்க்குள்ள அடைஞ்சிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா? உன்னை டென்ஷன் படுத்தினவங்க யாரு?” என்று சமாதானமாக பேசிப் பார்த்தான்.

    ***************************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-19

    Regards,
    Chillzee Team :-)
    28 Jul 2018 18:32 #23 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • சில மாதங்களுக்கு முன்..

    அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை.. அனைவருக்கும் அது விடுமுறை தினம் என்பதால், புகழேந்தியின் வீடு ஏதோ விஷேஷம் தினம் போல் இருந்தது. எழில் தன் இரண்டு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டாள். மலர்க்கொடியும் மணிமொழியும் கூட பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் மாலையில் தான் ரெஸ்ட்டாரன்ட் திறக்கும் என்பதால் மகியும் அறிவும் கூட வீட்டில் தான் இருந்தனர். அருள்மொழிக்கும் அன்று கல்லூரி விடுமுறை..

    பூங்கொடி, கலை, எழில் மூவரும் சமையல் வேலையில் மூழ்கியிருக்க, சிறியவர்கள் அனைவரும் பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். முத்துப் பாட்டியும், புகழேந்தியும் மலர்க்கொடியின் மகனை மடியில் வைத்துக் கொண்டு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்திருந்தனர். இப்படியே மதியம் பொழுது கழிந்து பின் அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிட்டனர். பின் அனைவரும் வரவேற்பறையில் கூடி இருந்தனர். சிறியவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் ஒரு புது திரைப்படத்தை பார்க்க அமர்ந்திருக்க, பெரியவர்களும் பேசியப்படி தொலைக்காட்சியை பார்த்திருந்தனர். காலையில் வந்ததிலிருந்தே எழில் ஏதோ யோசனையாகவே இருந்தார். இதை கவனித்த பூங்கொடி..

    *********************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-20

    Regards,
    Chillzee Team :-)
    04 Aug 2018 18:06 #24 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8150
  • Like received: 2978
  • எப்படியும் அப்பா தங்களோடு வந்துவிடுவார்.. தங்களோடு தான் இருப்பார் என்ற நம்பிக்கையோடு தன் அன்னையுடன் லண்டனுக்கு சென்ற சுடரொளிக்கு.. அவர் எப்போதும் இங்கு வரப்போவதில்லை, வரவும் முடியாது என்பதை புரிந்துக் கொள்ள கொஞ்ச நாள் ஆனது. தன் அன்னை புதிதாக ஒருவரை “இவர் தான் உன் அப்பா” என்று அறிமுகப்படுத்திய போது அந்த உறவை அப்போதைக்கு சுடரொளியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்போதும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையும் வந்தது.

    தந்தை தான் உடன் இல்லை. ஒருவேளை தாயின் அரவணைப்பு இருந்திருந்தாலாவது அவள் தன் தந்தையை காலப்போக்கில் மறந்திருப்பாளோ.. ஆனால் வெண்மதிக்கு தன் புதிய கணவனை எப்போதும் தன் கையைவிட்டு அவன் போகாதபடி வைத்துக் கொள்வதிலேயே காலம் போய்விட்டது. என்ன இருந்தாலும் அவள் மூன்றாவது மனைவி தானே.. அவளுக்கு பின் தன் கணவனின் பார்வை வேறொரு பெண் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். செங்குட்டுவனுக்கு அவள் மேல் இருக்கும் மயக்கம் எப்போதும் தீராதப்படி பார்த்துக் கொள்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. இதில் மகளது பொறுப்பை தன் தாயிடம் தான் ஒப்படைத்து இருந்தாள்.

    *****************************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-21

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top